• Please use an working Email account to verify your memebership in the forum

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சம்பா!!!

Messages
27
Points
13

Reputation:

இணையத்தில் இணைந்த இனியவனே..

நட்புக்குள் பொய் இல்லை...


பொய்யோடு இருந்தால்

அது நட்பே இல்லை....

நட்பை தந்து நட்பினை

உணர்த்தியவன் நீ ..


வேஷமிகு உலகில்

உள்ளம் தொடும் பாசத்தை

பரிவோடு தந்தவன் நீ...


தனிமையோடு உறவாடியிருந்தேன்..

நட்பாய் நீ வந்தாய்

கவலைகள் களைந்து

தனிமை மறந்தேன்...


பாசத்தை காட்டினாய்

பரிவாய் பேசினாய்

குறும்பாய் சிரித்தாய்

பகட்டில்லாமல் பழகினாய்

பாசாங்கு இல்லாத

அன்பினை பரிசளித்தாய்..

உனக்கான நல்லநட்புக்களை

எனக்காக பகிர்ந்தளித்தாய்…

அளவில்லா சந்தோசத்தை

உன் அன்பால் உணர்ந்தேன்…


மாறும் உலகில் மாறாத

உறவாய் இருப்பவனே

தோல்வியில் மரித்தேன்

நட்பு தந்து உயிர் தந்தாய்…


விட்டு கொடுத்து போவதுதான்

நட்பின் இலக்கணமாம்

உன்னை விட்டு இலக்கணம்

படிக்க விரும்பவில்லை..


உனக்கான உறவுகள் ஆயிரமிருபினும்

எனக்கான உறவாய்

என்னுயிர் தோழனாய்

என்றென்றும் நீ மட்டும் போதும்....

நட்பெனும் சொல் அழிந்தே போயினும்

நம் நட்பு அழியாது

நான் அழியும் வரை...


இன்றுபோல என்றும்

அன்பான நட்புகளோடு

நிறைவாய் வாழ்ந்திட

வாழ்த்துகிறேன்!!!

மனம்நிறைந்த


பிறந்தநாள் வாழ்த்துக்கள் சம்பா???
 
Last edited:
Top