• Please use an working Email account to verify your memebership in the forum

கட்சிகளின் வரலாறு - திமுக

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

திராவிட முன்னேற்ற கழகம் எனப்படும் திமுக 1949 ஆம் ஆண்டு செப் 17 ல் தொடங்கப்பட்டது என்று நாம் அறிவோம்.. ஆனால் அதன் ஆணிவேர் எங்கே? அதன் சின்னம் உதய சூரியன் யாருடையது என்பதை காண்போம்.

1891 ல் திராவிட மகாஜன சபை என்னும் இயக்கத்தை தோற்வித்து திராவிட இயக்கத்தின் முன்னோடியாக திகழ்ந்தவர் அயோத்தி தாச பண்டிதர்.. இதன் தொடர்ச்சியாக 1919 இல் திராவிட சிந்தனையுடன் தென்னிந்திய நல அமைப்பு தொடங்கப்பட்டது.. 1925இல் பெரியார் திராவிட சித்தாந்தத்தை முன் வைத்து சுய மரியாதை இயக்கத்தை தொடங்கினார்.. இந்த இயக்கம் 1944ல் திராவிட கழகம் என பெயர் மாற்றம் பெற்றது..

1949 இல் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடால் பிரிந்து அரசியலில் ஈடுபட போகிறோம் என அறிவித்தார் அண்ணாதுரை.. 1949 செப் 17ல் கட்சியை அறிவித்தார்.. அடுத்த நாளே (செப் 18) கருப்பு சிவப்பு வண்ண கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார்..

சின்னம்:
உதய சூரியன் சின்னம் முக்கியதுவம் பெற்றது.. 1957 தேர்தல் முதல் இன்றுவரை திமுகவின் சின்னம் அது.. அந்த சின்னம் எங்கே யாரால் உருவாக்கப்பட்டது?
ரெட்டைமலை சீனிவாசன் அய்யாவால் நடத்தப்பட்ட சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட இயக்கமே சூரிய கட்சி என்று மக்களால் அழைக்கப்பட்டது.. தன்னுடைய பெயரான ரெட்டைமலையில் ஓர் சூரியன் உதிப்பது போன்ற சின்னத்தை முதன்முதலில் குடியாத்தம் இதழில் வெளியிட்டவரும் இவரே..1929 இல் சுயமரியாதை இயக்க கூட்டத்திற்காக மீண்டும் ரெட்டைமலை அய்யா மலையில் உதிக்கும் சூரியனில் நான்கு தலைவர்கள் முகம் தெரிவது போன்ற சின்னத்தை வடிவமைத்தார்.. அந்த தலைவர்கள் திராவிட இயக்கத்தை முதலில் முழங்கிய டி.கே நாயர், தியாகராயர், பனகல் அரசர், பெரியார்..

1948 இல் ராமசாமி படையாட்சி அவர்களால் தொடங்கப்பட்டது வன்னியர் குல சத்திரிய இயக்கம்.. ராமசாமி படையாச்சி 1952ல் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டு 15 சட்டமன்றம் 6 மக்களவை இடங்களில் வென்றார்.. 1954ல் ராமசாமி படையாச்சி தன் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார்.. அக்கட்சியின் செயலாளர் கோவிந்தசாமி படையாட்சி அவர்கள் 1954ல் உழவர் கட்சி என்னும் கட்சியை தொடங்கி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்..

1956 இல் திமுக போட்டியிட முடிவு செய்தபின் கோவிந்தசாமி படையாட்சி தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.. அதன்பின் அண்ணா தேர்தல் ஆணையத்திடம் கோவிந்தசாமி படையாட்சி எங்களுடன் உள்ளார்.. எங்கள் ஆதரவுடனே அவர் தேர்தலில் போட்டியிட்டார்.. எனவே அதே உதய சூரியன் சின்னமே எனக்கு வேண்டும் என்று கேட்டு பெற்றார்..

1957 முதல் இன்று வரை முடக்காமல் தொடரும் ஒரே மாநில கட்சி சின்னம் என்ற பெருமை உதய சூரியனுக்கு உண்டு.. எம்ஜியார் வைகோ போன்றோர் பிரிந்த போதும் சின்னம் முடக்கவில்லை..
???????????
 
Top