• Please use an working Email account to verify your memebership in the forum

கொரோனா உணர்த்தும் உண்மைகள்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

கொரோனா உணர்த்தும் உண்மைகள்:

? இந்த வருடம் அமோகமாக இருக்கும் என்ற சோதிடக் கணிப்புகள்தான் இந்த வருடத்தின் மிகச்சிறந்த நகைச்சுவை ஆகி சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது .

?முடியாது என்று நினைத்த விஷயங்களில் ஒன்று டாஸ்மாக்கை மூடுவது. இன்னொன்று தொலைக்காட்சித் தொடர்களை நிறுத்துவது. இரண்டுமே நடந்துவிட்டது.

? துறை சார்ந்து, அறம் தவறியவர்களாக சினிமாவில் காட்டப்பட்ட மருத்துவர்களும் காவலர்களும் தான் உயிரைப்பணயம் வைத்து முன் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் அதிகம் வராத செய்திகளில் இப்போது அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

? சினிமா நடிகர்கள் நடிகைகள் கிசுகிசுக்கள் முக்கியமற்று போய் விட்டன.


?பிறரைப் பார்த்து பிரதியெடுத்த போலியான கொண்டாட்டங்கள் அனைத்தும் விடை பெறுகின்றன. நண்பர்களை அழைத்து, கேக் வெட்டி நடந்த பிறந்த நாள் கொண்டாட்டம், வாழ்த்து அட்டையைக் கைகளால் வரைந்து, கூடி அமர்ந்து கைதட்டி வாழ்த்தி, மகிழ்ச்சியாக நடைபெறு‌கிறது.


? பெரியவர்களிடம் பேசினால் போர் அடிக்காது என்று உணர்கிறார்கள் குழந்தைகள்.

? இவ்வருடம் தங்கம் இல்லாமல் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.



? ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ செல்லாமல் நம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும் என்பதை உணர்ந்துள்ளார்கள்.

? பாதிரியார், அர்ச்சகர்கள், குருக்கள், பூசாரி, மௌலவி, மதகுருமார்கள், சாமியார்களால் ஒரு நோயாளியையும் காப்பாற்ற முடியாது.


?தங்கம் மற்றும் எரிபொருளுக்கு நுகர்வோர் இல்லாமல் உலகில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

?இந்த உலகம் தங்களுக்கும் சொந்தமானது என்று விலங்குகளும் பறவைகளும் முதல்முறையாக உணர்ந்தன.



?உலகின் பெரும்பாலான மக்கள் தங்கள் வேலையை வீட்டிலிருந்தும் செய்யலாம்.

?நாமும் நம் குழந்தைகளும் 'பாஸ்ட் பூட் ' இல்லாமல் கூட வாழலாம்.

?தூய்மையான வாழ்க்கை வாழ்வது கடினமான காரியம் அல்ல.


?நடிகர்கள் பொழுதுபோக்குக் கலைஞர்கள் மட்டுமே, வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள் அல்ல.


?பணத்திற்கு மதிப்புக் குறைவே.

?ஒற்றைக் குடும்பத்தை விடக் கூட்டுக் குடும்பம் சிறந்தது
 
Top