• Please use an working Email account to verify your memebership in the forum

எல்லை காவலன்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

"தலை கொடுத்தேனும் தலைநகர் மீட்போம்"

இந்த முழக்கம் வைத்த புரட்சியாளர் யார்? எதற்காக முழங்கினார் என்பதை காண்போம்..

1906 ஆம் ஆண்டு சூன் மாதம் 26ஆம் நாள் பிறந்தார் அந்த எல்லை காவலன்.. சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் சால்வன் குப்பத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.. தந்தையின் தொழிலோ மரம் ஏறுபவர்.. கள் விற்பனையாளர்.. சிறுவயதிலேயே கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு தன் தந்தையையும் சகோதரனையுமே கள் இறக்கவிடாமல் தடுத்தவர்.. தன் உறவினர் கடைக்களுக்கு முன்பே ஆர்பாட்டம் செய்தவர்.. அதனால் உறவினரின் வெறுப்பை சம்பாதித்தவர்..
700 நாட்களுக்கு மேல் சுதந்திர போராட்டத்தில் சிறையில் இருந்தவர்..

1967ல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றத்திற்கான மசோதா சட்டசபையில் அண்ணாதுரை தாக்கல் செய்தபோது அண்ணாதுரை நன்றி சொல்லியது இவருக்கே..

எல்லை காவலன், தமிழ் தேசிய முன்னோடி, சிலம்பு செல்வர், பேரவைச் செல்வர் இப்படி பல பட்டங்களுடன் அழைக்கப்பட்டவர்..

அவர்தான் எங்கள் ம.பொ.சி என அறியப்படும் மயிலாபூர் பொன்னுச்சாமி சிவஞானம்..

மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கபட்ட நேரத்தில் "மெட்ராஸ் மனதே" என்னும் முழக்கத்துடன் தெலுங்கர் நம் சென்னையை கேட்டு போராட்டம் நடத்தினார்கள்.. மெட்ராஸ் நமக்கு தேவையில்லை.. ஆந்திராவுக்கே கொடுக்கலாம் என்னும் கருத்து தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் நிழவியது.. ஆனால் ஐயா ம.பொ.சி " தலை கொடுத்தேனும் தலைநகர் மீட்போம்" என்று எதிர்முழக்கம் வைத்து மக்களை ஒன்று திரட்டி சென்னையை மீட்டார்..

திருப்பதி, திருத்தணி ஆகியவற்றையும் ஆந்திரா பறிக்க முற்பட்டபோது அதையும் தன் போராட்டம் மூலம் தடுத்தவர்.. ஆனால் அவரால் திருத்தணி மட்டுமே மீட்க முடிந்தது..

குமரி, செங்கோட்டை, பீர்மேடு, தேவிகுளம் ஆகியவை கேரளத்துடன் இணைத்த போது அதற்கும் போராடி செங்கோட்டையும் குமரியும் மீட்டவர் ஐயா ம.பொ.சியும் மார்ஷல் நேசமணியுமே... ஆனால் பீர்மேடும் தேவிகுளமும் நம் கைவிட்டு போனது..

தமிழை மட்டுமே தாய்மொழியாக கொண்டு வாழும் தமிழர்கள் அதிகமாக வாழும் நிலம் தமிழ்நாடு.. அவர்களின் அரசியல் தமிழ்தேசியம் என சித்தாந்தம் படைத்தவர்.. தமிழக எல்லைகளை வரையறுத்தவர்.. இறுதிவரை தமிழ் தமிழர் தமிழகம் என வாழ்ந்தவர்..

சிலப்பதிகாரத்தின் புகழ் உலகறிய செய்தவர்.. எனவே சிலம்பு செல்வர் என போற்றப்பட்டவர்.. வள்ளலார் வகுத்த நெறியை பரப்பியவர்.. வ.உ.சியை பற்றியும் நூல்கள் எழுதியவர்..

ஐயா ம.பொ.சி அவர்களின் பயணம் 1995 அக்3 தேதி முடிந்தது.. ஓய்விற்கு சென்றார் அந்த எல்லை காவலன்.. View attachment
 

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

Makkal vendukoluku inanga translated ???....

"Let us restore the capital to the head"

Who was this revolutionary? Let us see what it is ..

Born on June 26, 1906, the border guard was born in a poor family in Salvan Kuppam in the Thousand Vilakku area of Chennai. The one who made the hate of the relative ..
Who was jailed for more than 700 days

Annadurai thanked Annadurai when he presented the name of Tamil Nadu to the Tamil Nadu Legislative Assembly in 1967.

Border Guard, Tamil National Pioneer, Silambu Selvar, Pavilivarvar called many such titles ..

Mayilapur Ponnushami Sivagnanam known as our MPC ..

At the time when the linguistic states were divided, the Telugu people were protesting with the slogan "Madras Manade". Put people together and rescue Chennai.

When Andhra tried to snatch Tirupathi and Thiruthani, he prevented it through his struggle.

When the Kumari, Chenkottai, Peermedu and Devikulam merged with Kerala, the Red Fort and Kumari returnees were sacked by the IOC and Marshall ...

Tamil is the only native land of Tamils living in Tamilnadu.

Silampattikaram is famous for its popularity .. So Silambu Selvar is the man who spread the norm of Vallalar ..

Sir MbC's tour ended on 3 October 1995 .. went to retirement.
 
Top