• Please use an working Email account to verify your memebership in the forum

தாத்தா இரட்டைமலை சீனிவாசன்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

View attachment
1859 சூலை 7ல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கம் அருகில் உள்ள கோழியாளம் என்னும் ஊரில் பிறந்தார்.. தந்தையின் பெயர் இரட்டைமலை.. இவரின் பெயர் சீனிவாசன்.. பள்ளி பதிவேடுகளில் தந்தையின் முதல் எழுத்திற்கு பதிலாக பெயரையே எழுதிவிட்டனர்.. அதுவே அவர் பெயராக மாறியது..

தேர்ந்த கல்வியாளர்.. வழக்கறிஞர்.. சமூக செயற்பாட்டாளர்..

1891ல் அம்பேத்கார் பிறந்த வருடத்திலேயே பறையன் மகாசன சபை என்ற இயக்கத்தை தோற்றுவித்தவர்.. பறையன் என்னும் மாத இதழையும் நடத்தியவர்.. அதே ஆண்டிலேயே திராவிட இயக்கத்தின் முதல் அமைப்பான திராவிட மகாசன சபையின் முதல் மாநாட்டை இவரும் அயோத்திதாசிரும் கூட்டினார்கள். தாழ்த்தபட்டோருகாக போராடினார்கள்... 1892 இல் திராவிட மகாசன சபையை ஆதிதிராவிட மகாசன சபையாக மாற்றினார்கள்..

1930ல் இரட்டைமலையாரும் அம்பேத்காரும் தாழ்த்தபட்டோரின் நலனுக்காக லண்டனில் பேசியதும் அனைவரும் அறிந்ததே..

1929ல் மதுஒழிப்பு தீர்மானத்தை சென்னை மாகாண சட்டசபையில் முன்மொழிந்தவர்.. ஆனால் அதை அரசு நிராகரித்தது..

1933ல் ப.சுப்பராயனுடன் இணைந்து ஆலய நுழைவு தீர்மானம் நிறைவேற்றியவர்..

இன்று இருக்கும் முக்கிய கட்சியான திமுகவின் சின்னமான உதயசூரியனை வடிவமைத்தவர்..

தாழ்த்தபட்டோருகாக பல போராட்டங்களையும் முன்னேற்பாடுகளையும் செய்த தாத்தா இரட்டைமலையார் 1945 செப்டம்பர் 18 காலமானார்
தாத்தாவிற்கு புகழ் வணக்கம் ??
 
Top