• Please use an working Email account to verify your memebership in the forum

தொலைந்த நதிகள்:

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

நதி எங்கே போகிறது?

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருநைநதி - என
மேவிய ஆறு பலஓடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு


இவற்றில் நாம் எந்த நதியில் தண்ணீரை பார்த்திருகிறோம்? கர்நாடகா நீர் தரவில்லை.. ஆந்திரா நீர் தரவில்லை.. கேரளா நீர் தரவில்லை என்று கோபப்படும் நாம் முதலில் நதிகளை சரியாக பராமரிக்கிறோமா? பராமரிக்காவிட்டாலும் பரவாயில்லை.. மனிதனால் அழிக்கப்பட்ட நதிகள் எத்தனை எத்தனை இந்த தமிழ்நாட்டில்?

தமிழ்நாட்டில் அரசு கணக்கெடுப்பு படி 86 நதிகள் தமிழகத்தில் பாய்கிறது.. ஆனால் உண்மையில் பாய்கிறதா? ஒரு காலத்தில் பாய்ந்த நதிகளின் நிலை இன்று என்ன?

கூவம்:
தமிழனின் சாதனைகளில் முதலிடம் கூவம் நதியே.. கடந்த 60ஆண்டுகளில் 75 கி.மீ ஓடிய ஓர் ஆற்றை அழித்ததே பெரும் சாதனை. ஓர் காலத்தில் படகும் மீன்பிடிப்பும் நடந்த இந்த ஆறு இன்று சென்னையின் சாக்கடையை தாங்கி நிற்கிறது.View attachment

அடையாறு:

அடையாறு என்றால் ஓர் ஆற்றின் பெயர் என்பது மாறி அது ஓர் பகுதியின் பெயர் என்றே ஆகிவிட்டது.. ஆறு இருந்த தடம் தெரியாமலே போய்விட்டது.. இந்த சாதனையும் சென்னைவாசிகளால் நிகழ்ந்ததே.. View attachment

நொய்யல்:

சென்னைக்கு போட்டியாக 180கி.மீ ஓடிய நொய்யல் ஆற்றையே அழித்த பெருமை கோவை மற்றும் திருப்பூர்வாசிகளையே சேரும்.. இன்று நொய்யல் என்றாலே சாயப்பட்டரை கழிவுநீர் கால்வாய் என்றாகிவிட்டது.. View attachment

கிருதுமால்:

மதுரையில் ஓர் காலத்தில் ஓடிய நதி கிருதுமால் நதி.. 64கி.மீ ஓடி மதுரை மற்றும் சிவகங்கை மக்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்த நதி.. இன்று மதுரையின் கழிவு நீர் சுமந்து செல்கிறது.. View attachment

வைகை:

தேனி, திண்டுகல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் விவசாய தேவைக்கும் இன்றும் ஆதாரமாக உள்ள நதி வைகை.. முற்றிலுமாக அழியவில்லை எனினும் வைகையின் உற்பத்தி மையமான வருசநாட்டு காடுகள் மனிதர் ஆக்கிரமிப்பால் தன் உற்பத்தி இழந்து நிற்கிறது.. இன்று வைகையாற்றில் ஓடும் நீர் முல்லை பெரியாறு, கொட்டகுடியாறு, மஞ்சலாறு போன்றவற்றின் நீரே.. மூலவைகையாறு தன் உற்பத்தி இழந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டது.
View attachment
பாலாறு மற்றும் தென்பெண்ணை:

இவைகளும் முழுமையாய் அழியவில்லை எனினும் அளவில்லா மணல் கொள்ளையால் மெல்ல மெல்ல இறந்து கொண்டுள்ளது..View attachment
View attachment

இதே போல் செய்யாறு, வட்டாறு, குண்டாறு, கொட்டகுடி ஆறு, கௌசிகா ஆறு, என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்..

மற்ற மாநிலங்களிடம் நீருக்கு கையேந்தி நிற்கிறோம்.. ஆனால் சிந்திப்போம்.. தமிழகத்தில் வைகை, கிருதுமால், நொய்யல், தாமிரபரணி, மேயார், கூவம், செய்யாறு போன்ற நதிகள் தமிழக எல்லையிலேயே பிறந்து தமிழகத்திற்கே முழுமையாய் பாயும் நதிகள்.. ஆனால் நாம் அவற்றின் மகத்துவம் புரியாமல் அழித்துவிட்டு இன்று கையேந்தி நிற்கிறோம்
 
T

The Reader

Guest
Palaivanam Solaivanamagavum, Solaivanam Palaivanamagavum Maariye Theerum. Enna naama konjam seekirama maathurom.
 
Top