• Please use an working Email account to verify your memebership in the forum

தமிழும் சிறப்பும்( Thamizhum Sirappum )

Suri

Administrator
Staff member
Administrator
Messages
290
Points
63

Reputation:

  • Thread starter
  • Moderator
  • #1
தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது. இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது

வரலாறு

தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துகளில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.

பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி. மு. 4 ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன.

இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி. மு. 400 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் கி. மு. 600 ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன.பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத் தக்க காப்பியம், கி. மு 200 முதல் கி.பி 200 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

தமிழ் பேசப்படும் இடங்கள்

தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது

தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத் தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். தென்னாப்பிரிக்கா, கயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட், டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக வாழ்ந்து வருகின்றார்கள்.

மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் பல தமிழர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஆட்சி மொழி அங்கீகாரம்

தமிழ் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின், எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. சிங்கப்பூர் நாட்டிலும் நாடளாவிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன

சிறப்பு

மொழியை உயிராய் மதிப்பவர்கள் தமிழர்கள். வேறு மொழிகளில் இல்லாத பெருமை தமிழுக்கு உண்டு. வேறு எந்த மொழிகளிலும் மொழியைத் தன் பெயராய் வைத்துக்கொள்வதில்லை. ஆனால் தமிழர்கள் – தமிழ்ச்செல்வன், தமிழரசி, தமிழ்ச்செல்வி, தமிழாயினி, தமிழன்பன், தமிழரசன், தமிழ், தமிழ் நிலா, தமிழச்சி...

தமிழின் நேர் வாக்கியத்தில் எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அதன் அர்த்தம் மாறாது. இது தமிழுக்கே உண்டான சிறப்பு. உதாரணம் (ராமன் ராவணனைக் கொன்றான்) இந்த வாக்கியத்தில் எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அர்த்தம் மாறுவதில்லை. RAMA KILLS RAVANA இதில் சொல்லை மாற்றினால் அர்த்தமே மாறிவிடும். இந்த சிறப்பு வேறு மொழிகளில் கிடையாது.

தமிழ் சொற்கள் அனைத்தும் தொண்டை மற்றும் நாவினால் பேசப்படுபவை. வயிற்றிலிருந்து கத்தும் சொற்கள் இல்லை – உதாரணம் : வயிற்றிலிருந்து கத்தும் ஹிந்தி எழுத்துக்கள் போன்றவை கிடையாது. இங்குதான் மொழியின் இனிமை அடங்கி இருக்கிறது. பேசும்போதே கத்துவதெல்லாம் இல்லாமல் மென்மையாக பேசி இனித்தால்தான் அது இனிய மொழியாகும்.
பேசுவதும், எழுதுவதும், வாக்கியங்களும், வார்த்தைகளும், சொற்களும் ஒன்றேதான். ஒவ்வொரு சொல்லாய்ச் சொன்னாலும் அர்த்தம் மாறுவதில்லை. அம்மா – ஒவ்வொரு சொல்லாய் சொல்லுங்கள் அ-ம்-மா மாற்றமில்லை. MOTHER ஒவ்வொரு சொல்லாய் சொல்லுங்கள் எம் – ஓ – டி - ஹச் - ஈ - ஆர். இப்படி பேசினால் புரியுமா?

பழங்கால மொழிகளான எகிப்து, லத்தீன், பாலி (புத்தரின் போதனைகள் பாலியில்தான் உள்ளது), சமஸ்கிருதம் ஆகியவை இப்போது உலகில் வழக்குமுறை/பேச்சுமுறையில் இல்லை. பழங்கால மொழிகளில் இன்னும் மாறாமல் (இலக்கண இலக்கியங்களில்) அப்படியே இருக்கும் ஒரே ஒரு மொழி தமிழ் மட்டுமே..

தமிழால் இணைவோம்
 
Top