• Please use an working Email account to verify your memebership in the forum

தமிழின படுகொலை நாள்..

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

View attachment



யூதர்களுக்கு எதிராக இட்லர் புரிந்த இன அழிப்பு பெரும் அச்சத்தையும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சம்பவங்களாகவும் இன்றைக்கும் நினைவுக்கூறுகிறோம். நாஜிக்களால் யூதர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புதான் கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இன அழிப்பு என நம்மில பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

1-3.jpg


ஆனால், உண்மையில் அதற்கு முன்னதாகவே, அதாவது 1915-க்கும் 1920-க்கும் இடையில், சத்தமே இல்லாமல் துருக்கியில் ஓட்டோமான் இனத்தால் ஆர்மீனியர்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ருவாண்டாவில் இலட்ச ஹூடு இனத்தவர்கள் கொல்லப்பட்டதும் கூட இன அழிப்புதான்.

அதுமட்டுமின்றி, 1932 தொடங்கி 1933 வரையில் உக்ரையினில் சோவியத் ஒன்றியம் ஏற்படுத்திய செயற்கை பஞ்சம் கூட இன அழிப்புதான் என வகை செய்யப்பட்டிருக்கும் நிலையில், 1975-ல் கிழக்குத் தீமோர் மீது இந்தோனேசியப் படையெடுப்பும் இன அழிப்புதான் என்று வகை செய்யப்பட்டுள்ளது. மியன்மாரில், ரோஹிங்கியா இனத்திற்கு எதிராக அந்நாட்டு அரசாங்கமும் அந்நாட்டின் தேசிய இனமும் புரியும் கொடூரங்களையும் கொடுமைகளையும் இந்த உலகம் இன்னமும் வாய் மூடி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

இன அழிப்பு என்பது ஓர் இனத்தைப் போரில் கொல்வதிலும் அவர்களை அடித்து துரத்துவதிலும் சித்திரவதை செய்வதிலும் அடங்கி விடவில்லை. மாறாய், அவ்வினத்திற்கு எதிராக உடல் மற்றும் உள ரீதியாக புரியப்படும் கொடூரமான அல்லது கொடுமையான செயல்களும், இனப் படுகொலைதான்.

மேலும், ஓர் இனத்தின் பிறப்பைத் தடுப்பது, வழுக்கட்டாயமாக வேறு இனக் குழுவோடு சேர்ப்பது ஆகியவையும் இன அழிப்புதான் என, 1948-ல் இனப் படுகொலை குறித்த ஐநாவின் தீர்மானத்தில் உள்ளடங்கியுள்ளது. இது 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி இன அழிப்பு என்பது, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சத்தமின்றி அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், உலகத் தமிழர்கள் மத்தியில் ஈழம் மலரும் எனும் பெரும் நம்பிக்கை தொடர்ந்துக் கொண்டிருந்தபோதுதான், அந்தக் கொடூரம் நடந்தேறியது. ஆம், சுமார் 11 ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையிலும், உலகத் தமிழர்களின் இதயங்களில் இன்னமும் குருதி வடிந்துக்கொண்டிருக்கும் மே 17 இன அழிப்புதான் அது.

3-1.jpg


இலங்கை அரசு அந்நாட்டில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட இன அழிப்பின் உச்சம் நடந்தேறிய நாள் தான் இந்த மே 17. பத்தாண்டுகளுக்கும் முன்னர் முள்ளிவாய்க்காலில், 2009-ம் ஆண்டில், இனவாத இலங்கை அரசால் இக்கொடூரம் நடத்தப்பட்டது. சுமார் 40,000 பேர் அன்றைய நாளில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் விடுதலை புலி உட்பட பெரும்பான்மையோர் அப்பாவி மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களைக் கேடயமாக வைத்து, முன் நகர்வினை மேற்கொண்டு புலிகளைச் சூழ்ச்சியால் வீழ்த்திய சிங்கள இராணுவம் அப்பாவி மக்களையும் கொன்று குவித்து மாபெரும் இன அழிப்பிற்கு வித்திட்டது. காலம் காலமாக தமிழ் மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர் எங்கும், அன்றைய தினத்தில் மரண ஓலங்கள் ஒலித்தது, நிற்காமல் தொடர்ந்தது ஆங்காங்கே அழும் குரல்கள். துப்பாக்கி தோட்டாக்களுக்கும் எறிகுண்டுகளுக்கும் பலியானவர்கள் போக, எஞ்சியவர்கள் சித்தம் இழந்து முள்ளிவாய்க்கால் சூன்யமாகிப் போனது.

போர் நடக்கும் போது பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, வழிபாடு தலங்கள் உட்பட பொது மக்கள் தஞ்சம் புகும் எவ்விடத்திலும் தாக்குதல் நடத்தக்கூடாது என்பது போர் மரபு. ஆனால், இலங்கையில், உச்சக்கட்ட போரின் போது சிங்கள இராணுவம் உயிரைக் காத்துக்கொள்ள மருத்துவமனையில் தஞ்சம் புகுந்தவர்களையும் விட்டு வைக்காமல் குண்டு மழை பொழிந்து கொன்றது. அவர்களின் நோக்கம், விடுதலை புலிகளை வீழ்த்துவதல்ல. மாறாய், தமிழினம் இருக்ககூடாது என்பதற்கே...
 
Top