• Please use an working Email account to verify your memebership in the forum

சூரிய ஒளியில் இயங்கும் மின்சாரம்

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

*சூரிய ஒளியில் இயங்கும் மின்சாரதில் இயங்கும்மானியத்துடன் கூடிய தமிழக அரசின் புதிய திட்டம்*

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளை நிலங்களை பாழ்படுத்தும் விலங்குகளிடமிருந்து விளை நிலங்களை பாதுகாக்க மற்றும் மலையோர பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு பாதுகாப்பாக இருக்கவும் ,விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும், சூரிய ஒளியில் இயங்கும் முறைப்படுத்தப்பட்ட மின்சார வேலி களை அமைக்க *வேளாண்மை பொறியியல் துறையில்* விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

*ஒரு விவசாயிக்கு 1245 மீட்டர் அல்லது ஐந்து ஏக்கர் நிலம் மட்டுமே அனுமதிக்கப்படும்*.

இதற்கும் தொகையில் 50 சதவீதம் மானியமாக *அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 2.18 லட்சம்* ரூபாய் அளவில் மட்டுமே கிடைக்கும்.

5 வரிசை கொண்ட மின்சார வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு ரூபாய் 250
7 வரிசைக்கு ரூபாய் 350
10 வரிசைக்கு ரூபாய் 450 என கணக்கிடப்படும்.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை உடனடியாக பயன்படுத்திக் கொள்ள விவசாயிகள் அருகில் உள்ள *வேளாண்மை பொறியியல் துறை* அலுவலகங்களில் விண்ணப்பங்களுடன் *சிட்டா, அடங்கல் வரைபடங்கள், ஆதார் கார்டு நகல் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ* போன்ற விபரங்களுடன் உடனடியாக அணுகவும்.
 
Top