• Please use an working Email account to verify your memebership in the forum

தமிழர் மெய்யியல்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

முதற் சங்கம் முதல் கடைச் சங்கம் வரை தமிழர் வாழ்வியல் மறை விதிகளை அடைப்படையாகக் கொண்டது. தமிழர் தமக்கென மெய்யியல் கோட்பாட்டை வகுத்து அதன் படி வாழ்ந்து வந்தனர்.

மெய்யியல் என்பது எது மெய்யோ அதை எடுத்துரைப்பது. தானோ தன்னை போன்ற பலரோ கற்ற, பெற்ற, உணர்ந்த ஒன்றை எடுத்துரைப்பது மட்டுமின்றி ஆழ்ந்து ஆராய்ந்து ஒன்று திரட்டி எடுத்துரைப்பது. மறுக்க இயலாதது. ஆனால் மாற்றத்திற்கு உட்பட்டது.

சங்க தமிழர் அனைவரும் மெய்யியல் வழி நடந்தவர்களே. தமிழர் சங்க காலங்களில் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் மெய்யியல் தொகுப்புகளே. தமிழர்கள் வீரம், காதல் போன்றவற்றை இலக்கியம் வடித்த போதிலும் ஏன் பக்தி இலக்கியம் வடித்த போதிலும் அதிலும் மெய்யியலை முன் நிறுத்தியே பாடல் வடித்தனர்.அவற்றில் சிலவற்றை ஒரு நெடிய தொடராக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் நூல்களில் இன்று கிடைத்தவற்றில் மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல் என்பதை விட ஒரு மெய்யியல் நூல் என்பதே பொருந்தும். இந்த நூற்றாண்டில் நாம் கண்டறிந்தவற்றை பல்லாயிரம் ஆண்டுக்கு முன் தொல்காப்பியம் எடுத்துரைத்து இருப்பது விந்தையிலும் விந்தையே. ஒருவரின் உணர்வை மற்றொருவரால் சொல்வது கடினம் என்பார்கள். ஆனால் நம் தொல்காப்பியம் அதனை மிகவும் எளிமையாக விரிவாக சொல்லியுள்ளது.

"நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப் பால் எட்டே மெய்ப்பாடு என்ப.
எள்ளல் இளமை பேதைமை மடன் என்று
உள்ளப்பட்ட நகை நான்கு என்ப.
இளிவே இழவே அசைவே வறுமை என
விளிவு இல் கொள்கை அழுகை நான்கே.
மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே.
புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே.
அணங்கே விலங்கே கள்வர் தம் இறை எனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.
கல்வி தறுகண் புகழ்மை கொடை எனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.
உறுப்பறை குடிகோள் அலை கொலை என்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே.
செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று
அல்லல் நீத்த உவகை நான்கே."

சிரிப்பு, அழுகை, இகழ்ச்சி, மயங்குதல் (அ)குழப்பம், அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை போன்ற எட்டு தான் ஒருவரின் உணர்வுகள் என்று வகைப்படுத்தியுள்ளது தொல்காப்பியம். அது மட்டுமா? இந்த உணர்வுகள் தோற்றத்தையும் வரிசை படுத்தியுள்ளது விந்தையே.

மனிதனுக்கு ஆறறிவு என்று இந்த நூற்றாண்டில் நாம் கண்டறிந்து சொல்லியதை தொல்காப்பியர் பல்லாயிரம் ஆண்டு முன்பே சொல்லியது மட்டும் வியப்பின் உச்சம் மட்டுமல்ல. ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியதும், உயிரினத்தை வகைப்படுத்தியதும் வியக்காமல் எப்படி இருக்க முடியும்?

"ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே;
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே;
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே;
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே;
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;-
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே"

இதில் தொல்காப்பியர் ஆறாம் அறிவாய் மனதை குறிப்பிடுகிறார் பகுத்தறிவை அல்ல. ஏனெனில் பகுத்தறிவு அனைத்து உயிருக்கும் உண்டு. மனிதனுக்கு மட்டும் அல்ல. ஆம். ஒரு தாவரம் நீரை மட்டும் உறிஞ்சிக் கொள்வதும் பகுத்தறிவே. ஒரு நாய் மனிதனை கண்டால் அச்சப்படுவதும், ஒரு பூனையை கண்டால் பாய்வதும் பகுத்தறிவே. எனவே பகுத்தறிவு ஒரு அறிவு அல்ல. அதனை கடந்து சிந்தனை வளர்ச்சியே ஆறாம் அறிவு. ஆதிமனிதன் விவசாயம் கண்டறிந்தது சிந்தனை வளர்ச்சியே. இன்று நம் கண்முன் இருப்பவை அனைத்தும் சிந்தனை வளர்ச்சியால் விளைந்தவையே. இதையே ஆறாம் அறிவாக குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். மேலும் அவர் இதை நான் குறிப்பிடவில்லை எனக்குமுன் பலர் உணர்ந்து சொல்லியுள்ளனர் என்கிறார். " நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே" என்கிறார். அப்படியெனில் அவருக்கும் முன்பே தமிழர் இதை உணர்ந்து வாழ்ந்துள்ளனர். இதற்கு அடுத்து ஒரு அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்களை வகைப்படுத்துகிறார்.

"புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.
நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.
மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.
மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே."

தாவரத்திற்கு உயிர் உண்டு என்று இன்று சொல்லும் நாம் எங்கே?
"புல்லும் மரனும் ஓர் அறிவினவே" என்று அவற்றின் அறிவைவும் வகைப்படுத்திய நம் முன்னோர் எங்கே?

தொடரும்..
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

மிக மிக அருமை அண்ணா... சொற்களை சொற்கட்டமைப்பை அவற்றின் பொருளை மட்டும் தொல்காப்பியம் கூறவில்லை. ஆகச்சிறந்த அறிவியலையும் சேர்த்தே தமிழனின் இலக்கியங்கள் பேசியிருக்கின்றன. "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்."
என்று திருக்குறளை புகழும் சாக்கில் கூட அணுவை பிளக்க முடியும் என்று உவமையாக சொல்லியிருக்கிறாரே ஒவ்வையார். வாழ்வியலில் அறிவியலை கண்டுணர்ந்த மக்கள்ஆயிற்றே நம் முன்னோர்!!!
 
ஆம் சகோதரி.. அணுக் கோட்பாட்டை சங்க காலத்திலேயே விளக்கிய திருமூலர் வாழ்ந்த மண் அல்லவா இது ❤️
 
Top