• Please use an working Email account to verify your memebership in the forum

திராவிடம்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

நூற்றாண்டை கடந்த திராவிட இயக்கங்கள், 70 ஆண்டுகளை கடந்த திராவிட அரசியல் கட்சிகள், 53 ஆண்டுகளை கடந்த திராவிட கட்சிகளின் ஆட்சி என்று பலவற்றை பார்க்கிறது தமிழகம்.. ஆனால் இந்த திராவிடம் தோன்றியது எப்பொழுது?
திராவிடம் என்றால் என்ன?

திராவிடம் என்பதற்கு இவர்களால் கொடுக்கப்படும் விளக்கங்கள் சில.. திராவிடம் என்பது இனத்தை குறிக்கும்.. தமிழும் ,தமிழில் இருந்து தோன்றிய தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளை பேசும் இனக்குழுக்களே திராவிடர்கள்.. திராவிட நிலப்பரப்பு என்பது வடக்கே துளூ நாட்டிலிருந்து (தற்போதைய பிஹார்) கன்னியாகுமாரி வரை என்று வரையறுக்கின்றனர்.. திராவிடம் தொன்மை வாய்ந்தது எனவும், திராவிட இனக்குழுவே முதன்மையானது எனவும், இந்த இனக்குழுவில் முதன்மை தமிழ் எனவும் சொல்கிறார்கள்..

இது எல்லாம் உண்மை தானா? ஏனெனில் நாம் திராவிடம் பற்றி திராவிட இயக்கத்தாரிடமும், திராவிட இயக்க நூல்களை மட்டுமே படிக்கிறோம்.. உண்மையில் திராவிடம் எப்பொழுது தோன்றியது?

பிரபலமில்லாத இந்த திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் உலகிற்கு பிரபலமாக்கியவர் ஆங்கிலேய மொழியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்..

ஆங்கிலேய ஆட்சியாளர் எல்லீஸ் துரை இந்திய மக்களை புரிந்து கொள்ள அவர்கள் மொழியை புரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதே சிரமம் இன்றி ஆட்சி செய்யமுடியும் என்னும் தன் எண்ணத்தை வெளியிடுகிறார்.. அதை செயலாக்க கால்டுவெல் ஓர் மொழியியல் ஆராய்ச்சி நடத்தி முடிக்கிறார்.. அவர் தன் ஆராய்ச்சி நூலை "திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்"( A comparative grammar of the dravidian or south indian family of language) என்னும் பெயரில் வெளியிடுகிறார்.. இதுவே திராவிடம் பற்றிய முதல் நூல்.. திராவிடம் பற்றி பேசுவோரின் முதன்மை ஆதாரம். சரி.. இந்த நூலில் இவர் தென்னிந்தியரை திராவிடராக உரைத்தது சரியா?

அந்த நூலிலேயே தான் திராவிடம் என்னும் வார்த்தையை எங்கிருந்து எடுத்தேன் என்பதை கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.. அவர் குமாரில பட்லர் எழுதிய மனு சுமிதி என்னும் நூலில் இருந்து அதை பெற்றதாக சொல்கிறார் கால்டுவெல்.. மனு சுமிதி நூல் பிராமணர்களின் வரலாறு பற்றிய நூல்... இந்தியாவில் வாழும் பிராமணர்களை பற்றியது.. அதில் தென்னிந்தியாவில் வாழும் பிராமணர்களையே திராவிடர்கள் என்று குறிப்பிடுகிறது.. அனைத்து தென்னிந்தியரையும் அல்ல.. இன்றும் திராவிட பிராமணர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.. எடுத்துகாட்டாக ராகுல் திராவிட் குடும்பம்..

திராவிடம் என்னும் சொல்லே சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியதே.. பின்பு எப்படி சமஸ்கிருத வருகைக்கும் முன்பே வாழ்ந்த தமிழினம் திராவிடர் ஆக முடியும்?

பஞ்ச திராவிடா என்னும் பிரிவில் இன்றும் பிராமணர்கள் வாழ்கிறார்கள்!. View attachment
 

Attachments

  • 0 bytes · Views: 2
Top