• Please use an working Email account to verify your memebership in the forum

நீர்பிடிப்பு_குழிகள்

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

#நீர்பிடிப்பு_குழிகள்...

உங்களுக்கு கிணற்றில் நீர் இல்லை , நீர்பிடிப்பு பகுதிகள் இல்லை எனில் நீங்கள் உச்களது பூமியை சுற்றி இப்படி குழி எடுத்து விடுங்கள். கண்டிப்பாக மழைநீர் அறுவடை செய்து பூமியில் இறங்கி நீர் மேலே வரும்.

கீழேயுள்ள இந்தபடம் சுத்தமாக குடிக்ககூட நீர் இல்லை என்று பீகாரில் உள்ள கயா மாவட்டத்தில் இப்படி ஊர் மூழுவதும் 1650 குழியை தோண்டினார்கள். என்ன ஆச்சரியம் தற்போது அங்கே 17வது அடியில் இனிப்பானமழை நீர் பூமியில் கிடைகக்கிறது. இந்தகுழிகள் உப்புநீரின் தன்மையைக்கூட மாற்றம் செய்ய கூடியது என்பது சமூக ஆர்வலர்கள் கருத்தாகும்...

பல்லடம், திருப்பூர், தாராபுரம், பொங்கலூர், தர்மபுரி சேலம், மதுரை, ராம்நாடு, வேலூர், அன்னூர் புளியம்பட்டி, சேவூர் போன்ற பகுதியிலும் நொய்யல், காவிரி, தென்பென்னை, பாலாறு போன்ற ஆற்றுபகுதில் இருபுறமும் இரண்டு ஐந்து கிலோ மீட்டருக்கு தொடர்ச்சியாக இந்ததிட்டத்தை அமல்படுத்தினால் நதிகளில் நீர் தானாக ஓடும்.

ஒவ்வொரு கிராமத்திலும் நூறுநாள் வேலை வாய்ப்பில் இத்திட்டத்தை செயல்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு ஐம்பது குழிகள் கட்டாயம் என்று நடைமுறை படுத்தலாம்.

நூறுநாள் வேலை ஆள் ஒருவர் மாதம் ஐந்துகுழி எடுத்தால் போதும்......

100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், இந்த பணியினை மழைக்காலங்களில் முன்னெடுத்து செய்தால் நீரை சேமிப்பதோடு, நிலத்தடி நீரை பெருக்கலாமே???

#வயலும்வரப்பும்..View attachment
 
Top