• Please use an working Email account to verify your memebership in the forum

தமிழக தேர்தல் வரலாறு -1957

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

இந்த தேர்தலில் காமராசர் தலைமையில் காங்கிரஸ் கட்சி 205 இடங்களில் 151 இடங்களைப் பிடித்து தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இரண்டாவது இடத்தில் 1949இல் உருவான திமுக கட்சி அதன் முதல் தேர்தலில் 13 இடங்களைப் பிடித்தது. கடந்த தேர்தலில் இரண்டாவது இடம் பிடித்த கம்யூனிஸ்ட் கட்சி வெறும் 4 இடங்களே வெற்றி பெற்றது..

காமராசர் மேல் பாராட்டும் விமர்ச்சனமும் தொடங்கியதும் இந்த தேர்தலிலே.. 1953இல் ஆந்திரா மாநிலம் தனியாக பிரிந்தது. 1956இல் மாநில எல்லை சீரமைப்பு நடைபெற்ற போது ஆந்திரா தமிழகத்தின் நெல்லூர்,திருப்பதி, திருத்தணி என பல பகுதிகளை தனக்கு வேண்டும் என்று போராடியது. அதிலும் ஒரு படி மேலே சென்று சென்னை தனக்கு வேண்டும் என்று போராட்டம் நடத்தியது. கேரளம் தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை, கன்னியாகுமாரி போன்ற பகுதிகளை கேட்டது, கர்நாடகம் மைசூர், கோலார் போன்ற பகுதிகளை கேட்டது. இவை எல்லாம் தமிழர்கள் மிகுந்து வாழ்ந்த பகுதிகள். எல்லை போராட்டம் ம.பொ.சி தலைமையில் தமிழகத்திலும் முன்னெடுக்கப்பட்டது. தலைநகர் சென்னை காக்க மக்கள் வீதிக்கு வந்தனர். ஆனால் காமராசரோ பீர்மேடு கேரளத்திற்கு கொடுக்க கூடாது என்று சொல்லியவர்களிடம் மேடாவது பள்ளமாவது.. எல்லாம் இந்தியா தானே என்றார். இது பலரை அதிர்ச்சி அடைய செய்தது. ஈ.வெ.ரா வோ நன் பணிகரிடம் பேசினேன். அவர் எங்களுக்கு வேண்டும் என்று சொல்கிறார். எனவே அவர்களே வைத்துக்கொள்ளடும் என்றார். ஆனால் ம.பொ. சி, விநாயகம் பிள்ளை, மார்ஷல் நேசமணி போன்றவர்களின் போராட்டத்தால் சென்னை, கன்னியாகுமரி, திருத்தணி, செங்கோட்டை போன்ற பகுதிகள் தமிழகத்திற்கு கிடைத்தது.. மற்ற பகுதிகளை இழந்தோம். தமிழ் உணர்வாளர்களிடம் காமராசர் மேல் ஒரு வெறுப்பு தோன்றியது. ஆனாலும் பதவி ஏற்றவுடன் குலக்கல்வியை ஒழித்தது, கல்விக்கு சீரிய முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தது, தொழில் வளர்ச்சி போன்றவற்றால் காமராசர் புகழ் பரவியது. சென்ற முறை காமராசருக்கு எதிராக பரப்புரை செய்த ஈ. வெ. ரா இம்முறை அவருக்கு ஆதரவாக திமுக மற்றும் கம்யூனிஸ்ட்களை எதிர்த்தார். திமுக மற்றும் கம்யூனிஸ்ட்களும் ஈ.வெ.ரா வை கடுமையாக எதிர்த்தனர். இன்னும் சொல்லப்போனால் தனிமனித தாக்குதல் பேச்சுக்கள் அரசியலில் தொடங்கிய காலம் இதுவே. அதே போல மரியாதை குறைவான சொற்கள் மேடைகளில் தொடங்கியதும் இந்த காலத்திலேயே..
 
Top