• Please use an working Email account to verify your memebership in the forum

தமிழர் வீரம்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

தமிழர் தம் வாழ்வில் ஏரும் போரும் குலத்தொழிலென வாழ்ந்தவர்கள்.. குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைக்கும் அளவிற்கு வீரத்தை போற்றியவர்கள்.. "பிள்ளையை பெற்று வளர்த்தல் நற்றாயின் கடமை: சீலனாக்குதல் தந்தையின் கடமை: வாளெடுத்து வீசி வலிய யானையைக் கொன்று வருதல் அப்பிள்ளைக்கு கடமை" என்கிறார் பொன்முடியார்.. "கைவேல் களிற்றோடு போக்கு வருபவன்
மெய்வேல் பறியா நகும்"
என்கிறார் வள்ளுவர் பெருந்தகையார்..
இப்படி வீரத்தை இலக்கியங்களும் ஊட்டி வளர்க்கும் மரபே தமிழரது..

மும்முடிச்சோழன் ராசராசசோழன், வாழ்நாளில் தோல்வி அறியாத கடாரம் கொண்டான் அரசேந்திர சோழன், கரிகாலன், வெள்ளையனை எதிர்த்து சமரசமின்றி களம்கண்ட மருதுசகோதரர் என்று நமக்கு தெரிந்த வரலாறுகள் பல.. எனவே இப்பதிவில் இவர்கள் தவிர்த்த மற்றோர் வீரம் அறிவோம்..

இன்று ஆரியர் எதிர்ப்பு என்பதை நோக்கியே அரசியல் களம் நகர்கிறது.. ஆனால் பண்டைய காலத்தில் பாண்டிய மன்னன் ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன் ஆரிய அரசுகளை அடக்கு ஆண்டுள்ளான்.. இதன் காரணமாகவே நெடுஞ்செழியன் என்ற பெயரோடு ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன் என்ற பட்டமும் சேர்ந்துள்ளது.. இதை இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில்

" வடவாரிய படை கடந்து
தென் தமிழ்நாடு
ஒருங்கு காணப்
புரைதீர் கற்பின் தேவி
தன்னுடன்
அரசு கட்டிலிற்
றுஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்"
என்று புகழ்கிறார்..

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பவன் சேரமன்னன் ஆவான்.. இவன் செருக்குடன் பேசிய ஆரியர்களையும் கலிங்கர்களையும் வீழ்த்தி இமயத்தில் தன் வில் கொடியை நாட்டினான் என்கிறது பதிற்றுபத்து பாடல்கள்.. நந்தர்களுக்கு ஆதரவாய் மௌரியர்களையும் போரிட்டான் என்கிறது வரலாறு.. யவனர்களின் செருக்கழிக்க அவர்களின் தலையில் நெய்யை கொட்டி நெய் ஒழுக ஒழுக கட்டி இழுத்து வந்தான் என்றும் வரலாறு சொல்கிறது.. அப்படி வடவரை வெற்ற தம் வீரர்களை உற்சாகமூட்ட மாட்டிறைச்சியும்,ஆடைகளையும் வழங்கியதை விளக்கும் பதிற்றுபத்து பாடல் இதோ..

"மையூன் பெய்த வெண்ணல் வெண்சோறு
நனையமை கள்ளின் தேறலொடு மாந்தி
நீர்ப்படு பருந்தின் இளஞ்சிறகு அன்ன
நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலாக் கலிங்கம் வாள் அரைக் கொளீஇ"

சேரன் செங்குட்டுவன்:

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தில் இமயத்தில் வில் கொடி நாட்டி வந்தான்.. இருப்பினும் வடக்கே இருந்த ஆரிய அரசர்கள் கனகன், விசயன் என்ற இருவர் இந்த வரலாற்றை தெரிந்துகொண்டு தங்கள் காலத்தில் இமயவரம்பன் வரவில்லை.. அதனால் இதை வீரம் என்று ஏற்றுகொள்ள இயலாது என்று எள்ளி நகையாடினர்.. இதை கேள்விபட்ட சேரன் செங்குட்டுவன் அந்த நேரத்தில் கண்ணகியின் வரலாற்றையும் இளங்கோவடிகள் வாயிலாக கேட்டறிந்தான்.. கண்ணகிக்கு கோயில் கட்டவும் ஆரிய அரசர்களை வீழ்த்தவும் இமயத்தில் கல்லெடுக்கப் புறப்பட்டான்.. கனகன், விசயனை வீழ்த்தி அவர்கள் தலையிலேயே கல்லை சுமக்க வைத்து இழுத்து வந்தான் செங்குட்டுவன்..

மேலும் மலையமான் திருமுடிகாரி என்பவன் ஆரியரை தனி படையை கொண்டு முள்ளூர் என்னும் இடத்தில் போரிட்டு வீழ்த்தினான் என்றும் மலையமானின் வில்படைக்கு ஆரியப்படை ஈடுகொடுக்காமல் சிதறி ஓடினர் என்கிறது பதிற்றுபத்து பாடல்.. இப்படி ஆரியர்களை எதிர்ப்பு என்பது தமிழரின் வரலாற்றில் வழியெங்கும் உண்டு..

ஆங்கிலேயரை முதன்முதலில் எதிர்த்த நெற்கட்டான் செவ்வல் பாளைய அரசர் மாவீரன் பூலித்தேவன், கும்பினி படையின் துப்பாக்கி குண்டுகள் எங்கள் பட்டியின் ஆட்டு புழுக்கைகள் என்று உரைத்து எதிர்த்து போரிட்ட கட்டாலங்குளம் அரசர் அழகுமுத்துகோன் என்று தமிழர் வரலாறே அந்நியர் எதிர்ப்பின் அடிப்படை..

ஆண்களுக்கு சற்றும் சலைத்தவர்கள் இல்லை நாங்கள் என்று பறைசாட்டுகிறார்கள் தமிழச்சிகள்.. கும்பினி படைகளை எதிர்த்து இறுதிவரை போரிட்டவர் சிவகங்கை சீமை வேலுநாச்சியார்.. உலகின் முதல் தற்கொலைப்படையாக விளங்குபவர் குயிலி.. வேலுநாச்சியாருக்காக அவரின் மெய்க்காப்பாளர் குயிலி தன் உடலில் எண்ணெய் ஊற்றி தீயிட்டு கொண்டு வெள்ளையரின் ஆயுதகிடங்கில் புகுந்து ஆயுதங்களை வெடிக்கச் செய்தவர்.. இதுவே வேலுநாச்சியாரின் வெற்றிக்கும் வழிவகுத்ததும் குறிப்பிடதக்கது..
இப்படி தமிழர் தமிழச்சிகளின் வீரவரலாறுகள் எண்ணிலடங்காதவை..
?????????
 
Top