• Please use an working Email account to verify your memebership in the forum

நாட்டை நாசமாக்கும் இலவசமும், வாக்குக்கு பணமும்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

இலவசம்.. என் பணம் எனக்கு தானே வருகிறது.. இதில் என்ன தவறு இருக்கிறது.. என் வரி பணத்தில் தானே இலவசம் தருகிறார்கள்.. கொள்ளை அடித்த பணத்தில் தானே வாக்குக்கு பணம் தருகிறார்கள்.. நன் என்ன திருடினேனா.. அவர்களாக தானே தருகிறார்கள்.. இப்படி எண்ணுவோர்கள் பலர்.. ஆனால் சிந்தித்தால் இவற்றால் என்ன பயன்? ஒருநாள் இன்பம்.. அவ்வளவே..

இலவசங்கள் எல்லாம் தவறு இல்லை. கல்வி, மருத்துவம்,அரசு விநியோகிக்கும் குடிநீர் இவை எல்லாம் அத்யாவசியம். இவற்றை அரசு இலவசமாக தரவில்லை என்றால் தான் தவறு. ஆனால் மற்றவை? இலவசங்களை இரண்டாகப் பிரிக்கலாம். பொருளாதாரத்தில் பங்குள்ளவை, பங்கில்லாதவை.நம் வாழ்வில் நம்முடைய பொருளாதாரத்தை உயர்த்தி நம்மை உற்பத்தியில் பங்கு பெற வைக்கும் இலவசங்கள் ஏற்கக் கூடியவையே. அவை அல்லாமல் நம் தரத்தை உயர்த்துகிறோம் என்ற பெயரில் அரசு கொடுக்கும் ஆடம்பர பொருள் அனைத்தும் நம்மை மயக்கி நாசமாக்கும் திட்டங்களே. நுகர்வு கலாச்சாரத்தில் இந்திய சந்தையில் வந்து குவிந்துள்ள பெரு முதலாளிகளின் விற்பன்னராக அவர்களின் பொருள்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியையே அரசு இந்த இலவசங்கள் மூலம் செய்கிறது. உன்னிடம் வாங்கும் சக்தியே இல்லாமல் ஒரு பொருளை வாங்க முடியுமா? முடியும். கடன் வாங்கி வாங்க முடியும். அதை தான் அரசு செய்கிறது. உன்னிடம் பணம் இல்லை என்றால் நீ தொலைக்காட்சிபெட்டி வாங்க போவதில்லை. கடன் வாங்கி வாங்க வேண்டாம் என்று நினைக்கலாம். ஆனால் அரசோ இலவசம் என்ற பெயரில் பொருள்களை கொடுத்து கடன் கணக்காக எழுதி செல்கிறது. இன்னும் எளிமையாக சொன்னால் சம்பளத்தை முழுமையாக மனைவியிடம் கொடுத்துவிட்டு தேனீர் அருந்த சென்ற கணவன் திரும்பி வந்து பார்த்தபோது தொலைக்காட்சி பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் எல்லாம் இருந்து மளிகை பொருள் வாங்க காசு இல்லாமல் இருந்தால் அந்த கணவன் நிலை எப்படி இருக்குமோ அப்படி தான் இன்று இலவசத்தால் மக்கள் நிலை. இவ்வாறான செயல்கள் மூலம் பெருமுதலாளிகளின் லாப நோக்கிற்காக நம்மை ஆடம்பர பொருள்களை அதிகம் நுகர உந்துகிறார்கள். ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த செல்லிடைபேசி (மொபைல்) இன்று அத்யாவசியம் ஆனது எவ்வாறு? 10000 ரூ மாதம் வருமானம் வாங்குவோர் கூட 10000ரூ மொபைல் பயன்படுத்துவது எதற்கு? நம்முடைய இன்னொரு கையாக மொபைல் மாறிப்போனது எதனால்? இதற்கும் இந்த நுகர்வு கலாசர சூழ்ச்சிக்கும் தொடர்பு இல்லை என்று சொல்ல முடியுமா? இப்படிதான் தொடங்கும் இலவசம்.. இப்படி தான் முடியும் இலவசம். பயன் உண்டா இல்லையா என்பதை தாண்டி அது பயன்தரும் என்னும் மூளை சலவை செய்யும். நம்மை நம்மளையே சமாதானப்படுத்த வைக்கும். நம் பொருளாதாரம் பற்றி சிந்திக்க விடாமல் நம்மை நுகர்வோர் கலாசாரத்திலேயே நிலை நிறுத்தி வைக்கும்.

வாக்குக்கு பணம் கொடுக்கும் சூழ்ச்சி வெறும் வெற்றி நோக்கம் மட்டும் அல்ல. அதன் பின்னால் ஒரு அமைப்பை சிதைக்கும் நோக்கமும் உண்டு. முதலில் நம்மை குற்ற உணர்வுக்கு தள்ளி நம் மனச்சிதைவை ஏற்படுத்துவார்கள். அடுத்து அதை சமூக குற்றமாக மாற்றுவார்கள். பணம் பெற்ற நாம் கேள்வி கேட்க்கும் தகுதியை இழந்ததாய் நம்மை குற்றப்படுத்தி தங்களை புனிதப் படுத்திக்கொள்வார்கள். வாக்குக்கு பணம் கொடுப்பது சமூக குற்றமாக மாறினால் அமைப்பை சிதைக்கும். அதன் பின் அமைப்பின் மாற்றம் தேவையாகும். உதாரணமாக வரதட்சணை ஒரு குற்றமே.. ஆனால் அது இன்று சமூக குற்றமாக மாறிப்போனது. அதனால் இன்று நடப்பது என்ன? வரதட்சணை வாங்காதவனை ஏளனம் செய்யும் சூழலும், வாங்கியவன் தான் அதிகம் வாங்கியதாக பெருமைப்படும் நிலையும் உருவாகியுள்ளது. இதுபோல் ஒரு சமூக குற்றமாக மாற்றும் முயற்சிகளே இது போன்ற இலவசங்களும் வாக்குக்கு பண விநியோகமும்.. இவற்றை ஆரம்பத்திலேயே அழிப்பதே நம் சமூகம் நலமாய் வாழ வழிவகுக்கும்.. ??
 
Top