• Please use an working Email account to verify your memebership in the forum

தமிழக தேர்தல் வரலாறு-1952

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

சுதந்திரத்துக்கு பின் இந்திய ஒன்றியத்தால் நடத்தப்பட்ட முதல் தேர்தல். சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளடக்கிய பகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இவை எல்லாம் தெரிந்தவையே. ஆனால் இந்த தேர்தலில் தெரியாதவை சில உண்டு.

உட்கட்சி பூசல் நிறைந்த காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் தேசிய உணர்வு வெள்ளோட்டத்தில் இயற்க்கையாகவே மக்களிடம் அதிகம் செல்வாக்கு பெற்றிருந்தது. அதே போல பொதுவுடைமை சமூகம் அமைக்கும் கொள்கையை கொண்ட கம்யூனிஸ்ட்களும் இந்த தேர்தலில் பலம் பெற்றிருந்தனர். ஜமீன்தார்களுக்கு ஆதரவான நிலைப்பாடு, கந்துவட்டிக்காரர்களை ஊக்குவித்தல், விடுதலை போராட்டத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு துணை போனது என்ற பல காரணங்களால் நீதிக்கட்சி அழிவில் இருந்தது. எனவே அதை 1939இல் ஈ.வே.ரா விடம் ஒப்படைத்தனர் நீதிக்கட்சியினர். 1944இல் அதை திராவிட கழகம் என மாற்றினார் ஈ.வே.ரா. தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அறிவித்தார். அவரிடமிருந்து பிரிந்த அண்ணாதுரை திமுக என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் 1952 தேர்தலில் அவர்கள் போட்டியிடவில்லை. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இடையே மட்டுமே போட்டி நிகழ்ந்தது. ஆனால் ஈ.வே.ரா காங்கிரஸ் கட்சி தோற்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக காமராசருக்கு எதிராக ஜி.டி. நாயுடுவை வேட்பாளராக நிறுத்தி பரப்புரை செய்தார். மேலும் ஆறுமுகசாமி நாடார் என்னும் ஒருவரை காமராசரின் அதே சமூகத்தை சேர்ந்தவரை அதே தொகுதியில் நிறுத்தினார் ஈ. வே.ரா. ஆனால் காமராசர் எளிதில் வெற்றி பெற்றார். பிரிட்டிஷ் அரசுக்கு உதவியது, திராவிடநாடு கோரிக்க, நிலவுடைமை ஆதரவு இப்படி பல விடயங்களால் ஈ.வே.ராவின் பரப்புரையை மக்கள் ரசிக்கவில்லை. காங்கிரஸ் வெற்றி பெற்றது. கம்யூனிஸ்ட் இரண்டாம் இடம் பெற்றனர். ஆம். இன்று சில தொகுதி வெற்றிக்கே அல்லாடும் கம்யூனிஸ்ட்கள் ஜீவா, சிங்காரவேலர் காலத்தில் மாபெரும் இயக்கமாக இருந்தனர்.
 
Top