• Please use an working Email account to verify your memebership in the forum

கார்ப்ரேட் இந்தியா

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

சாலைகளில் பயணிப்போருக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை எப்பொழுது தோன்றியது? கல்வி தனியாருக்கு எப்பொழுது தாரை வார்க்கப்பட்டது? மருத்துவத்தில் எப்பொழுது தனியார் ஊடுருவி கொடி நாட்டியது? காடுகளும் மலைகளும் எப்பொழுது தனியாரின் வேட்டை காடாகியது? எல்லாவற்றிலும் தனியார்மயம் தாராளமயம் என்று ஆனது ஏன்?

ஒன்றை நான் மீண்டும் மீண்டும் சொல்வதால் நான் காங்கிரஸ் மீது பழி சுமத்துவது போல் தெரியலாம்.. ஆனால் அவர்களை தவிர்த்து எழுத இயலாது என்பதே நிதர்சனம்.. இன்று NEP மற்றும் EIA எதிர்த்து குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.. ஆனால் ஒன்றை மட்டும் உணருங்கள்... இன்னும் பல திட்டங்களுக்கு குரல் எழுப்பிகொண்டே இருக்க வேண்டியதுதான்.. ஏனெனில் இதன் விதையை நாம் 1991லேயே போட்டுவிட்டோம்.. இன்று அது மரமாக வளர்ந்துள்ளது..

1991ல் இந்திய ஒன்றியம் அன்றைய காங்கிரஸ் அரசால் WTO வில் போட்ட ஒப்பந்தத்தில் GATT (General Agreement of Tarrif and Trades) மற்றும் GATS (General Agreement of Traders Services) போன்றவை குறிப்பிடத்தக்கவை.. இந்த புதிய பொருளாதார கொள்கையை உலகில் பல நாடுகள் ஏற்றுக்கொண்டது போல இந்தியாவும் ஏற்றுக்கொண்டது.. இதில் குறிப்பிட்டுள்ள முக்கியமான விடயங்கள்

1. உலக நாடுகள் அதன் நிறுவனங்கள் எங்கு வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம்..
2. அங்குள்ள மனித சக்திகளை தங்களின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்திற்கு உபயோகிக்கலாம்..
3. அதற்கு ஏற்படும் தடைகளையும் உள்நாட்டு நிலைமைகளையும் அந்த நாடே சரிசெய்து தரவேண்டும்..
4. தடையில்லா வர்த்தகத்திற்காக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவத்திற்கு அரசு தேவையான அனைத்தையும் முன்னின்று செய்து தர வேண்டும்..
என்பன போன்ற பல இந்த ஒப்பந்தத்தில் உள்ளது..

மனித வளத்தில் இந்தியா உலகில் இரண்டாம் இடம்.. எனவே இந்தியா மிகப்பெரிய சந்தையாக உலகநாடுகளால் பார்க்கப்பட்டது.. உலகவங்கி தடையில்லா வர்த்தகத்திற்கு உள்கட்டமைப்பு சரிசெய்ய வேண்டும் என்று நிதி வழங்கியது.. சாலைகள் சரியாக இருக்க வேண்டும்.. அதை பராமரிக்க தனியாரின் கையில் சாலை இருக்க வேண்டும் என்றது.. நாம் உலகவங்கியின் ஆணைக்கு இணங்கி சாலைக்காக வளங்களை அழித்து சாலைகளை உருவாக்கினோம்.. சாலைகளில் சுங்க சாவடியையும் உருவாக்கினோம்..

கல்வியில் போதிய வளர்ச்சி இல்லை.. உலக பொருளாதாரத்தில் நீங்கள் பங்காற்ற உங்கள் கல்வி முறையையும் ,கற்பித்தல் முறையையும், கல்வி வழங்கும் முறையையும் மாற்ற வேண்டும் என்றது.. நாம் உலகவங்கியின் DPEP (District Primary Education Program) செயல்படுத்தினோம்.. கல்வியில் தனியார் பங்களிப்பை ஊக்குவித்தோம்.. விளைவு நம் கல்வி வியாபாரம் ஆகியது.. நாம் அவர்களுக்கு அடிமை பணியாளர்களை உருவாக்கினோம்..

வேலைவாய்ப்பு பெருக்கம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனத்தை அனுமதித்து அவர்களுக்கு இடமும் தொழிலாளர்களும் வளங்களும் வரைமுறை இன்றி அள்ளிகொடுத்தோம்.. அவர்கள் எந்த இடத்திலும் தொழில் தொடங்கலாம்.. அவர்களுக்காக நிலத்தை அரசே கையக படுத்தி கொடுத்தது.. இன்று நீருக்கு குடம் ஏந்தி அலைகிறோம்..

இப்படி கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம்,சாலை போன்ற அனைத்திலும் உலகவங்கியின் ஒப்பந்தத்தின் படி மெல்ல மெல்ல தனியார்மயம் ஆனோம்.. அவர்களின் IMF வைத்தே நீங்கள் வளர்கிறீர்கள்.. உங்கள் உள்நாட்டு உற்பத்தி பெருகுகிறது என்று ஆய்வறிக்கை வெளியிட்டு நம்மை திசை திருப்பினர்.. ஆனால் நாம் நம்முடைய வளங்களையும் சேவைகளையும் இழந்ததை உணரவே இல்லை..

இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கின்ற உலக பொருளாதார கொள்கை NEP மற்றும் EIA 2020 போன்றவற்றை கொண்டு வந்துள்ளது.. அவர்களின் இயற்கை வள கொள்ளைக்கு தடையாக இருக்கும் சட்டங்களை உடைத்தெரிய ஆரம்பித்துள்ளது.. இந்த அரசும் அதை நிச்சயம் செயல்படுத்தும்.. காரணம் போடப்பட்ட ஒப்பந்தங்கள்..

மேலும் SDG4 2030, STARS போன்ற ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திட்டு உள்ளது.. இவை அனைத்துமே மேலும் மேலும் தனியாரை ஊக்குவிக்கும் செயலே.. எனவே நாம் எதிர்க்க வேண்டியது மோடியோ மன்மோகனோ அல்ல.. அவர்கள் வெறும் கூலியாட்களே. முதலாளிகளான உலக வங்கியையும் அதன் திட்டங்களையுமே..

???????
 
Top