• Please use an working Email account to verify your memebership in the forum

போத்து நடவு முறை

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

#போத்துனா_என்ன?* என்று என்னிடம் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கேட்டிருந்தார்.(வளர்ந்து வரும் தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை)அவருடைய அந்த கேள்வி..
இந்த விளக்கமான பதிவை பதிவிட என்னைத் தூண்டியது.

#போத்து_நடவு_முறை_என்றால்_என்ன?*

நல்ல ஓட்டமான(வாட்டமான) மரக்கிளைகளை ஏழு அடி உயத்திற்கு குறையாமல் வெட்டி பச்சை காய்ந்து விடாமல் பாதுகாப்பாக நட்டு வளர்க்கும் எளிய முறைக்கு *போத்து நடவு முறை* என்று பெயர்.

#போத்து_நடவு_முறையில்_என்னென்ன #மரங்களை_வளர்க்கலாம்?*

இந்த முறையில் ஆலம்,அரசு,ஒதியன்,பூவரசு,ஆற்றுப்பூவரசு,கல்யாணமுருங்கை,வாதநாராயணி(வாத மடக்கி) போன்ற மரங்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.கிளுவை,கிளேரிசிடியா போன்றவை உயிர் வேலி அமைப்பதற்கு இம்முறையில் நடப்படும் குறு மரங்களாகும்.

#போத்துகள்_நடும்_முறை

இரண்டு முறையில் இந்த போத்துகளை நடவு செய்யலாம்.
ஒன்று சாக்கு பையில் வளமான மண்ணை நிரப்பி அதை இரண்டு மூன்று நாட்கள் ஈரமாக வைத்திருந்து அதில் கிளையினை நட்டு சூரிய ஒளி ஓரளவு படும் இடத்தில் வைத்து நன்கு துளிர் விட்டு வளர்ந்த பிறகு வேறோரு இடத்தில் குழி வெட்டி அதில் நடவு செய்யலாம்.நட்ட பிறகு போத்துகளை ஆட்டி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.வளர்ந்த பிறகு இதை வேறொரு இடத்தில் நடவு செய்யும்போதும் கவனமாக நடவு செய்ய வேண்டும்.நட்ட கிளை ஆடிவிட்டால் திரும்ப முளைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.

இரண்டாவது முறை நேரடியாக போத்துகளை நடவு செய்வது.இம்முறையில் குளம்,ஏரி,கரைகளில் இம்முறையில் மரங்களை வளர்க்கலாம்.மேலே குறிப்பிட்டது போல் மரங்களில் இருந்து கிளைகளை வெட்டிக் கொள்ள வேண்டும்.வெட்டுப்பட்ட இடங்களில் சாணம் வைத்து பூசி விட வேண்டும்.மண்ணுக்கும் ஊன்றப்படும் கிளைக்கும் மண்ணில் நெருக்கம் இருப்பது போல் பாரையால் ஒரு அடி ஆழத்திற்கு நன்கு ஆட்டி விட்டு புதைக்க வேண்டும்.நட்ட போத்துகளை யாரும் ஆட்டி விடாமல் சுற்றி சீமைக்கருவேல முட்களை வெட்டி வைத்து கட்டி விடலாம்.

#எந்தெந்த_காலங்களில்_இம்முறையில் #நடலாம்?

சாக்கு பையில் நட்டு வளர்க்கும் முறையில் மழைக்காலங்களுக்கு முன்பாகவே நட்டு வீட்டில் வளர்த்து மழைக்காலங்களின் போது நடவு செய்யலாம்.நேரிடையாக நடவு செய்யும் முறையில் அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் போன்ற மழைக்காலங்களில் நடவு செய்யலாம்.பல வருடங்களாக நடைமுறையில் இருந்த இம்முறை பருவமழை பொய்த்து போனதால் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போனது.இப்போது ஆறு மற்றும் குளக்கரைகளில் இருக்கும் பெரும்பாலான மரங்கள் இந்த முறையில் வளர்க்கப்பட்டதே ஆகும்.தற்போது மழைக்காலம் என்பதால் இது இமுமுறையில் மரம் வளர்க்க தகுந்த காலமாகும்.

#இம்முறையின்_சிறப்பம்சங்கள்

இம்முறையில் மரம் வளர்ப்பதில் செலவு குறைவு.விரைவாக மரங்கள் வளர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகளில் மரங்களாகி விடும்.இதற்காக பெரிய அளவில் நேரம் செலவிட தேவையில்லை.ஓய்வு நேரங்களில் ஒவ்வொரு போத்தாக நட்டு விடலாம்.மழைக்காலம் என்பதால் நீர் ஊற்றி பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை.தேவைப்படும் நேரத்தில் நீர் ஊற்றலாம்.ஆலம் அரசு போன்ற பறவைகளை கவரும் பழ மரங்களின் போத்துகளை நடவு செய்வதால் மரங்கள் வளர்ந்து எதிர்காலங்களில் பறவைகளின் எச்சங்கள் மூலம் நிறைய மரங்கள் உருவாவதற்கு வாய்ப்பாக அமையும்.

*எளிய முறையில் மரங்களை வளர்ப்போம்! என்றும் இயற்கை காப்போம்!*
0F9EF1B1-BF9F-457D-86F4-135BE642AF51.jpeg0F9EF1B1-BF9F-457D-86F4-135BE642AF51.jpeg
 

Suri

Administrator
Staff member
Administrator
Messages
290
Points
63

Reputation:

Kaalam Kaalam ah Enga ooorla ipdi thana Murunga maram, poovarasu Maram la Nadavu pandrom ... Epdi theriyama
 
Top