Phoenix
Well-known member
- Messages
- 976
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
கரிப்பு மணிகள்!
என்னுடன் நீ சண்டையிட்ட முதன்முறை
இமை மீறும் என் வெந்நீர் துளிகளின்
உவர்ப்பை நினைத்து உன் மீது நானும்
கோபம் கொள்வதா?
அன்றி -
என் கண்ணீரும் கரிக்கும் என்று
உணர்த்திய உனக்கு
நன்றி சொல்வதா?
எப்போதும் போல
குழம்பியே நிக்கிறேன் நான்
மழலையென!
விழிநீர் துடைக்க வர மாட்டாயா?
என்னுடன் நீ சண்டையிட்ட முதன்முறை
இமை மீறும் என் வெந்நீர் துளிகளின்
உவர்ப்பை நினைத்து உன் மீது நானும்
கோபம் கொள்வதா?
அன்றி -
என் கண்ணீரும் கரிக்கும் என்று
உணர்த்திய உனக்கு
நன்றி சொல்வதா?
எப்போதும் போல
குழம்பியே நிக்கிறேன் நான்
மழலையென!
விழிநீர் துடைக்க வர மாட்டாயா?