• Please use an working Email account to verify your memebership in the forum

ஒத்த ரூபாய் தீர்ப்பு

R

Ravanan

Guest
View attachment View attachment


எனக்குத் தெரிந்த 16 சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகளில் 8 பேர் அப்பழுக்கற்ற நீதிபதிகள் 6 பேர் உறுதியாக ஊழல்பேர்வழிகள் 2 பேர் நல்லவர்களா கெட்டவர்களா என்று கணிக்க முடியாதவர்கள் என்று 16 பேர் பட்டியலை ரகம் பிரித்து மூடிய உறைக்குள் வைத்து பிரஷாந்த் பூஷனின் தந்தை, சீனியர் வழக்கறிஞர் முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் 2009 ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார் 11 வருடங்களாக அந்த சீலிடப்பட்ட உறை பிரிக்கப்படாமலேயே இருக்கிறதா ?

ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினால் நீங்கள் சிறைக்குப் போக வேண்டியது வருமென்று எச்சரித்த நீதிபதிகளிடம் அதற்கும் தயார் என்றார் சாந்தி பூஷன். பிரஷாந்த் பூஷன் அவருடைய மகன்.
 
R

Ravanan

Guest
வழக்கறிஞர் பூஷனின் கருத்தாழமிக்க வாக்குமூலம் காலத்தால் அழியாதது. 02.08.2020 அன்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 175 பத்திகளையும் 134 பக்கங்களையும் கொண்ட உறுதிமொழித்தாள் ஒன்றை உச்சநீதிமன்றத்தில் அளித்தார் அதில் கூறப்பட்ட விபரங்கள் நீதியின்பால் நம்பிக்கை கொண்டோருக்கு பலத்த அதிர்ச்சியை அளிக்கும்.

பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட காரணமான புகார் அளித்த மஹேக் மகேஸ்வரியின் புகார் நகல் தனக்கு தரப்படவில்லை என்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அவரது கருத்து அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட கருத்துரிமைக்கு உட்பட்டது என்றும்¸ நீதிபதியின் மீதான தனிப்பட்ட அவதூறும் நீதிமன்ற அவமதிப்பும் வேறு வேறென்றும்¸ நல்லெண்ணம் கொண்டு நீதித்துறையை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு உள்ளது எனவும் பூஷன் குறிப்பிட்டார்.

இதுதவிர இந்தியன் எக்ஸ்பிரஸ்¸ தி ஹிந்து¸ தி வயர்¸தி குயின்ட் போன்ற ஊடகங்களில் கருத்து உரிமைக்கு ஆதரவாக வெளியான செய்திகளையும் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி ஷா போன்ற சட்ட மேதைகளின் கருத்துக்களையும்¸ விமர்சனங்களை ஒடுக்குவதன் மூலம் நீதித்துறையை மதிப்பார்கள் என்பது தவறான எண்ணம் என்றும் சுட்டிக்காட்டினார்.

பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய சிறுசிறு காவி குழுக்களால் பட்டியல் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர் கொல்லப்பட்டதையும் அதன் பின்னணியில் அரசியல் சக்திகள் இருந்ததையும்¸ காவல்துறை மிக அரிதாகவே நடவடிக்கை எடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொய் தகவல்களும் போலி செய்திகளும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பப்பட்டு அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக்கப் பட்டதையும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியன சிறுபான்மையினருக்கும் பட்டியல் இனத்தவருக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டினார் பூஷன்.

2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்டம் மதத்தின் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டுவதையும் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டதையும் பூஷன் பதிவு செய்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டதையும்¸ ஜாமியா கல்வி வளாகத்தில் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதையும் அத்தாக்குதலை காவல்துறையினரே முன்னின்று நடத்தியதையும் அவர் தனது வாக்குமூலத்தில் சுட்டிக்காட்டினார்.
 
R

Ravanan

Guest
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆயுதம் தாங்கிய குண்டர்கள் காவல்துறையினரின் பார்வையின் கீழ் அனுமதிக்கப்பட்டு அவர்கள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் அடித்து நொறுக்கியதையும் பின்னர் காவல்துறையினர் அவர்களை பாதுகாத்து பத்திரமாக¸ இரகசியமாக வெளியே அனுப்பியதையும்¸ காணொளி காட்சிகள் மூலம் மாணவர்கள் மீதான மூர்க்கத்தனமான தாக்குதல்கள் நிகழ்ந்தது அம்பலமானதையும் பதிவு செய்தார் . ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அம்மாநிலம் மூன்றாக பிளக்கப்பட்டு¸ குடியாட்சியின் சிறு சிறு உரிமைகளைக் கூட பெறாமல் முன்னாள் காஷ்மீர் முதலமைச்சர் சிறையிலடைக்கப்பட்டதையும் பூஷன் குறிப்பிட்டார்.

கடந்த ஆறு வருடங்களில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வேலை இழப்பு ஆகிய இரண்டும் உச்சத்தைத் தொட்டு கோவிட்-19 காலகட்டத்தில் 10 கோடிக்கு மேலானோர் தங்கள் வேலைகளை இழந்துள்ளதையும் பூஷன் பதிவு செய்தார். அரசியலமைப்பு சட்டத்தின் அங்கங்களான தேர்தல் ஆணையம்¸ தலைமை கணக்காயர்¸ சி.பி.ஐ¸ நடுவண் விழிப்புணர்வு ஆணையம்¸ போன்ற பொது அமைப்புகள் சீரழிக்கப்பட்டதையும் அவர் பதிவு செய்தார்.

தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களாக பிரதமருக்கும்¸ உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நெருக்கமானவர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையையும் சுதந்திரமும் மிகப்பெரிய கேள்விக்குறியானதையும்¸ விதிகளை பிற்போக்குத்தனமாக மாற்றியதன் மூலம் ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றியதும் முன்னர் 7.5 விழுக்காடு உச்ச வரம்பு பெருநிறுவன நன்கொடைகள் வழங்கும் நிலை மாறி எவ்வித கட்டுப்பாடுமற்ற ரகசிய அரசியல் நன்கொடையை ஊக்குவிக்கும் வழிகளையும் தேர்தல் பத்திரங்கள் மூலம் மறைமுகமாக நன்கொடை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்திய பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் தேர்தல் நன்கொடை மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடந்த மூன்று வருடத்தில் பெற்றதையும் மொத்த நன்கொடைகளில் 90 விழுக்காட்டைப் பெற்றதையும் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சட்ட திருத்தங்கள் மறைமுகமாக பண மசோதா என்ற வடிவில் கொண்டு வரப்பட்டு பாரதிய ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவையில் எவ்வித விவாதமும் இன்றி சட்டப் புறம்பான வழியில் நிறைவேற்றப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தம் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட குறிப்பு தலைமை கணக்காயர் அறிக்கைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அரசால் உச்சநீதிமன்றத்தில் தரப்பட்டது பற்றியும் பாராளுமன்ற குழுவிற்கு முழு விபரங்களையும் தராமல் அரைகுறை அறிக்கையை கொடுத்தது பற்றியும், தலைமை கணக்காயர் அலுவலகம் அரசுக்கு பணிந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் லோக்பால் பொறுப்பிற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை எனவும் லோக்பால் அமைப்பு ஒரு வழக்கைக் கூட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை எனவும் லஞ்ச ஊழலை கண்டுபிடிப்பவரின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்ட விசில் புளோயர் சட்டம் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தாமையையும் சுட்டிக்காட்டியுள்ளார் . ரஃபேல் ஒப்பந்தத்தில் அலுவலக ரகசியங்களை பாதுகாக்கும் காலனிய கால சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமென ரஃபேல் ஊழலை வெளிக்கொண்டு வந்தவர்கள் மிரட்டப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்
சி.பி.ஐ அமைப்பின் சுதந்திரம் தரம் தாழ்ந்து போனதும்¸ சிபிஐ இயக்குனர் ஒருவர் ரஃபேல் ஒப்பந்தத்தை விசாரிக்க முனைந்ததால் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டதையும் அவருக்கு பதிலாக நாகேஸ்வர ராவ் என்பவர் இயக்குனராக நியமிக்கப்பட்டதையும் அவர் ஒரே நாளில் 40 பேரை அரசுக்கு ஆதரவாக இட மாற்றம் செய்ததையும் குறிப்பிட்டார்.

மத்திய விழிப்புணர்வு ஆணையத்தின் தலைமையிலிருந்து தலைமை அதிகாரி பல வருடங்களாக நடத்திய சோதனைகளில் சஹாரா மற்றும் பிர்லா குழுமங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பிரதமர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்கள் கணக்கில் வராத பணத்தை பெருமளவில் பெற்றதை காட்டும் ஆவணங்கள் மறைக்கப்பட்டதையும் குறிப்பிட்டார் தேசியப் புலனாய்வு குழுவானது இந்நாட்டின் மிக நேர்மையான மனித உரிமைப் போராளிகள் மீதும்¸ அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் மீது வழக்குத் தொடுக்கும் கருவியாக மாறியது எனவும் எவ்வித கட்டுப்பாடுமற்ற பெருமுதலாளிகள் நாட்டின் வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் ஏமாற்றி லட்சக்கணக்கான கோடிகளை சூறையாடினர் எனவும் இவர்கள் லண்டன் அல்லது ஆண்டிகுவா அல்லது பெர்முடா போன்ற வரி ஏய்ப்பு சரணாலய நாடுகளில் குடி புகுந்தனர் எனவும்¸ அரசு அவர்களை இந்நாட்டிற்கு பிடித்து வருவதற்காக வெறும் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது எனவும் மத்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் அழிக்கப்பட்டது எனவும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் நீக்கப்பட்டதும் அவருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட உர்ஜித் பட்டேலும் வெளியேற்றப்பட்டார் எனவும்¸ ரகுராம் ராஜன் கடன் மோசடி செய்தவர்களின் சொத்துக்கள் குறித்து விசாரிக்க முயன்றதாலும்¸ உர்ஜித் பட்டேல் ரிசர்வ் வங்கியின் ஒரு லட்சம் கோடி பணத்தை அரசுக்குத் தர மறுத்ததாலும் வெளியேற்றப்பட்டார் எனவும்¸ 90 விழுக்காடு வெகுஜன ஊடகங்கள் அரசின் பிரச்சார நிறுவனங்களாக மாற்றப்பட்டன எனவும் குறிப்பிட்டார்.
நியாயப்படுத்த முடியாத அரசின் நடவடிக்கைகள் மூடத்தனமாக நியாயப்படுத்தப்பட்டன எனவும் கோவிட்-19 முழுஅடைப்பு¸ பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட்டன எனவும்¸ இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு ஊடகங்களால் விசிறி விடப்பட்டது எனவும்¸ நூற்றுக்கணக்கான கோடி அரசு விளம்பரங்கள் மூலம் ஊடகங்கள் கைப்பற்றப்பட்டன எனவும்¸ மறுக்கும் ஊடகங்கள் மிரட்டப்பட்டு வழிக்கு கொண்டு வரப்பட்டன எனவும்¸ பேஸ்புக்¸ டுவிட்டர்¸ இன்ஸ்டாகிராம் போன்றவை அரசால் கட்டுப்படுத்தப்பட்டன எனவும் குறிப்பிட்டார்.
கடந்த நான்கு தலைமை நீதிபதிகளின் காலகட்டத்தில் மக்களுடைய உரிமைகள் நசுக்கப்பட்டன எனவும்¸ அரசின் ஒடுக்குமுறை போக்கை உச்சநீதிமன்றம் கட்டுப்படுத்த தவறியது எனவும் கொலிஜியம் என்ற நீதிபதிகளை நியமிக்கும் உரிமை கொண்ட முதுநிலை நீதிபதிகள் குழுவானது செயலிழந்ததையும்¸ கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட 43 பரிந்துரைகள் ஏற்கப்படாததையும் அவர் சுட்டிக்காட்டினார். நீதிபதி இர்ஷாத் அலி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட பரிந்துரை நிரகாரிக்கப்பட்டதையும்¸ குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி அகில்குரேஷி முதலாவதாக பம்பாய்க்கும் பின்னர் மத்திய பிரதேச தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டதையும் அதன் பின்னர் அவர் திரிபுரா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

காஷ்மீரில் இன்டர்நெட் வசதிகள் தடுக்கப்பட்ட வழக்கையும்¸ ஆட்கொணர்வு நீதிப்பேராணை தொடர்பாகவும்¸ ஜவஹர்லால் நேரு கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாகவும் தொடுக்கப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாததையும் திரு.அமித்ஷா அவர்களின் கொலைச் சதி வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா மர்மான முறையில் இறந்தது தொடர்பான வழக்கையும்¸ ரஃபேல் ஊழல் தொடர்பான வழக்கையும் விசாரிக்கும் போது மூடி முத்திரை இடப்பட்ட உறையில் ஆவணங்களை நீதிமன்றத்திற்கு மட்டும் கொடுத்து எதிர் தரப்பிற்கு அவ்வழக்கு ஆவணங்கள் தரப்படாமலேயே அவ்வழக்குகள் முடிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
R

Ravanan

Guest
2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்னாள் தலைமை நீதிபதி கோகாய் சஹாரா பிர்லா புலனாய்வு தொடர்புடைய வழக்கின் போது¸ சஹாரா குழுமத்தில் கைப்பற்ற ஆவணங்களில் ஒன்றில் அன்றைய குஜராத் முதல்வருக்கு 25 கோடி கொடுத்தற்கான குறிப்பு ஒன்று கிடைத்தது எனவும்¸ ஆனால் அந்த ஆவணங்களைப் பெற்ற வருமான வரித்துறையானது சி.பி.ஐ-க்கு அவற்றினை கொடுத்திருக்க வேண்டும் எனவும்¸ ஆனால் அவ்வாறு நடக்கிவில்லை எனவும்¸ மன்மோகன்சிங் தலைமையிலான அரசானது இவ்வழக்கை சரிவர தொடராதது ஆச்சரியம் அளிக்கவில்லை எனவும்¸ அதில் தொடர்புடைய அனைவரும் அவரது ஆட்சிக்கால அதிகாரிகள் எனவும்¸ ஆனால் அடுத்து வந்த அரசும்¸ அவற்றை கிடப்பில் போட்டனர் எனவும் தற்போதைய பிரதமர் தனது தேர்தல் கூட்டங்களில் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்றால் திருமதி.ஜெயந்தி நடராஜன் அவர்களுக்கு ஜெயந்தி வரி கொடுக்க வேண்டும் என்று பேசினார், எனவே பிர்லா குழுமம் டைரி குறிப்புகள் பற்றி அவர் அறிந்திருக்கவேண்டும் எனவும்¸ ஆனால் அன்றைய குஜராத் முதல்வருக்கு 25 கோடிகள் கொடுக்கப்பட்டதாக சொல்லும் டைரி குறிப்பே தற்போதைய அரசு அவ்வழக்கின் விசாரணையை தொடராமல் இருப்பதற்கு காரணம் எனவும்¸ இது தவிர நவம்பர் 2014ஆம் ஆண்டு திருவாளர் மோடி அவர்கள் அரசாங்கம் அமைந்த போது வருமான வரித்துறை சஹாரா குழுமத்தை சோதனையிட்டது என்றும் பணமாக மட்டும் 137 கோடி கைப்பற்றப்பட்டது எனவும் 113 கோடி ரூபாய் என்று,யாரால்¸ எவ்வாறு¸ எந்த இடத்தில் கொடுக்கப்பட்டது என்ற குறிப்புகளைக் கொண்ட தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன எனவும்¸ குஜராத் முதல்வர் திருவாளர் மோடி அவர்களுக்கு 40 கோடி ரூபாய் 9 தடவைகளாக கொடுக்கப்பட்டதாக குறிப்புகளில் கண்டிருந்ததையும் பூஷன் சுட்டிக்காட்டினார். இது தவிர காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித்¸ மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் போன்றவர்களும் பயன்பெற்றதைக் காட்டும் குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன எனவும்¸ ஆனால் இந்த ஆவணங்கள் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்படவில்லை எனவும்¸ மேற்சொன்ன ஆவணங்கள் லஞ்சம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் குற்றம் நடந்ததை தெளிவாக காட்டிய பின்னும்¸ வழக்கில் இவ்வாறான டைரி குற்றவியல் புலன் விசாரணைக்கு போதுமானது என உச்சநீதிமன்றத்தின் முன் தீர்ப்புகள் இருந்த போதிலும் பிர்லா சஹாரா தாள்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவேயில்லை எனவும்¸ அந்த விசாரணைக்கு பொறுப்பாக இருந்த கே.வி.சவுத்திரி என்ற வருமானவரி உறுப்பினர் தலைமை கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட போது அதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஜகதீஷ் சிங் கேகர் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தன எனவும்¸ அவ்வழக்கானது நீதிபதிகள் கேகர் அமர்வில் இருந்து மாற்றப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது எனவும்¸ அவ்வழக்கின் தீர்ப்பு தவறானது என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் துஷ்யந்தவே அவர்கள் எழுதிய கட்டுரையும் அவர் குறிப்பிட்டார்.

நீதிபதி அருண்மிஸ்ரா தனது மருமகன் திருமணத்தை டெல்லி அரசு ஒதுக்கீடு செய்த வீட்டிலும்¸ குவாலியரிலும் நடத்திய போது மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அத்திருமண வரவேற்பு நிகழ்வில் குவாலியரில் கலந்து கொண்டதையும் சஹாரா வழக்கு தீர்ப்பில் அவர் பயன்பெற்றதையும் பூசன் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்றம் தனது நடத்தை விதிகளை வகுத்துள்ளது எனவும் அதன்படி அரசியல் வாதிகளுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும் எனவும்¸ அவ்வாறான நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது அவ்வாறான விதிகளுக்கு மாறாக தனது வீட்டு திருமணத்தில் பங்கு பெற்ற ஒருவரது வழக்கை கையாண்டது சரியல்ல என்றும் குறிப்பிட்டார்.

09.08.2016 அன்று அருணாச்சல பிரதேச முதல்வர் கலிக்கோபுல் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு மூன்று வாரங்கள் முன்னதாக நீதிபதி கேகர் மற்றும் திபக் மிஸ்ரா இருவரும் அவரை பதவி நீக்கம் செய்யும் முக்கிய தீர்ப்பை வழங்கி இருந்தார் எனவும்¸ தற்கொலை செய்த கலிக்கோபுல் தனது தற்கொலை கடிதத்தில் நீதிபதியின் கேகரின் மகன் 49 கோடி ரூபாய் கொடுத்தால் சாதகமான தீர்ப்பு எழுத முடியுமென அவரிடம் கூறியதாகவும் நீதிபதி தீபக் மிஸ்ரா 37 கோடிகள் கேட்டதாகவும் தற்கொலை கடிதத்தில் சொல்லியிருந்ததையும் சுட்டிக்காட்டினார். ஆனால் இன்று வரை அது தொடர்பான புலனாய்வோ விசாரணையோ நடக்கவில்லை.

28.08.2017லிருந்து 01.10.2018 வரையிலான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிகாலம் பலமுரண்களை கொண்டது.
நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவி காலத்தில் 01.08.2017 அன்று பிரசாத் கல்வி அறக்கட்டளை தொடர்பான வழக்கில் இந்திய மருத்துவ குழு பரிந்துரைகளை மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

24.08.2017ஆம் ஆண்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள் பிரசாத் கல்வி அறக்கட்டளையின் தங்களது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டார். இந்திய மருத்துவ குழுவின் அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் வழக்கில் ஒரு வழக்கை மட்டும் தனியாகப் பிரித்து அனுப்பியது வழக்கத்திற்கு மாறானது.

மாணவர்கள் சேர்க்கை தொடங்கும்படி பிரசாத் கல்வி அறக்கட்டளைக்கு உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இந்திய மருத்துவ குழு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டில் மறுபடியும் பிரசாத் கல்விக் அறக்கட்டளைக்கு உயர்நீதிமன்றத்தை அணுகும்வாய்ப்பு தரப்பட்டது. பிரசாத் கல்வி அறக்கட்டளை வழக்கில் சி.பி.ஐ. பதிவு செய்த நீதிபதிகள் லஞ்சம் வழங்கியது தொடர்பான.
முதல் தகவல் அறிக்கையில் திரு.யாதவ் என்பவர் ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி குதுசி¸ மற்றும் பவனா பாண்டே என்பவர்களை தொடர்பு கொண்டதாகவும் அவர்கள் மீரட்டிலுள்ள வெங்கடேஸ்வரா மருத்துவகல்லூரியின் சுதுர்கிரி என்பவர் மூலமாக இது தொடர்பான சிக்கல்களை சரி செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

19.09.2017 ஆம் ஆண்டு குற்றச்சதி மூலம் லக்னோவின் பிரசாத் மருத்துவ அறக்கட்டளை வழக்கில் உச்சநீதிமன்றம் நீதிபதிகளின் தொடர்பு பற்றி விசாரிக்க திருமிகு காமினி ஜெய்ஸ்வால் மூலம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா விசாரித்து தள்ளுபடி செய்தது¸ சட்ட நீதிகளுக்கும்¸ நியாயத்திற்கும் புறம்பானது எனவும்¸ சி.பி.ஐ பதிவு செய்த உரையாடல்களில் நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் பிரசாத் அறக்கட்டளை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகளின் அமர்வில் அமர்ந்த நீதிபதிகளுக்கு வழங்க வேண்டிய லஞ்ச பணத்தையும் மற்றும் வழக்கு தொடர்பான விவரங்கள் குறித்த உரையாடல் நடந்ததையும் பூசன் சுட்டிக்காட்டினார். பிரசாத் மருத்துவ அறக்கட்டளை வழக்கில் அலகாபாத் நீதிபதி சுக்லா என்பவர் இடைக்கால தடை உத்தரவு வழங்க பணம் பெற்றது தெள்ளத் தெளிவாக தெரிந்த பிறகும் அவர் மீது வழக்கு பதிய உச்சநீதிமன்ற உள்ளரங்க நடவடிக்கை மூலம் மறுத்த தீபக் மிஸ்ரா நீதிபதி சுக்லாவை பாரளுமன்றம் மூலம் பதவி நீக்கம் செய்யவும் பரிந்துரைத்தார். ஆனால் அப்பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. 17.07.2020வில் நீதிபதி சுக்லா ஒய்வு பெற்றார்.

ஜனவரி 2018ல் நான்கு முதுநிலை நீதிபதிகளான செல்லமேஸ்வர்¸ குரியன் ஜோசப்¸ மதன் லோகூர்;¸ ரஞ்சன் கோகாய் ஆகியோர் நீதிபதி தீபக் மிஸ்ராவின் சர்வதிகார போக்கை கண்டித்தும்¸ மிக முக்கிய வழக்குகளை அவரே கையாளுவதைப் பற்றியும்¸ குறிப்பிட்ட சில அமர்வு நீதிபதிகளின் அமர்வில் மட்டுமே அவற்றை ஒப்படைப்பது குறித்தும்¸ மருத்துவ ஊழல்¸ நீதிபதி லோயா இறப்பிற்கான புலன் விசாரணை வழக்கு¸ ஆதார் வழக்கு¸ நீதிபதிகள் நியமன தொடர்பான வழக்கு போன்ற வழக்குகள் கையாளப்பட்ட விதம் குறித்தும் பூசன் அதிருப்தி தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்த போது பீமா கொரேகாவ்ன் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக போராளிகள் மீது புனே காவல்துறையால் புனையப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றம் செய்ய மறுத்தது உச்சநீதிமன்றம்¸ மகராஷ்ராவில் 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தவுடன் தானகவே முன்வந்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டதையும் பின்னர் சமூக போராளிகளும்¸ அறவழியில் நம்பிக்கைடையவர்களுக்கும்¸ பிணை வழங்க உச்சநீதிமன்றம் மறுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களின் பதவிக்காலத்தில் அஸ்ஸாம் தேசிய குடியுரிமை வழக்கு¸ ரபேல் வழக்கு¸ சி.பி.ஐ இயக்குநர் வழக்கு போன்றவற்றை அவர் கையாண்ட விதம் குறித்து பூசன் கவலை தெரிவித்தார். அஸ்ஸாம் தேசிய குடியுரிமை பதிவேடுகள் தொடர்பாக நீதிபதி கோகாய் கையாண்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித பரிகாரம் பெற முடியாத சூழல் ஏற்படும் விதத்தில் நீதிமன்றமே குடியுரிமை பதிவேட்டு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது தொடர்பான வழக்கு அனைத்து கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் விவரங்களை மூடி முத்திரையிடப்பட்ட உரைகளில் பெற்று அதன் அடிப்படையில் அவ்வழக்கை கையாண்ட முறை குறித்தும் பூசன் கவலை தெரிவித்தார். தேர்தல் பத்திரம் நடைமுறைக்கு மத்திய ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்தும்¸ விதிகள் வளைக்கப்பட்டு 95 விழுக்காடு தேர்தல் பத்திரங்கள் ஆளுங்கட்சி மட்டுமே பெற்றதையும் பூஷன் சுட்டிக்காட்டினார்.

காஷ்மீரில் ஒரு வருட முழு அடைப்பு நிகழ்ந்ததையும் உறுப்பு 370 நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் காஷ்மீர் மூன்றாக துண்டாப்பட்டதையும்¸ அதன்மூலம் அமைதி திரும்பும் என்ற அரசின் வாதம் காஷ்மீரில் 4ஜி அலைக்கற்றையை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வழக்கில் காஷ்மீரில் வன்முறை நிலவுகிறது என்றும் அரசு முரண்பாடாக வாதம் செய்ததையும் பூஷன் சுட்டிக்காட்டினார். காஷ்மீர் தொடர்பான ஆட்கொணர்வு நீதிப்போராணைகளில் மெத்தன போக்கை உச்சநீதிமன்றம் கடைபிடித்ததையும்¸ கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் சீதாராம் யெச்சூரி தாக்கல் செய்த வழக்கில் அவசர மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர் யூசுப்தாரிகமி தாமதமாக விடுதலை செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாமர் மசூதி வழக்கில் அவசரம் காட்டிய கோகாய் 40 நாட்கள் தொடர்ச்சியாக அவ்வழக்கை விசாரித்து¸ நீதிமன்ற அவமதிப்பு ஏற்படுத்தி உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பாபர் மசூதியை இடித்தமை சட்ட விரோதம் என தங்கள் 09.11.2019ஆம் ஆண்டு தீர்ப்பில் குறிப்பிட்ட போதிலும்¸ பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என அளித்த தீர்ப்பின் மூலம் சட்ட விரோத மசூதி இடிப்பை நியாயப்படுத்தியதுடன் அது சட்டத்தின் ஆட்சிக்கு முரணான தீர்ப்பு எனவும் பூசன் குறிப்பிட்டுள்ளார்.

பாபர் மசூதி தீர்ப்பில் தீர்ப்பு அளித்த நீதிபதியின் பெயர் குறிப்பிடாததையும் சட்ட விரோதமான பின்னினைப்பு ஒன்றை 116 பக்கங்கள் வழங்கியதும் கேள்விக்குரியது எனவும்¸ ஒருமித்த ஆனால் ஒளிந்து கொள்ளும் தீர்ப்பு unanimous but anonymous என நீதிபதி ஏ.பி.ஷா எழுதிய கட்டுரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
R

Ravanan

Guest
நீதிபதி கோகாய் மீது நீதிமன்ற இளநிலை உதவியாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு புரிந்தாக குற்றம் சாட்டியவுடன்¸ குற்றம் சாட்டிய பெண்மணி மூன்று முறை பணிமாற்றம் செய்யப்பட்டு இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டதையும்¸ டெல்லி காவல்துறையில் பணிபுரிந்த அப்பெண்மணியின் கணவரும்¸ மைத்துனரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். அப்பெண்மணியின் மாற்றுதிறனாளியான இன்னோரு மைத்துனர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டதையும் பூசன் சுட்டிக்காட்டினார் அப்பெண்மணி தாக்கல் செய்த உறுதிமொழி தாள் குறித்த வழக்கில் நீதிபதி கோகாய் தன் மீதான வழக்கைத் தானே அமர்ந்து முடிவு செய்தது அடிப்படை சட்டக்கருத்தான ‘தனது வழக்கில் தானே தீர்ப்பளிக்க கூடாது’ என்ற சட்ட மீறல் எனவும்¸ பூஷன் குறிப்பிட்டார். பாலியல் தொந்தரவு வழக்கில் அமைக்கப்பட்ட குழுவின் நீதிபதிகள் அரவிந்த போப்டே¸ இந்து மல்ஹோத்ரா¸ மற்றும் இந்திராபானர்ஜி ஆகியோர் இடம்பெற்ற போதிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வழக்கறிஞர் முன்னிலையாக அனுமதிக்காததால் புகார் கொடுத்த பெண்மணி அக்குழுவின் முன் முன்னிலையாக விரும்பாததையும் பூசன் குறிப்பிட்டார். நீதிபதி கோகாய் மீதான குற்றச்சாட்டு மூன்று நீதிபதிகள் குழுவினால் முடித்துவைக்கப்பட்டாலும் அதன் இறுதி அறிக்கை வெளியிடப்படவேயில்லை என்பதையும்¸ அப்பெண்மணி மறுபடியும் பணி அமர்த்தப்பட்டதையும்¸ அவர்களது மைத்துனர்களுக்கு பணி வழங்கப்பட்டன எனவும். ஆனால் கோகாய் விவகாரம் திரை மூடிய மர்மமாகவே இன்றும் இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

நீதிபதி கோகாய் தலைமையிலான கொலிஜியம் என்ற முதுநிலை நீதிபதி குழு குஜராத் மாநிலத்தில் அரசுக்கு எதிராக பல முக்கிய தீர்ப்புகளை வழங்கிய அகில் குரேஷி பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி பின்னர் மத்திய பிரதேச தலைமை நீதிபதியாக பரிந்துரைத்து, இறுதியில் திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக்கப்பட்டதையும் பூசன் குறிப்பிட்டார்.

ஓய்வு பெற்ற நான்கு மாதங்களில் நீதிபதி கோகாய் மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்றதையும்¸ சாமானிய மனிதர்களுக்கு நீதித்தறை அமைப்பின் மீது உள்ள நம்பிக்கை சிதைந்து போனதையும் ‘உதவிக்கு பதவி’ என்ற அடிப்படையில் நீதிபதியும்¸ அரசும் கைகோர்த்து கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிபதி போப்டே அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான வழக்குகளில் மக்களைக் காப்பாற்றத் தவறியதையும்¸ டெல்லி கலவரத்தில் டெல்லி எரிந்த போது நீதிபதி முரளிதரன் அவர்கள் 26.02.2020 முதல் தகவல் அறிக்கை பதிய உத்தரவிட்டதையும் அன்று நள்ளிரவே அவர் மாற்றம் செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டினார் . இது தவிர புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வழக்கு¸ காஷ்மீர் வழக்கு 4ஜி அலைக்கற்றை வழக்கு ஆகியவற்றில் நீதிபதியின் போப்டே அவர்களின் உத்தரவுகள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாக இல்லை என பூஷன் சுட்டிக்காட்டினார்.

இது தவிர ஏராளமான தரவுகளை தான் தர முடியும் எனவும்,மேற்சொன்ன நிகழ்வுகளின் அடிப்படையிலேயே தான் கடந்த ஆறு ஆண்டுகளில் குடியாட்சி சிதைக்கப்பட்டதையும் அதில் நான்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பங்கு குறித்தும் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டதாகவும்,அவ்வாறு கூற அரசியலமைப்பு சட்டம் 19(1)(ஏ)யின் படி தனக்கு கருத்துரிமையுள்ளது எனவும்¸ ஆகஸ்ட் மாதம் இரண்டாம் நாள் 2020 ஆம் ஆண்டில் தனது உறுதி மொழி வாக்குமூலத்தை அளித்தார் .

மேற்சொன்ன உறுதிமொழி வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று பூசனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு உட்பட பல வழக்குகளில் பல அரசியல்கட்சிகள் நீர்த்து போன கருத்துகளை கூறி வந்த சூழலில் பூசனின் உச்சநீதிமன்ற வாக்குமூலம் மகிழ்ச்சி அளிக்கிறது.
 
R

Ravanan

Guest
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் தலைமை நீதிபதிகளுக்கு எதிராக பேசி, சட்டத்துறையை ஆட்டம் காண வைத்துள்ளார் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண். ஒரு அவமதிப்பு வழக்கு மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பிரஷாந்த் பூஷணுக்கு பின் பெரிய சட்ட போராட்ட வரலாறு இருக்கிறது.. அந்த வரலாறு சென்னையில் தொடங்கியது!

உச்ச நீதிமன்றத்தை களங்கப்படுத்தும் விதமாக சின்ன விஷயம் பேசினால் கூட, அவமதிப்பு வழக்கும் பாயும் சூழ்நிலைதான் தற்போது இந்தியாவில் நிலவி வருகிறது. அவமதிப்பு கருத்துக்களை அவ்வளவு கறாராக உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. கடந்த 2 வருடங்களில் மட்டும் பல மூத்த வழக்கறிஞர்கள் இதனால் அபராதத்தை சந்தித்து இருக்கிறார்கள்.

இவ்வளவு கட்டுப்பாடான சூழ்நிலையிலும் கூட... ஒரு மூத்த வழக்கறிஞர் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை நோக்கி தனது கேள்விகளை, விமர்சனங்களை வைத்து வருகிறார். நேரடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளை தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகிறார்.. அவர்தான் பிரஷாந்த் பூஷண்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரஷாந்த் பூஷணுக்கு என்ன தண்டனை.. இன்று அறிவிக்கிறது உச்ச நீதிமன்றம்

எத்தனை வருடம்

சட்டதுறையில் 30 வருட அனுபவம் கொண்ட பிரஷாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தை நோக்கி எழுப்பிய சில கேள்விகள்தான் இப்போது அவர் மீது போடப்பட்டு இருக்கும் அவமதிப்பு வழக்கிற்கு காரணம். தலைமை நீதிபதி போப்டே சொகுசு பைக்கில் இருந்ததை கிண்டல் செய்ததற்காகவும், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் 3 பேரின் நிர்வாகம் மற்றும் தீர்ப்பை கேள்வி எழுப்பியதற்காகவும் இவர் மீது வழக்கு பதியப்பட்டு, அதில்தான் தற்போது தீர்ப்பு வந்து இருக்கிறது.

இதற்கு முன்பு

பிரஷாந்த் பூஷண் மீது இப்போது பாய்ந்த வழக்கிற்கு பின், மேற்சொன்ன விஷயங்கள் மட்டும் காரணம் இல்லை. பல வருடங்களாக, கிட்டத்தட்ட 15 வருடங்களாக அவர் உச்ச நீதிமன்றத்தை விமர்சனம் செய்ததும் காரணம் ஆகும். 2009லேயே உச்ச நீதிமன்றத்தின் 8 தலைமை நீதிபதிகளை ஊழல்வாதிகள் என்று அழைத்தவர்தான் பிரஷாந்த் பூஷண். தீபக் மிஸ்ரா தொடங்கி போப்டே வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பலருடன் இவர் மோதல் போக்கை கடைப்பிடித்து இருக்கிறார்.

சண்டை போட்டார்

2017 நவம்பரில் மருத்துவ கல்லூரி வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உடன் சண்டை போட்டுவிட்டு, மன்றத்தில் இருந்து கோபமாக பாதியில் வெளியேறிய சம்பவம் கூட நடந்து இருக்கிறது. அதற்கு முன்பே பலமுறை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகள் உடன், விசாரணையின் போது சண்டை போட்டு இருக்கிறார் பூஷண். பலமுறை அவமதிப்பு வழக்கின் வீட்டு வாசல் படியை மிதித்தவர்தான் பிரஷாந்த் பூஷண்.

தொடங்கியது

இவரை வழக்கறிஞர் என்று கூறுவதை விட, ''லா ஆக்டிவிஸ்ட் - சட்ட போராளி'' என்று அழைப்பதே சரியானது என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் பலர் கூறுகிறார்கள். 1998ல் இவர் இந்த சட்ட ரீதியான போராட்டங்களை தொடங்கினார். முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷனின் மகனான இவர் தனது அப்பாவிடம் இருந்தே சட்டத்தை கற்றுக்கொண்டார். அப்போது தனது சக வழக்கறிஞர்கள் உடன் சேர்ந்து நீதிபதி எம்எம் புஞ்சியை நீக்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தினார். 25 ராஜ்ய சபா எம்பிக்களின் கடிதங்களை கூட இவர் பெற்று இருக்கிறார். ஆம்., தொடக்கத்தில் இருந்தே இவருக்கும் நீதிபதிகளுக்கும் ஏழாம் பொருத்தம்தான்!

ஆர்டிஐ எப்படி

எந்த அளவிற்கு இவர் நீதிபதிகள் மீது கோபம் கொண்டவர் என்றால், நீதிபதிகளின் சொத்து விவரங்களை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கொண்டு வந்தவர் இவர்தான். ஆம் 2009ல் எஸ்சி அகர்வால் என்பவர் தொடுத்த வழக்கில் இவர்தான் வாதாடியாது. நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும். அதனால் அவர்களின் சொத்து விவரங்களை ஆர்டிஐ கீழே கொண்டு வர வேண்டும் என்று வாதாடி, அதில் வெற்றியும் பெற்றார். பிடி தினகரன் என்ற நீதிபதிக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் கொடுத்து 2011ல் அவரின் ராஜினாமாவிற்கு காரணமாக இருந்தார்.

அரசியல் தலைவர்கள் எப்படி

நீதிபதிகள் மட்டுமல்ல அரசியல் தலைவர்ளுக்கு எதிராகவும் இவர் செயல்பட்டு இருக்கிறார். இவர் முன்னாள் மத்திய அமைச்சரின் மகனாக இருந்தாலும் 2012 வரை அரசியல் தலைவர்கள் உடன் நெருக்கம் காட்டவே இல்லை. ஆம் ஆத்மி கட்சியை தொடங்கும் வரை இவர் பெரிய அளவில் அரசியல் பக்கம் தலைவைத்துபடுக்கவில்லை. ஆம் ஆத்மியை தொடங்கியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் என்று எல்லா தரப்பையும் இவர் எதிர்த்து இருக்கிறார்.

என்ன வழக்கு

2ஜி வழக்கு, நீராராடியா டேப், நிலக்கரி முறைகேடு வழக்கு என்று காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் இவர் அதிரடி வாதங்களை வைத்து இருக்கிறார். அதேபோல் ரபேல் வழக்கிலும் பாஜகவிற்கு எதிராக தீவிரமாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி உள்ளார். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கிலும் கூட இவர் வாதிட்டு இருக்கிறார். ''ஊழலுக்கு எதிரான இந்தியா'' என்று காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் இவர் பிரச்சாரம் செய்து இருக்கிறார்.

பாஜக எப்படி

காங்கிரசை எந்த அளவிற்கு எதிர்த்தாரோ அந்த அளவிற்கு பாஜகவையும் இவர் எதிர்த்து உள்ளார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்து இவர் கூறிய கருத்துக்கள் பல மோடிக்கு எதிராக திரும்பியது. காஷ்மீரில் பாஜகவின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்துள்ளார், நக்சல்கள் போலி என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள், குஜராத்தில் கொடூர ஆட்சி நடக்கிறது, மனித உரிமைகள் மீறப்படுகிறது என்று தொடர் புகார்களை பாஜக மீது வைத்து இருக்கிறார். பூஷண் எப்போதும் தனது சொந்த கொள்கையில் உறுதியாக இருந்துள்ளார்.'

வெளியேற்றம்

அதனால்தான் என்னவோ 2015ல் ஆம் ஆத்மி கட்சியில் சண்டை போட்டுகொண்டு அதில் இருந்தே வெளியேறினார். 2ஜி வழக்கில் டாட்டா, அணில் அம்பானி ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று கூறி கோடீஸ்வரர்களையும் கூட இவர் விட்டுவைக்கவில்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஆதிக்கம் என்பது எந்த உருவத்தில் வந்தாலும் அதை பிரஷாந்த் பூஷன் எதிர்த்து இருக்கிறார். மதம் , ஊழல், பணம், அதிகாரம் என்று எந்த வகையில் அநியாயம் நிகழ்த்தப்பட்டாலும் அதை பிரஷாந்த் பூஷண் எதிர்த்து இருக்கிறார்.

500 பொது நல வழக்கு

எப்போதும் இவர் மக்களுக்காக அதிகாரங்களை எதிர்த்து இருக்கிறார். 500 பொது நல வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் போட்ட பெருமைக்கு உரியவர் பூஷண். 1983ல் தனது முதல் பொதுநல வழக்கை டூன் வாலி சுரங்க வழக்கில் போட்டவர் பிரஷாந்த் பூஷண். அப்போதில் இருந்து இப்போது வரை இவர் வாழ்க்கை வழக்குகளால் நிரப்பி உள்ளது. தமிழக விவசாயிகள் வழக்கு தொடங்கி காஷ்மீர் பிரச்சனை வரை அதிகாரத்தை எதிர்த்து மக்கள் பக்கம் நின்ற ஒரே சட்ட போராளி பிரஷாந்த் பூஷண்தான்.. அதனால்தான் இவருக்கு தண்டனை கொடுக்க உச்ச நீதிமன்றமே யோசித்தது.

சென்னை எப்படி

சென்னையில் ஐஐடியில்தான் இவர் படித்தார், அங்கு தொழில்நுட்ப படிப்பிற்கு இடையிலும் ஓய்வு நேரத்தில் இவர் சட்டம் குறித்தும் , மக்கள் போராட்டம் குறித்தும் கற்று இருக்கிறார். அங்கு இவருக்கு சட்ட ஆசை வரவே, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பிஎஸ்சி படித்துள்ளார். அதன்பின் அமெரிக்காவிற்கு தத்துவவியல் படிக்க சென்றுள்ளார். அங்கேயும் படிப்பை நிறுத்திவிட்டு இந்தியா திரும்பி சட்டம் படித்து 1983ல் வழக்கறிஞர் ஆகியுள்ளார்... அப்போது தொடங்கிய பயணம் இப்போது சட்ட கோபுரங்களை அதிர வைக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
 
R

Ravanan

Guest
பிரசாந்த்பூஷன் உரை

இந்த நகர்வை முன்னெடுக்க நான் இங்கே நிற்கும்போது, மோடி அரசு இந்தியாவுக்கு ஏற்படுத்திருக்கும் அழிவுகளைப் பற்றி எங்கிருந்து பேசத்தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை.

பணமதிப்பிழப்பு போன்ற அவரது முற்றிலும் அபத்தமான சிந்திக்க முடியாத கொள்கையுடன் அவர் அழித்த பொருளாதாரத்துடன் நான் தொடங்க வேண்டுமா? இது போன்று பல பெயர்களை சொல்ல முடியும். நான் உண்மைகளைக் கேட்க முடியும்.

இப்போது மோடி அரசாங்கம் எங்களுக்கு வழங்கப்பட்ட இது மற்றொரு தனித்துவமான விஷயம். உண்மைகளைக் கண்டுபிடிக்கும் வேலைகளைக் கொண்ட அனைத்து நிறுவனங்களையும் இது அழித்திருக்கிறது.

வேலையின்மை அளவீடுகளை வெளியிட வேண்டிய NSSO போன்ற அமைப்புகளை கடந்த இரண்டு வருடங்களாக புள்ளிவிவரத்தை வெளியிடுவதைத் தடுத்தது. இறுதியாக புள்ளிவிவரங்கள் கசிந்தவுடன்தான் தெரிந்தது. இவர் வேலைவாய்ப்புகளை உருவாக்குதில் இருந்து தொலைதூரம் சென்று ஒரு வருடத்தில் ஒரு கோடிக்கும் மேலான வேலைவாய்ப்புகளை அழித்துள்ளார் என்று.

புள்ளிவிவரங்களை உருவாக்குவதற்கு காரணமாக இருந்த அதன் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் அரசாங்கத்தால் தாக்கப்பட்டனர், அவர்கள் இராஜினாமா செய்தனர். எனவே உண்மைகளைக் கண்டுபிடித்து அவற்றை மேசையில் வைக்க வேண்டிய அனைத்து நிறுவனங்களும் தாக்குதலுக்குள்ளானது. பின்னர் பிரச்சாரத்தை மட்டுமே நம்புமாறு கூறப்படுகிறோம்.

நான் சொன்னது போல் நான் பொருளாதாரத்துடன் தொடங்கலாம், ஆனால் அவர் இந்திய சமுதாயத்திற்கு நமது அரசியலமைப்புக்கு நமது சிந்தனைக்கு அவர் நயவஞ்சக வேலையை செய்துள்ளார். இன்று நம்மிடம் உண்மைகள், விஞ்ஞானம் போன்ற காரணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது, எல்லாமே அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது.அவர்கள் கருப்பை வெள்ளை என்று சொன்னால் உண்மையில் கருப்பு வெள்ளைதான் என்று எங்களுக்கு சொல்லப்படுகிறது.
பண்டைய இந்தியாவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இருந்ததாகவும் அதை வைத்து கடவுள் கணேசனின் தும்பிக்கை பொறுத்தப்பட்டது என்றும் கடந்தகாலத்தின் அறுவைச் சிகிச்சையின் கலை என்று மோடி கூறினார்.

மகாபாரதம் போன்ற புராணங்களில் சோதனை குழாய் குழந்தைகள் முறையை பயன்படுத்தியதாக கூறினார். இது போல் ராடார் விமானங்களைக் காண மேகங்கள் அனுமதிக்காது, எனவே விமானப்படையிடம் வானிலை சாதகமற்றதாக இருந்தாலும் பால்கோட்டைத் தாக்கும்படி நான் கேட்டேன் என்று கூறினார்.

நாம் காரணத்தை, விமர்சன சிந்தனையை புறக்கணிக்கிறோமா?புனையப்பட்ட கதைகளை நம்புங்கள் என்று சொல்லப்படுவதால் நாங்கள் உண்மைகளை புறக்கணிக்கிறோம். இது ஏனென்றால் அவர்கள் பரப்பப்பட்ட பிரச்சாரத்தின் காரணமாக அவர் செய்த மற்ற சேதம் இது.
அச்சுறுத்தல்கள் தூண்டுதல்கள் மூலமும் ஊடகங்களின் பெரிய பகுதிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், வெறும் பிரச்சாரக் கருவிகளாகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராகவும் அவர் ஊடகங்களைச் சுருக்கியுள்ளார்.

விஞ்ஞானம், காரணங்களை விவரித்தல், நாகரிக மதிப்புகள் மற்றும் நாகரிக சொற்பொழிவு மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு நீங்கள் மோடிக்கு எதிராக ஏதாவது சொன்னால், கொலைவெறி கும்பல்களால் தெருக்களில் கொல்லப்படுவீர்கள்.

நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்தால், கொலை வெறி கும்பல்களால் தெருக்களில் காவல்துறையினர் பார்க்கும் போதே கொல்லப்படுவீர்கள். மோடிக்கு எதிராக சமூக ஊடங்களில் ஏதாவது சொன்னால் கூட, ஒரு பெண் என்றால் பாலியல் பலாத்கார அச்சுறுத்தல்களுக்கோ அல்லது கொல்லப்படுவீர்கள் என்ற அச்சுறுத்தலுக்கோ உள்ளாவீர்கள்.

சமூக ஊடகங்களில் இவ்வாறு கொலைவெறி தாக்குதல்கள் நடப்பதை வேறு எந்த நபரும் கட்டுப்படுத்துவது இல்லை, இதை முழுக்க முழுக்க செய்வது மோடி மட்டுமே.

இந்தியாவின் மிகச்சிறந்த பத்திரிக்கையாளரான சுவாதி சதுர்வேதி எழுதிய I'm troll என்ற புத்தகம் சமூக ஊடகங்களில் இருக்கும் கொலைவெறி கும்பலை பற்றி தெளிவாக எடுத்துக்கூறுகிறது.
போலி செய்திகள், தவறான தகவல்கள், வெறுப்பு மற்றும் அதன் எதிரிகளை துஷ்பிரயோகம் செய்வது, இந்த சமூக ஊடகத்தில் கொலை வெறி கும்பலை கட்டுப்படுத்தப்படுகிறது யார் என்பதைக் கண்டுபிடிக்க, இன்று தாக்கப்பட வேண்டிய, இன்று ட்ரோல் செய்யப்பட வேண்டியவர் என்று முடிவுசெய்வதே மோடி தான். இது அனைத்தும் மோடியால் கட்டுப்படுத்தப்படுகிறது.
அரசாங்கத்தின் அனைத்து நிறுவனங்களும், ஜனநாயகத்தின் அனைத்து நிறுவனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகிறது.

உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய ஒரு சூழ்நிலை எங்களுக்கு இதுவரை இருந்ததில்லை, அரசாங்கம் ஜனநாயகத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் கூறினார்கள்.

மேலும் முக்கியமான வழக்குகளை முடிவு செய்வதற்காக தலைமை நீதிபதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அந்த வழக்குகள் குறிப்பிட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வுகளுக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்கள்.

கடந்த முப்பது ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இருந்ததாக கருதப்பட்டது. முப்பதாண்டுகளில் முதன்முறையாக பிரதமர் மற்றும் பா.ஜ.கவின் தலைவர் நடத்தை விதிகளை மீறுவதை தேர்தல் ஆணையம் மன்னிக்கிறது என்று நாங்கள் கூறுகிறோம்.

அரசாங்க தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் சமீபத்தில் ரஃபேல் பாதுகாப்பு ஒப்பந்த மோசடி குறித்து ஒரு அறிக்கையை வழங்கினார். இது அரசாங்கத்தால் 3 மாதங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டது. இந்த அறிக்கை வழங்கப்படுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னர் , பாதுகாக்கப்பட்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்துக்கு அரசு கொடுத்து.

தனது தீர்ப்பில் நீதிமன்றம் அந்த அறிக்கையை மறுஉருவாக்கம் செய்தது. இந்த அறிக்கை பொது தளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிறகு விலை விவரங்கள் அகற்றப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் இருந்தது.

பின்னர் இதுபோன்ற அறிக்கை எதுவும் இல்லை என்று எல்லோரும் சுட்டிக்காட்டியபோது அரசாங்கம் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தது, அதில் பாராளுமன்றத்தில் வைக்கப்படும் என்று கூறியது. ஆனால் அறிக்கை விலை விவரங்களை குறைக்கும் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும். பாதுகாப்பு ஒப்பந்தத்தில் விலை விவரம் கழிக்கப்பட்டது போன்ற செயல்கள் கடந்த 70 ஆண்டுகளில் சிஏஜி தணிக்கை செய்ததில் இது ஒருபோதும் நிகழ்ந்ததில்லை.ஆனால், சிஏஜி கழித்த விலை விவரங்கள், சிஏஜி ஒரு கூண்டு கிளியாக மாற்றியுள்ளதைக் காட்டுகிறது.
அனைத்து ஊழல் எதிர்ப்பு நிறுவனங்களும் சிதைக்கப்படுள்ளன. லோக்பால் கடந்த 5 ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை.சிபிஐ இயக்குனர் ரஃபேல் ஒப்பந்தத்தை விசாரிக்க விரும்பியபோது, அதிகாலை 2 மணிக்கு ஒரே இரவில் அவர் அகற்றப்பட்டார்.சிபிஐ அலுவலகத்தை கையகப்படுத்த 400 காவல்துறையினர் அடங்கிய குழு அனுப்பப்பட்டது மற்றும் ரஃபேல் ஒப்பந்தம் விசாரணைக்கு அனுமதிக்கப்படவில்லை.

ஒவ்வொரு ஊழல் விசாரணைக்கும் அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுதான் தொடங்கவேண்டும் என்று சொல்லி ஊழலுக்கு எதிரான சட்டமே அழிக்கப்பட்டிருக்கிறது.

திருட்டை விசாரிக்க திருடர்களிடமே அனுமதி வாங்கவேண்டும் என்பது போல் உள்ளது.
எனவே ஜனநாயகம் என்ற பெயரில், அரசியலமைப்பின் பெயரில், அறிவியல் மற்றும் காரணங்களின் பெயரில், நாகரிகத்தின் பெயரிலேயே மோடி அரசு செல்ல வேண்டும்.
 
Top