Phoenix
Well-known member
- Messages
- 976
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
நீயும் நானும்
பகலில் நீ பறப்பதற்காக
உன் பாதையில் வரும்
மேகங்கள் முதலான
இடர்பாடுகளைக் களையவும்
இருளில் நீ நடப்பதற்காக
உன் சாலைக்கு ஒளியூட்டும்
நிலவும் விண்மீனும்
உலவித் திரியவும்
எப்போதும் பிரியாமல்
கண்ணை இமை காப்பதைப் போல
உன்னை எனக்குள் அடைகாத்துக்கொள்ளவும்
நானே உன் வானமாகிறேன்!
நீலம் மஞ்சள் சிவப்பு என
என் முகம் காட்டும்
வர்ணஜாலங்கள் அத்தனைக்கும்
நீயே காரணமாகின்றாய்!
பகலில் நீ பறப்பதற்காக
உன் பாதையில் வரும்
மேகங்கள் முதலான
இடர்பாடுகளைக் களையவும்
இருளில் நீ நடப்பதற்காக
உன் சாலைக்கு ஒளியூட்டும்
நிலவும் விண்மீனும்
உலவித் திரியவும்
எப்போதும் பிரியாமல்
கண்ணை இமை காப்பதைப் போல
உன்னை எனக்குள் அடைகாத்துக்கொள்ளவும்
நானே உன் வானமாகிறேன்!
நீலம் மஞ்சள் சிவப்பு என
என் முகம் காட்டும்
வர்ணஜாலங்கள் அத்தனைக்கும்
நீயே காரணமாகின்றாய்!