• Please use an working Email account to verify your memebership in the forum

சாதி, மதம் தோற்றம்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

இந்த பதிவு புரிதலுகாக மட்டுமே.. நான் படித்த விடயங்கள் கொண்டு தொகுத்துள்ளேன்.. தவறுகள் இருப்பின் தெளிவுபெற சுட்டிகாட்டலாம்..??

இன்றைய உலகின் பல சண்டைகளுக்கும் போர்களுக்கும் கலவரங்களுக்கும் முக்கிய காரணிகள் சாதி, மதம், கடவுள்.. தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகமே.. இது பகுத்தறிவு பூமி அது இது என்று நாம் சொல்லிகொண்டாலும் இங்கும் இதன் தாக்கத்தை புறந்தள்ள இயலாது.. அப்படிபட்ட சாதியும் மதமும் கடவுளும் தமிழகத்தில் எப்போது தோன்றியது என்பதை பார்ப்போம்.. அதற்குமுன் இந்த பதிவை இன்றைய காலத்திற்கு ஒப்பிட்டு பார்த்தால் நம்புவது கடினமே.. எனவே இன்றைய நடைமுறையை தவிர்பது சிறப்பு..

ஜாதி மற்றும் தலீத் என்பதே சமஸ்கிருத சொற்கள்.. அவை தமிழருக்கு உரியன அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.. இங்கே பண்டைய தமிழரிடையே குடிகள் என்ற வார்த்தையே பயன்பாட்டில் இருந்தது.. வார்த்தை மாறினால் என்ன.. அதுவும் பாகுபாடு தானே என்று தோன்றலாம்.. தமிழர் குடிகளிடையே கி.பி 1200வரை பாகுபாடு கிடையாது.. இன்னும் சொல்ல போனால் அன்று குடிகள் நிரந்தரமானவை இல்லை..

குடிகள் என்பது ஒருவர் செய்யும் தொழிலை குறிப்பது.. உழவு தொழில் செய்பவர் வேளாளர் குடி எனவும், உழவு உபகரணங்கள் செய்பவர் தச்சன் எனவும், வாணிபம் செய்பவர் செட்டி மற்றும் முதலி எனவும், போரில் ஈடுபடுவோர் மறவர் எனவும், நெறி கற்பிப்போர் ஐயர் எனவும் அழைக்கப்பட்டனர்.. ஐயர் தமிழரா என சந்தேகம் எழலாம்.. ஆம்.. தமிழரே.. பார்பனரும் தமிழரே.. பார்ப்பனர்- பார்கின்றவர்.. வானியல், மெய்யியல், வாழ்வியல் பார்போர் பார்பனர் எனப்பட்டனர்.. பறை+ஐயர்=பறையர், அம்+அணர்= அந்தணர், கணியர், ஓதுவர், வள்ளுவர் என்பன பார்பன குடிகள்.. (ஆதாரம்- அறிஞர் குணசேகரனின் தொன் தமிழர் குடிகள்) "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற அரிய கருத்தின் மூலம் உலகில் உள்ள அனைவரும் சொந்தங்களே என்று சொன்ன கணியன் பூங்குன்றனாரும் ஓர் பார்பனரே..

தொல்காப்பபியம் நம் வாழ்வியலை ஐந்திணையாகவும் குடிகளாகவும் பிரிக்கிறது.. குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல், பாலை என்பன அவை.. மலைகள் குறிஞ்சி எனவும், காடுகள் முல்லை எனவும், வயல்கள் மருதம் எனவும், கடற்கரை நெய்தல் எனவும், இந்நான்கு நிலப்பரப்பில் வறண்ட சிறு பகுதிகள் பாலை எனவும் வழங்கப்பட்டது.

"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே."

- தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5

இங்கு மாயோன் என்பது திருமாலை குறிக்கும்.. அவன் முல்லை நில தலைவன்.. சேயோன் என்பது முருகனை குறிக்கும். அவன் குறிஞ்சி நில தலைவன்.. வேந்தன் என்பது இந்திரனை குறிக்கும்.. அவன் மருதநில தலைவன்.. வருணன் நெய்தல் தலைவன் ஆகிறான்.. கொற்றவை பாலையின் தலைவி.. இவர்களில் எவரும் கடவுள் அல்லர்.. தமிழர் வழிபாடு முன்னோர் வழிபாடே.. தமிழருக்கு மதமும் இல்லை.. மெய்யியல் கோட்பாடே.. ஆசீவகம் என்னும் மெய்யியல் கோட்பாடே.. கி.பி 4 ஆம் நூற்றாண்டில் அழிந்த ஆசீவகமே உங்கள் மொழியில் தமிழர் மதம்.. இன்றைய நடைமுறையில் உள்ள முருகன், சிவன், இந்திரன், காளி, ஐய்யனார்,ஐய்யப்பன் அனைத்தும் மனிதர்களே.. தமிழர் இவர்களுக்கு நடுகல் தோற்றுவித்து வழிபட்டனர்.. இறந்த முன்னோரையும் இயற்கையையுமே வழிபட்டனர் தமிழர்கள்.. (ஆதாரம்- ம.சோ.விக்டரின் மாயோன், சேயோன் புத்தகம் மற்றும் ஆசீவகமும் அய்யனாரும் புத்தகம்).

"துடியன் பாணன் கடம்பன் பறையன்
இந்நான்கில்லது குடியும் இல்லை."
(புறநானுறு- 335- 7)

தமிழர் குடிகள் தோற்றம் முதலில் மலைகளில் தோன்றியதே.. மலைகளில் வேட்டையாடி உண்டனர்.. இவர்கள் வேடவர் மற்றும் குன்றவர் என அழைக்கப்பட்டனர்.. குன்றவரே திரிந்து குறவர் ஆனது.. கால சூழ்நிலையில் ஏற்பட்ட உணவு பற்றாகுறைகாக மக்கள் உணவுக்காக மிருகங்களை தாமே வளர்க்க முடிவு செய்தனர்.. ஏனைய மிருகங்கள் வளர்க்க ஏதுவானதாக இல்லாத நிலையில் மாடு ஆடு போன்றவை மனிதருக்கு கட்டுபட்டன.. ஆனால் அவற்றை மலை முகடுகளில் வளர்பது கடினமாக இருந்தது.. எனவே கொஞ்சம் மக்கள் கீழிறங்கினர்.. காடுகள் அவற்களுக்கு ஏற்றதாக இருந்தது.. எனவே காடுகளில் தங்கி வாழ்ந்தனர்.. கோ என பொருள்படும் மாடுகளை மேய்த்ததால் இவர்கள் கோனார் எனப்பட்டனர்.. மருதத்திற்கும் குறிஞ்சிக்கும் இடையில் வாழ்ந்ததால் இடையர் எனவும் அறியப்பட்டனர்..

எனினும் அங்கும் வாழ்க்கை சுமூகமாக இல்லை.. மழை காலங்களும் வறட்சி காலங்களும் ஆடு மாடுகளை கொத்து கொத்தாக கொன்றன.. எனவே மனிதர் அங்கு இருந்து பள்ளதாக்கிற்கு சென்றனர்.. ஆண்டு முழுவதும் விளையும் தானியங்கள், கிழங்குகளை கண்டறிந்து நிலத்தை சீர்படுத்தி உழவு செய்யத் தொடங்கினர்.. பள்ளத்தில் வாழ்ந்ததால் இவர்கள் பள்ளர் எனவும் வேளாண்மை செய்ததால் வேளாளர் எனவும் அழைக்கப்பட்டனர்.. கடலை நோக்கி சென்று அங்கு வசித்த மக்கள் பரத்தயர் என்றும் அழைக்கப்பட்டனர்..

நாகரீகத்தின் தொட்டில் ஆன மருத நிலத்தில் தான் பிற குடிகள் பிறந்தன.. உழவை மட்டுமே செய்யாமல் உழவு கருவுகளை செய்தவர் தச்சர் ஆனார். மண்பாண்டம் செய்தவர் குயவர் ஆனார்.. நீர்நிலைகளின் வழித்தடத்தை சரிசெய்தவர், ஊரை காவல் காத்தவர் காமிண்டர் ஆனார்.. காமிண்டரே திரிந்து கவுண்டர் ஆனது.. இதில் ஒரு பிரிவினர் வன்னி மர காடுகளை சரிசெய்து அங்கு தொழில் செய்தனர்.. அவர்கள் வன்னியர் ஆனார்கள்..

இந்த உழவு பொருட்களை பண்டமாற்றம் மூலம் தனக்கு தேவையான பிறபொருட்களை அடுத்தவரிம் இருந்து பெற்றனர்.. இதற்காக ஒருவரை தெரிவு செய்தனர்.. அவர் முதலீடு செய்து பண்டம் மாற்றும் பணி செய்ததால் முதலியார் ஆனார்.. செட்டாக வாங்கி விற்பதால் பெருவணிகர் செட்டி ஆனார்..
தங்களை ஒழுங்குபடுத்த மக்கள் அரசனை உருவாக்கினர்.. அந்த அரசனின் அரண்மனை பணிகளை பார்பவர் அகமுடையார் ஆனார்.. போருக்கு முன் எதிரியின் படையை கள்ளதனமாக உளவு பார்த்தவர் கள்ளர் எனப்பட்டனர்.. போரில் ஈடுபட்ட வீரர்கள் மறவர் எனப்பட்டனர்.. இந்த நாகரீக வாழ்வில் பற்று இன்றி மெய்யியல் கற்றோர் பார்ப்பனர் எனப்பட்டனர்.. அவர்களில் வானியல் எனப்படும் சோதிடம் கணித்தோர் கணியர் ஆனர்.. மெய்யியலை மக்களிடம் வள்ளலாய் வழங்கியோர் வள்ளுவர் ஆனர்.. இலக்கியம் பறைந்தோர் பறைஐயர் ஆனர்.. இப்படி குடிகள் விரிவடைந்தன.. (ஆதாரம்- தென்னிந்திய குலங்களும் குடிகளும்.. ஆசிரியர் எட்கர் தஸ்ட்டன்)

ஆனால் இந்த தொழில்வழி குடிகள் பிறப்பின் அடிப்படையாக கொண்டவை அல்ல.. உதாரணமாக தந்தை உழவு செய்தால் அவர் வேளாளர் குடி.. மகன் போருக்கு சென்றால் மறவர்.. புலமை பெற்றால் பறையர் என்று மாறக்கூடியதாகவே இருந்தது.. (எ.கா) கணியன் பூங்குன்றனாரின் தந்தை வணிககுடி.. நக்கீரனாரின் தந்தை கணக்காயர்.

தமிழரின் மணமுறையும் பிறக்குடி மணமாகவே இருந்துள்ளது.. ஆனால் கி.பி பத்தாம் நுற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழர்கள் பிறக்குடி மணமுறையை கைவிட தொடங்கினர்.. பிறக்குடி பெண்கள் தங்கள் தொழிலுக்கு ஏற்றதாக இல்லை என அகமணமுறை மேற்கொண்டனர்.. (எ.காஉழவன் தொழில் தொடங்கும் நேரம் அதிகாலை.. தச்சன், குயவன் வேலை தொடங்கும் நேரம் சூரிய உதயத்தின் பின்.. எனவே உணவு தயார் செய்தல் போன்றவை வேறுபட்டன.. ) இதன்பொருட்டு தமிழர் அகமணமுறை கையில் எடுத்தனர்.. இந்த நேரத்திலேதான் ஆரியர் தமிழக்கத்தில் குடியேறினர்.. அவர்கள் குலக்கல்வியை ஒழிக்க தொடங்கினர்.. கி.பி 11ஆம் நூற்றாண்டில் குலக்கல்வி முற்றிலும் தடைபட்டது.. (குலக்கல்வி என்பது அன்றைய சூழலில் பாடசாலை.. தான் விருப்ப படும் தொழிலை கற்கும் இடம்) இதனால் தொழிலும் இறுக்கம் பெற்றது.. தந்தையே மகனுக்கு தொழில் பயிற்றுவிக்கும் நிலை உருவானது.. உழவனின் மகன் உழவனாகவே தொழில் செய்ய தள்ளப்பட்டனர்.. இதன் பின்பே குடிகள் பிறப்பின் அடையாளமாக மாறியது.. (ஆதாரம்- ம.சோ. விக்டரின் தமிழர் வரலாறு)

கி.பி 15 ம் நூற்றாண்டில் தமிழகத்தை விசயநகர பேரரசு கைப்பற்றியது.. அதன் ஆட்சி காலத்திலேயே தமிழர் குடிகள் உயர்ந்தோர் தாழ்ந்தோராக தரம் பிரிக்கப்பட்டனர்.. கோவில்களில் ஓதியோர் வெளியேற்றப்பட்டு சமஸ்கிருத வேதம் ஓதப்பட்டது. (ஆதாரம்- கரந்தை செப்பேடுகள் நூல்) வள்ளுவர், பறையர் போன்ற புலமை பெற்ற குடிகளும் பள்ளர் சாணர் இருளர் போன்ற பழங்குடிகளும் தாழ்த்தப்பட்டனர்.. பின்னர் வந்த ஆங்கிலேயரும் இதையே நடைமுறையாக்கினர்.. பதிவேடுகளில் பதிவும் செய்தனர்..

இன்று தாழ்த்தபட்டவர்கள் என சொல்லபடும் பள்ளர் மற்றும் பறையர் என்னும் குடிகளில் தோன்றியவையே ஏனைய குடிகள் என அறிக.. தமிழருக்கு சாதி, மதம், கடவுள் அனைத்துமே பிறர் புகுத்தியதே..

பி.கு:
இந்து என்ற மதம் கிடையது.. அருகர் என்ற சமணத்தையும், பௌதிகத்தையும், சைவத்தையும், வைணவத்தையும் இணைத்தே இந்து என்ற மதம் வெள்ளையர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது..
நன்றி ????
View attachment View attachment View attachment View attachment
 
Last edited:
Top