• Please use an working Email account to verify your memebership in the forum

தோனியும் அரசியலும்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

தோனியின் பிரச்சனையும் அதை சுற்றி நடக்கும் அரசியலும் பற்றி என் கருத்து...

2019 ஜார்கண்ட் தேர்தல்.. ஆட்சி செய்த பாசக அரசு ஏறக்குறைய மக்கள் செல்வாக்கை இழந்ததை உணர்ந்திருந்தது.. எனவே அவர்கள் வெற்றி பெற கவர்ச்சி அரசியலை கையில் எடுத்தனர்.. தோனியை பிரச்சாரத்திற்கு அழைத்தனர்.. தோனி ரசிகர்களின் எதிப்பால் தோனி அந்த கோரிக்கையை நிராகரித்தார்.. இதன் பின்னே களம் சூடுபிடித்தது. தோனி கிரிக்கெட்டில் ஓரம்கட்டப்பட்டார். இரண்டு தினம் முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தன் ஓய்வை அறிவித்தார். பிரச்சனை முடிந்தது தானே என்று உங்களுக்கு தோன்றலாம்.. ஆனால் இல்லை என்பதே என் பதில்..

பொதுவாக விளையாட்டுகளில் சில எழுதப்படாத சட்டங்கள் உண்டு.. அதிலும் கிரிக்கெட்டில் அதிகம்.. முன்னேறிய வகுப்பினரின் ஆதிக்கம் அதிகம்.. எனவே அங்கே மற்றவர் ஊடுருவது கடினம். அப்படி ஊடுருவினாலும் என்ன நடக்கும் என்பதற்கு சாட்சிகளே தோனி மற்றும் கபில்தேவ்.. கிரிக்கெட்டில் ஒருவர் ஓய்வை சில காலம் முன்பே அறிவிக்க வேண்டும் என்பது விதி. தோனியும் நிச்சயம் அப்படிதான் அறிவித்திருப்பார்.. ஆனால் இதை அவரே அறிவிக்கும் வரை BCCI வெளியிடாது அல்லது அவரின் ஆலோசனைபடி ஓர் நாளில் வெளியிடும்.. அவருக்கு ஒரு பிரியாவிடை போட்டி ஏற்பாடு செய்தோ அல்லது ஏதேனும் வரிசையில் உள்ள போட்டியில் அவரை கலந்துக்க செய்தோ வழியனுப்பும். இது A மற்றும் B கிரேட் வீரர்களுக்கு இந்த கௌரவத்தை வழங்கும். ஏன் தோனிக்கு வழங்கவில்லை?

தோனியின் தேவை பாசகவின் அரசியலுக்கு தேவை.. 2030ல் ஜார்கண்டில் பாசக செய்ய வேண்டிய திட்டங்களுக்கும் அவர்களின் அகண்ட பாரத கொள்கைக்கும் தோனி என்னும் பிரபல அரசியல் 2024 தேர்தல் முதலே அவர்களுக்கு தேவை.. அதற்கான அழுத்தமே இவை..

தோனி இன்றே இந்துதுவாவாதி போல் தானே செயல்படுகிறார்? தோனி மட்டும் இல்லை. இராணுவ வீரர்கள், தேசிய விளையாட்டு வீரர்கள் அனைவருமே அப்படிதான் செயல்படுவார்கள். அவர்கள் கனவே இந்தியாவின் வெற்றி என்பதே.. எனவே இயல்பாய் இந்தியா மீதான கண்மூடிதனமான பற்று இருக்கும். அவர்களுக்கு இந்தியாவை ஆள்வது மோடியா ராகுலா என்பதை யோசிக்கமாட்டார்கள் அந்த இடத்தை விட்டு நீங்கும் வரை..

சரி.. இவர்களின் அரசியலை பார்ப்போம்.. விதை போட்டான் காங்கிரஸ். பழம் பறித்தான் பாசக.. இவ்வளவே இந்த இந்திய ஒன்றிய அரசியல். இதை நீங்கள் எல்லா நிகழ்வுக்கும் பொருத்தி பார்க்கலாம். எளிமையாய் புரிந்துகொள்ளலாம்.

1.காஷ்மீர் பிரச்சனையில் அந்த சட்டத்தை நீர்த்து போகும் அளவிற்கு 10 திருத்தங்களை செய்து காங்கிரஸ் 370யை சாவின் விளிம்பிற்கு கொண்டு சென்றது. பாசக சொற்ப உயிரையும் எடுத்தது.

2. EVM கொண்டு வந்தது காங்கிரஸ். அனைத்து கட்சியும் பலமாக எதிர்த்தது. EVM மிக மிக பாதுகாப்பானது என்றது காங்கிரஸ்.. இன்று அதே EVM பாதுகாப்பானது என்கிறது பாசக.. EVM வேண்டாம் என்கிறது காங்கிரஸ்..

3.GST கொண்டு வருவதே நாட்டிற்கு நன்மை என்று தயாரித்தது காங்கிரஸ்.. அமல்படுத்தியது பாசக.
4. EIA யை 2006ல் திருத்தியது காங்கிரஸ். இன்று அதை திருத்தி நாட்டை மேலும் அழிக்க துடிக்கிறது பாசக..
5. கல்வியை பொதுபட்டியலுக்கு கொண்டு சென்றது காங்கிரஸ்.. இன்று நாட்டுக்கே ஒரே பாடதிட்டம் அறிவித்து நிற்கிறது பாசக.
6. அமிதாப்பச்சன், சச்சின் போன்றவர்களுக்கு பதவி கொடுத்து பிரபலங்களின் கவர்ச்சி அரசியலுக்கு வழிவகுத்தது காங்கிரஸ்.. அதை பற்றிக்கொண்டு இன்று தோனி, ரசினி போன்றோரை கொண்டு வர துடிக்கிறது பாசக..

இதுவே இவர்களின் அரசியல்.. இருவரும் எதிலும் மாறுபடமாட்டார்கள்.. இப்படிப்பட்ட அரசியல் உள்ளே தான் பிரபலங்களை இழுத்து மக்களை மடைமாற்ற பார்க்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே தடுக்காவிடில் இன்று தோனி, ரசினி போல் மக்களுக்கு பயன்தராத, கொள்கை இல்லாத, இலக்கு இல்லாத யாரோ ஒருவர் பின்னால் நாம் செல்லக்கூடும்.. 2022 வரை தோனிக்கான IPL ஒப்பந்தம் உள்ளது. ஆனால் அதற்கு முன்பே அவரை இழுக்க வேண்டும் என்பதே இவர்கள் எண்ணம். அவர் பாசகவிற்கு சென்றாலும், பாசகவின் அழுத்தத்தை பொறுக்காமல் காங்கிரஸ் சென்றாலும் அது தவறான வழிமுறையே.. அடையாள, கவர்ச்சி அரசியல் இங்கே துடைத்து எறியப்பட வேண்டியவையே..
?????
 
Top