• Please use an working Email account to verify your memebership in the forum

கரும்பு ஜூஸ்

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

கரும்பு ஜூஸ்சின் பயன்களை அறிந்து கொள்வோம்!!

கரும்பு ஜூஸை சாதாரணமாக தாகத்திற்காக அருந்துவிட்டுக்
கடந்து செல்கிறோம். ஆனால் அதனால் உடலுக்கு பல நன்மைகள் இருக்கின்றன தெரியுமா..

கரும்பு ஜூஸ் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா..?வெயிலில் அலைந்து கொண்டிருக்கும்போது எங்கோ ஒரு மூளையில் விற்றுக் கொண்டிருக்கும் கரும்பு ஜூஸை அருந்தும்போது கிடைக்கும் சுகத்திற்கு ஈடு இணையே இல்லை.

பொதுவாக கரும்பு ஜூஸை எல்லோரும் பருகும்போது ஒரு கும்பல் மட்டும் கரும்பு ஜீஸை தவிர்ப்பார்கள். அவர்கள்தான் டயபிட்டீஸ்(Diabetic patients). அதிக அளவிலான சர்க்கரை கரும்புச் சக்கையில் இருக்கிறது என்கிறது உண்மைதான் என்றாலும் அது உடல் பருமனை அதிகரிக்கும் என்பது மூடநம்பிக்கையே. இதில் உள்ள இயற்கையான சர்க்கரை புரோட்டின் மற்றும் கார்போஹைட்ரேட்டை அதிகமாகக் கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி 300ml கரும்புச் சாறில் 111 கலோரிகள் நிறைந்துள்ளன. அதேபோல் உடலில் எங்கெல்லாம் கொழுப்பு அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் கரையும் அதிசயத்தைக் காணலாம்.

இது உங்கள் மெட்டாபலிசத்தை அதிகரித்து உடனடி ஆற்றலை அளிக்கும். ஜீரண சக்திக்கு எளிய மருந்து கரும்புச் சாறு . இதில் ஜீரண சக்திக்கு உதவும் நார்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாகும் வாய்ப்பு உள்ளது. கரும்புச் சாறோடு சேர்க்கப்படும் இஞ்சியும் ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு மிக முக்கியம் எலக்ட்ரோலைட்ஸ். இவை இளநீர், குளுக்கோஸ் போன்ற பானங்களுக்கு அடுத்ததாக கரும்புச் சாறில் அதிகமாக உள்ளன.

இது உடல் சோர்வடையாமல் தக்க வைக்க உதவும். நுரையீரல் செயல்பாடும் அதிகரிக்கும். கரும்புச் சாறில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்களின் உறுதித் தன்மைக்கு உதவும். வாய் துர்நாற்றத்தை அகற்றும்.

இதில் முக்கிய மருத்துவ குணம் என்னவெனில் புற்று நோய் கிருமிகளைக் கட்டுப்படுத்தும். குறிப்பாக பெண்களைத் தொடரும் மார்பகப் புற்று நோய்த் தொற்றை ஆரம்பத்திலேயே அகற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் மட்டுமன்றி சருமம் தொடர்பான பிரச்னையும் குறிப்பாக முகப்பருக்களை அழிக்கும் ஆற்றல் கரும்புச் சாறில் உள்ளது. இதில் உள்ள ஹைட்ராக்ஸி ஆசிட் இதற்கு உதவுகிறது.

செயற்கையாக செய்யும் pepsi, sprite, 7up.., போன்ற குளிர்பானங்களை தவிர்ப்போம். இயற்கையாக செய்யும் சாத்துக்குடி, கரும்பு போன்ற குளிர்பானங்களை அருந்தி உடல் அளவிலும் ஆரோக்கியம் பெறுவோம் பாரம்பரியத்தை காத்து நமது நாட்டு விவசாயிகளையும் பொருளாதார அளவில் பயன் பெற செய்வோம் ??
 

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

கரும்புசாறை குடிப்பதை விட கரும்பாகவே எடுத்துகொள்ளும் போது மேற்கூறியவற்ற பலன்களுக்கு மேல் பற்களின் ஈர்களும் தாடையும் வலிமையடையும்..
 
Top