• Please use an working Email account to verify your memebership in the forum

சங்கே முழங்கு

T

The Reader

Guest
இறைபக்தியில் தொடங்கி திராவிடச்சிந்தனையில் தொடர்ந்து பொதுவுடமைச்சிந்தனைக்கு பரிணமித்த பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள் ( 29-04-2020 ). பெரியாரியமும் மார்க்ஸியமும் ஒன்றிணைந்து மக்களை வழிநடத்தவேண்டும் என்று முன்னுணர்ந்த பாவேந்தர் சிந்தனைவழி தொடர்ந்து புகழஞ்சலி செய்வோம்.!

View attachment

சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு

திங்களோடும் செழும் பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்கு கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு
சங்கே சங்கே முழங்கு


வெங்க்கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோள்
எங்கள்வெற்றித் தோள்கள்
கங்கையைப் போல் காவிரிப் போல்
கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில் கமழ்ந்து
வீரம் செய்கின்ற தமிழ் எங்கள்
மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்



 
Last edited by a moderator:
Top