Phoenix
Elite member
- Messages
- 1,040
- Points
- 113
Reputation:
- Thread starter
- #1
கள்வனின் காதலி
என் -
இரவுகளைத் திருடினாய் என்றேன்
நிலவைத் தந்தேன் என்றாய்!
தனிமையைத் திருடினாய் என்றேன்
இனிமைகளைத் தந்தேன் என்றாய்!
வெட்கம் திருடினாய் என்றேன்
ஏக்கம் தந்தேன் என்றாய்!
வார்த்தைகளைத் திருடினாய் என்றேன்
மௌனங்களைத் தந்தேன் என்றாய்!
உறக்கம் திருடினாய் என்றேன்
கனவுகளைத் தந்தேன் என்றாய்!
உறவுகளைத் திருடினாய் என்றேன்
உயிரைத் தந்தேன் என்றாய்!
இதயத்தை திருடினாய் என்றேன்
இச்சைகளைத் தந்தேன் என்றாய்!
என் கள்வனே!
கடைசியில்...
முத்தம் திருடினாய் என்றேன்
மொத்தமும் தந்தேன் என்றாய்!
என் -
இரவுகளைத் திருடினாய் என்றேன்
நிலவைத் தந்தேன் என்றாய்!
தனிமையைத் திருடினாய் என்றேன்
இனிமைகளைத் தந்தேன் என்றாய்!
வெட்கம் திருடினாய் என்றேன்
ஏக்கம் தந்தேன் என்றாய்!
வார்த்தைகளைத் திருடினாய் என்றேன்
மௌனங்களைத் தந்தேன் என்றாய்!
உறக்கம் திருடினாய் என்றேன்
கனவுகளைத் தந்தேன் என்றாய்!
உறவுகளைத் திருடினாய் என்றேன்
உயிரைத் தந்தேன் என்றாய்!
இதயத்தை திருடினாய் என்றேன்
இச்சைகளைத் தந்தேன் என்றாய்!
என் கள்வனே!
கடைசியில்...
முத்தம் திருடினாய் என்றேன்
மொத்தமும் தந்தேன் என்றாய்!