• Please use an working Email account to verify your memebership in the forum

என்னுள் இருக்கும் நான்

Messages
27
Points
13

Reputation:

அன்பாய் பேசியவர்களை

அன்பு கொண்டவர்கள் என எண்ணினேன்.


நலம் விசாரித்தவர்களை

நலம் விரும்பிகள் என எண்ணினேன்.


நன்றாய் பழகியவர்களை

நண்பர்கள் என்று பாவித்தேன்

மறவாமல் மனதினில் நிறுத்திக்கொண்டேன்.


பேச வந்தவர்களிடம் நேரமில்லாமையிலும்

மறு நொடியினில் பேசினேன்.


உதவி என்று வந்தவரிடம்

இயலாமையிலும் முயற்சிக்காமல்

விட்டதில்லை.


காலம் சுழன்றது தன்போக்கில்…


நான் பேச தேடினேன்

எங்கும் அமைதி

பார்த்தும் பாராமுகம்


உதவி என்று தட்டினேன்

நிசப்தம்.


பாவம் எந்திர வாழ்க்கையில்

பம்பரமாய் சுழலும் மனிதர்கள்

என இரக்கம் கொண்டேன்.


ஏனோ அந்நியப்பட்டதொரு உணர்வு

அறிமுகமாகி அது நாள் வரை

நான் அறிந்தவற்றை

அறிமுகம் இல்லாமல் செய்தது.


நேரமில்லை அவர்களுக்கு என்று

நினைத்து இருந்தேன்

பின்பே உறைத்தது

எனக்கு ஒதுக்க நேரமில்லையென.


பேசினார்களே அவர்களாய் அன்பாய் ,

ஆவலாய் என்று நினைத்து இருந்தேன்

பின்பே புரிந்தது

பேசினார்கள் தான்

அவர்கள் நேரம் கடத்த பொழுதுபோக்காய்யென.


உதவி என்றால் தேடி வரும்

அதிமுக்கியமானவள்

என்று நினைத்து இருந்தேன்

பின்பே உணர்ந்தேன்

உதவியென்றால் மட்டுமே

நான் நினைவில் வருவேன்யென.


நான் கொண்ட பிம்பங்கள்

எல்லாம் ஒற்றை நொடியில்

உடைய கண்டேன்.


போதும் மாறிவிடு என்றது

அனுபவம்.

மாறாதே விட்டு விடு என்றது

மனம்.

இதில் என் தேர்வு மனமாய் இருந்தது

இது எனக்கானது மட்டும் அல்ல

உண்மையான அன்பிற்கேயான சாபக்கேடு

எனும் நிதர்சனத்தை

சிறுவலியுடன் ஒதுக்கி இன்றும்

என் இயல்பிலிருந்து பிறழாமல் நிற்கின்றேன்

அன்பை மட்டுமே சுமந்தவளாக!!!
 
Last edited:

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

அன்பாய் பேசியவர்களை

அன்பு கொண்டவர்கள் என எண்ணினேன்.


நலம் விசாரித்தவர்களை

நலம் விரும்பிகள் என எண்ணினேன்.


நன்றாய் பழகியவர்களை

நண்பர்கள் என்று பாவித்தேன்

மறவாமல் மனதினில் நிறுத்திக்கொண்டேன்.


பேச வந்தவர்களிடம் நேரமில்லாமையிலும்

மறு நொடியினில் பேசினேன்.


உதவி என்று வந்தவரிடம்

இயலாமையிலும் முயற்சிக்காமல்

விட்டதில்லை.


காலம் சுழன்றது தன்போக்கில்…


நான் பேச தேடினேன்

எங்கும் அமைதி

பார்த்தும் பாராமுகம்


உதவி என்று தட்டினேன்

நிசப்தம்.


பாவம் எந்திர வாழ்க்கையில்

பம்பரமாய் சுழலும் மனிதர்கள்

என இரக்கம் கொண்டேன்.


ஏனோ அந்நியப்பட்டதொரு உணர்வு

அறிமுகமாகி அது நாள் வரை

நான் அறிந்தவற்றை

அறிமுகம் இல்லாமல் செய்தது.


நேரமில்லை அவர்களுக்கு என்று

நினைத்து இருந்தேன்

பின்பே உறைத்தது

எனக்கு ஒதுக்க நேரமில்லையென.


பேசினார்களே அவர்களாய் அன்பாய் ,

ஆவலாய் என்று நினைத்து இருந்தேன்

பின்பே புரிந்தது

பேசினார்கள் தான்

அவர்கள் நேரம் கடத்த பொழுதுபோக்காய்யென.


உதவி என்றால் தேடி வரும்

அதிமுக்கியமானவள்

என்று நினைத்து இருந்தேன்

பின்பே உணர்ந்தேன்

உதவியென்றால் மட்டுமே

நான் நினைவில் வருவேன்யென.


நான் கொண்ட பிம்பங்கள்

எல்லாம் ஒற்றை நொடியில்

உடைய கண்டேன்.


போதும் மாறிவிடு என்றது

அனுபவம்.

மாறாதே விட்டு விடு என்றது

மனம்.

இதில் என் தேர்வு மனமாய் இருந்தது

இது எனக்கானது மட்டும் அல்ல

உண்மையான அன்பிற்கேயான சாபக்கேடு

எனும் நிதர்சனத்தை

சிறுவலியுடன் ஒதுக்கி இன்றும்

என் இயல்பிலிருந்து பிறழாமல் நிற்கின்றேன்

அன்பை மட்டுமே சுமந்தவளாக!!!
Wow semma
 
Top