Phoenix
Well-known member
- Messages
- 966
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
நிழலானவன்!!!
சாளரம் வழியே காயும்
வெண்மதி கூட
உன் முகமாகவே
தெரிகின்றதே!
நிசப்தங்களிலும்
என் செவிப்பறைகளில்
உன் குரல் மட்டும்
மோதுகின்றதே!
குளிரும் தென்றல்
தளிர் மேனியை
தகிக்கும் காரணம் - அதில்
கலந்திருக்கும் உன் சுவாசம்
அன்றி வேறென்ன?
இருளில் நிழல்
புறக்கண்களுக்குத்தான்
புலப்படாதே ஒழிய
அகக்கண்களுக்கு அல்ல!
நீ என் நிழலானவன் அல்லவா?
என்னை நீங்கி
எங்கு போவாய்?
உன்னை நீங்கினால்
யான்...
என்னாகுவேன்?
சாளரம் வழியே காயும்
வெண்மதி கூட
உன் முகமாகவே
தெரிகின்றதே!
நிசப்தங்களிலும்
என் செவிப்பறைகளில்
உன் குரல் மட்டும்
மோதுகின்றதே!
குளிரும் தென்றல்
தளிர் மேனியை
தகிக்கும் காரணம் - அதில்
கலந்திருக்கும் உன் சுவாசம்
அன்றி வேறென்ன?
இருளில் நிழல்
புறக்கண்களுக்குத்தான்
புலப்படாதே ஒழிய
அகக்கண்களுக்கு அல்ல!
நீ என் நிழலானவன் அல்லவா?
என்னை நீங்கி
எங்கு போவாய்?
உன்னை நீங்கினால்
யான்...
என்னாகுவேன்?