• Please use an working Email account to verify your memebership in the forum

பனை மட்டை

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

View attachment பனை மட்டையால் ஆன வேலி????

பனையிலிருந்து பெறப்படும் நுங்கும், பனங்கற்கண்டும் மட்டுமே இன்றைக்கு பெரும்பாலும் அதிகம் பயன்பாட்டில் இருக்கின்றன. பனை ஓலை, மட்டை, பத்தல் என்ற மூன்ற பகுதிகளை கொண்டது. பத்தல் என்பது மட்டையின் அடிப்பகுதியில் கருப்பாக இருக்கும். அந்த காலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள ஏழ்மையான கிராமவாசிகள் பத்தல்களை வெட்டிக் காலுக்குச் செருப்பாக அணிந்து கொள்வார்களாம். மேல் வாருக்குப் பனை நாரைப் பொருத்திக் கொள்வார்களாம். இதை அணிந்து கொண்டு செல்லும்பொழுது காலுக்கு மிருதுவாக இருப்பதுடன் நீண்ட நாட்கள் உழைக்கக்கூடியதாக இருக்கும். சாலைப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பத்தல்களாலான செருப்புகளை அணிவதுண்டு. அடிப்பகுதி அதிகமாகத் தேய்ந்துவிட்டால் வேறு இரண்டு பத்தல்களை வெட்டிக் கால் செருப்புகளை செய்து கொள்வர். வளரும் பருவத்திலுள்ள வடலி பனையின் பத்தல் களில் அடிப்பாகத்தில் கருப்பாக கம்பி போன்ற உறுதியுடன் இருக்கும் பகுதிக்கு தும்பு என்று பெயர். இந்த தும்பியிலிருந்துதான் இயந்திரங்கள், கப்பல்களை சுத்தப்படுத்தும் துடைப்பான்களை செய்கிறார்கள். பனை ஓலைச்சுவடிகள்தான் நமது பொக்கிஷங்கள். அவற்றை எப்படி தயாரித்தார்கள் என்பது வியப்பான விஷயமே.

#இலங்கை
 
R

Ravanan

Guest
Panai Marathula Ethumey Waste illa. Panai Kilangu, Panai Kottaikulla thengai, Pathani, Kallu, Nongu. Panam Palam, Pana olai, Panai Mara thandu Sattama use panalam ipdi Panai Marathula ellamey Use Agum. But, Commercial ah Ethayum Use Pana mudiyathunu British Vitutu pona orey Porul ithu thaan.
 
Top