Phoenix
Well-known member
- Messages
- 966
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
எனக்காக!
வேலெறியும் என் விழிகளுக்கு
இரவினைத் திரட்டி அஞ்சனம் செய்தாய்!
நித்திரை என்னை ஆட்கொள்ளுமென
அனிச்சம் கொய்து மஞ்சம் அமைத்தாய்!
நீயில்லாமல் குளிர் என்னைத் தீண்டிடுமென
மேகங்கள் பிடித்து போர்வை நெய்தாய்!
மூங்கிலாம் என் தோள்களுக்கு
வண்ணத்து பூச்சியின் சிறகு தந்தாய்!
எனக்காய் எல்லாம் செய்தவனே...
உன் பிரிவால் ஏங்கும் என் பசலை தீர்க்கும்
மாமருந்தை மட்டும் ஏன் மறந்து சென்றாய்!
வேலெறியும் என் விழிகளுக்கு
இரவினைத் திரட்டி அஞ்சனம் செய்தாய்!
நித்திரை என்னை ஆட்கொள்ளுமென
அனிச்சம் கொய்து மஞ்சம் அமைத்தாய்!
நீயில்லாமல் குளிர் என்னைத் தீண்டிடுமென
மேகங்கள் பிடித்து போர்வை நெய்தாய்!
மூங்கிலாம் என் தோள்களுக்கு
வண்ணத்து பூச்சியின் சிறகு தந்தாய்!
எனக்காய் எல்லாம் செய்தவனே...
உன் பிரிவால் ஏங்கும் என் பசலை தீர்க்கும்
மாமருந்தை மட்டும் ஏன் மறந்து சென்றாய்!