onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1

மதராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டி 75 நாட்கள் உண்ணாநிலை போராட்டம் இருந்து இதே அக்டோபர் 13இல் உயிர் நீத்தவர். விடுதலை போராட்ட வீரர் சங்கரலிங்கனார். இவர் போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியினர் எவ்வளவோ துன்பியல் நிகழ்வுகளை நிகழ்த்தியும் மனம் தளராது, பின்வாங்காது போராடியவர். இவரின் உண்ணாநிலை போராட்ட மேடைக்கு அருகில் சாப்பிட்ட எச்சில் இலைகளை வீசி, நன்றாக உண்டுவிட்டு உண்ணாநிலை போராட்டமா? என்று காங்கிரஸ் பண்ணையார்கள் கேள்வி கேட்டனர். ஆயினும் மனம் தளரவில்லை இந்த மனிதர். தமிழ்நாடு என்ற பெயரைப் பெற உயிரையே துறந்தார். வெறுமனேக் கிடைக்கவில்லை இங்கே தமிழரின் ஒவ்வொரு அடையாளம் ? அது பல உதிரங்களாலும் உன்னத போராட்டங்களாலும் கிடைத்தது.