• Please use an working Email account to verify your memebership in the forum

கோபி பிரையன்ட்-கூடைப்பந்து வீரர்

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

இந்தியாவில் கிரிக்கெட், இங்கிலாந்தில், ஸ்பெயினில், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து ரசிகர்கள் இருப்பது போல அமெரிக்காவில் கூடைப் பந்தாட்ட விளையாட்டுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உண்டு.

கோபி பிரையன்ட் தனது ஆரம்ப ஆண்டுகளை இத்தாலியில் கழித்தார், மேலும் உயர்நிலைப் பள்ளியிலிருந்து நேராக NBA-வில் சேர்ந்தார்.

பிரையன்ட் ஐந்து என்.பி.ஏ ( Dear Basketball ) சாம்பியன்ஷிப் மற்றும் 2008-ம் ஆண்டு மிக உயரிய விருதானா எம்விபி (MVP) விருதை லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணியில் விளையாடி வென்றார்.

சில வருடங்கள் காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், டிசம்பர் 2014-இல் NBA டைம் ஸ்கோரிங் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்தார்; கூடைப்பந்து சகாப்தம் மைக்கேல் ஜோர்டானை விட முன்னேறினார்.

தனது இறுதி ஆட்டத்தில் 60 புள்ளிகளைப் பெற்ற பின்னர் 2016-இல் முழுமையாக ஓய்வு பெற்றார்.

2018-ஆம் ஆண்டில் பிரையன்ட் எழுதிய, Dear Basketball என்ற குறும்படத்திற்கு சிறந்த அனிமேஷனுக்கான ஆஸ்கர் அகாடமி விருது கிடைத்தது.

பிரையன்ட், 2020 ஜனவரி 26-ம் நாள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர்ப் பகுதியான கலாபாஸில் ஹெலிகாப்ட்டர் விபத்திற்குள்ளானது.

ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் தனது 13 வயது மகளுடன் உயிரிழந்துள்ளார். அவரது ரசிகர்கள் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.





கோப் பிரியண்ட் போட்டி ஒன்றில் விளையாடி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு மகளுடன் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் இருவரும் பரிதாபமாக பலியாகினர்.

உலகம் முழுவதும் உள்ள கூடைப் பந்தாட்ட ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

Attachments

  • 0 bytes · Views: 0
Last edited:
Top