• Please use an working Email account to verify your memebership in the forum

ஏவல்துறை(காவல்துறை)

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

தமிழகத்தில் இந்த ஏவல்துறையின் அட்டூழியங்கள் பட்டியலிட இந்த ஓர் பதிவு போதாது.. எந்த கட்சியாக இருப்பினும் மனிதம் மறந்து கடமை மறந்து இவர்கள் அதிகாரத்தின் அடியாள் ரீதியாகவே செயல்பட்டுள்ளனர் என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்..



மொழிப்போர் தியாகிகள்:
View attachment

தமிழகத்தில் நமக்கு முதன்முதலில் பரிச்சயமான ஓர் சிறைகைதி மரணம் எனில் அது 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இறந்த ஐயா நடராஜனே.. 1938 டிசம்பர் மாதம் காவல்துறையினரின் சித்திரவதையால் இறந்தார்.. 1939 ஜனவரின் நடராஜன் அவர்களுடன் கைது செய்யப்பட்ட மற்றொரு மொழிப்போர் தியாகி ஐயா தாளமுத்து அவர்களும் சிறையில் மரணம் அடைந்தார்.. 1965 ல் அன்றைய காங்கிரஸ் கட்சியின் கொலைவெறி தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர்.. கக்கன் அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தின் கரும்புள்ளி இந்தி எதிர்ப்பு போராட்ட படுகொலைகள்..

1970 மின்கட்டண உயர்வு போராட்டம்:

View attachment
1970 ஆம் ஆண்டு அப்போதைய திமுக அரசு மின்கட்டணத்தை யூனிட்டிற்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தியது.. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.. கோவை மாவட்டத்தில் விவசாயிகள் மாட்டுவண்டி மறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.. 1970 முதல் 1972 வரை நடந்த இப்போராட்டத்தில் 16க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 1990 வரை 54 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.. இதன் பின்பே விவசாய மின்சாரம் இலவசம் ஆக்கப்பட்டது..

எம்ஜியாரின் படுகொலைகள்:

1980களில் மோகன்தாஸ் மற்றும் தேவாரம் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டனர்.. பல மீனவ குப்பங்கள் அராஜக முறையில் காலி செய்யப்பட்டனர்.. நெல்லை கால்நடை மருத்துவகல்லூரி மற்றும் தியாகராய கல்லூரி போன்றவற்றிலும் போராட்டம் செய்த 5 மாணவர்கள் கொல்லப்பட்டனர்..

இட ஒதுக்கீடு போராட்டம்:

View attachment yi
1987 ஆம் ஆண்டு மரு.ராமதாஸ் அவர்களால் முன்னெடுக்கப்பட்டதே பிற்படுத்த பட்ட மக்களுக்கான 27% இடஒதுக்கீடு போராட்டம்.. ஆனால் அப்போதைய எம்ஜியார் அரசின் கூலிப்படை காவலர்களால் 21 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.. பலர் காயமடைந்தனர்..

வாச்சாத்தி வன்முறை:
View attachment
தமிழக சரித்திரத்தில் கீழ்வெண்மணி, வாச்சாத்தி, மாஞ்சோலை போன்ற பெயர்கள் மறக்க இயலாதவை.. தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள மலை கிராமமே வாச்சாத்தி.. 1992 சூன் மாதம் 20ல் அங்கே சந்தன மரம் பதுக்கு வைத்துள்ளதாக சொல்லி காவல்துறை, வனத்துறை, வருவாய்துறையினர் அந்த கிரமத்தையே சூறையாடினர்.. இதில் 18 பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டனர். 34 பேர் கொல்லப்பட்டனர்.. 24 சிறுவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்..

மாஞ்சோலை தொழிலாளர்கள்:
View attachment
1999 ஆம் ஆண்டு சூலை மாதம் கூலி உயர்வு கேட்டு போராடிய மாஞ்சோலை தொழிலாளர்கள் அப்போதைய கருணாநிதி அரசின் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டனர்.. 18 பேர் அந்த போராட்டத்தில் கொல்லப்பட்டனர்.. 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்..

ஈழ ஆதரவு போராட்டம்:
View attachment Yi
ஈழத்திற்கு ஆதரவாக 2009 ல் பிப்ரவரி 19 ல் சென்னை உயர்நீதி மன்ற வக்கீல்கள் போராட்டம் முன்னெடுத்தனர்.. இந்த போராட்டம் ஏவல்துறையால் தடியடி செய்து கலைக்கப்பட்டது.. ஆனால் இதில் பல வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் காயமடைந்தனர்.. நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொடூர தாக்குதல் இதுவே.. இன்றுவரை வக்கீல்கள் இந்த தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர்..

பரமகுடி கலவரம்:
View attachment
2011 ஆம் ஆண்டு பரமகுடியில் தேவேந்திரகுல வேளளர் என்னும் குடியினர் கலந்துகொண்ட குருபூஜை விழாவில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் கூலிப்படையால் 7 பேர் கொல்லப்பட்டனர்.. 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்..

ஜல்லிக்கட்டு போராட்டம்:
View attachment
மக்களின் தன்னெழுச்சி போராட்டமான ஜல்லிகட்டு தடை நீக்க போராட்டத்தின் இறுதி நாட்களில் அதை கலைப்பதற்காக கூலிப்படையினர் தாங்களே காவல்நிலையம், தானி போன்றவற்றை எரித்துவிட்டு மக்களை அடித்து துன்புரித்தியது நாம் அறிந்ததே.. இதில் வன்மத்தின் வெளிபாடாக மாணவர்களுக்கு உதவியதற்காக மீனவ மக்களின் வீடுகளும் உடமைகளும் உடைக்கப்பட்டதும் மீனவ மக்களும் தாக்கப்பட்டதும் வன்மத்தின் உட்சம்..

ஸ்டெர்லைட் படுகொலை:
View attachment
தாமிர உருக்கு ஆலையின் கழிவால் நிலம் மாசுபடுகிறது.. காற்றும் மாசுபடுகிறது.. இதனால் மக்களுக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது.. எனவே அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையோடு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.. அரசு பெரும் முதலாளிகளின் இலாபத்திற்காக போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொலை செய்தது..

சமீபத்திய தாக்குதல்கள்:
View attachment
1. 2017 ஏப்ரலில் திருப்பூரில் மதுக்கடையை மூடச்சொல்லி போராட்டம் செய்த பெண்களை ஏடிஎஸ்பி பாண்டியராஜன் தாக்கினார்.

2. 2018 மார்ச் மாதத்தில் மோட்டார் வாகனத்தில் கணவருடன் சென்ற கர்ப்பிணி பெண் உஷா காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவரால் எட்டி உதைத்ததில் உயிரிழந்தார்..

3. சென்ற ஆண்டு கோவையில் ரோட்டுகடை வைத்த இளைஞர் காவலரால் தாக்கப்பாட்டு இறந்தார்.



இப்பொழுது சாத்தான்குளத்தில் செல்லிடபேசி கடை உரிமையாளர் பெனிக்ஸ் மற்றும் அவர் தந்தை ஜெயராஜ் ஆகியோர் கூலிப்படையால் சிறையில் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்துள்ளனர்.. இதே சிறையில் இருந்த ராஜ்சிங் என்பவரும் அடுத்த நாளே சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளார்..

எட்டயபுரத்தில் கட்டிட வேலை செய்த கணேசமூர்த்தி காவலரின் தாக்குதலால் மரணமடைந்தார்.

தென்காசி வீரகேரளபுதூர் தானி ஓட்டுநர் குமரேசன் காவலர்கள் தாக்குதாலால் மரணம் என்று இந்த வாரத்தில் மட்டும் இந்த ஏவல்படையின் கொலைகள் பல..

வெளியில் வரும் செய்திகள் சொற்பமே.. ஏவல்துறையின் அதிகாரத்திற்கு பயந்து வெளியில் சொல்லாமல் வாடுவோர் ஏராளம்...
 
Top