• Please use an working Email account to verify your memebership in the forum

உழைப்பாளர் சிலை

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

View attachment

மே தின கொண்டாட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது மேலே உள்ள சிலை.. அநேகமாக இன்று எல்லோருடைய கைப்பேசியையும் ஆக்கிரமித்திருக்கும்.. அத்தகைய சிறப்புமிக்க இந்த சிலையின் வரலாற்றையும் தெரிந்துகொள்வோம்..

இந்தியாவில் முதன் முதன்முறையாக தொழிலாளகள் தினம் கொண்டாடப்பட்டது சென்னை மெரினா கடற்கரையில் தான்.

1923-ம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக சென்னையில் மெரினா கடற்கரையில்தான் மே தின விழா கொண்டாட்டப்பட்டது. தொழிலாளர் தலைவர் சிங்காரவேலர் தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வின் நினைவுகூரும் வகையில் அப்போதைய தமிழக முதல்வராக காமராஜர் ஒரு சிலையை எழுப்ப உத்தரவிட்டார்.

சென்னை மெரினா கடற்கரையில் 1959-ம் ஆண்டு உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது. சிற்பி தேவி பிரசாத் ராய் செளத்ரிதான் இந்த சிலையை வடிவமைத்தார். 1959 ஆம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி தமிழகத்தின் அப்போதைய ஆளுநர் விஷ்ணுராம் மேதியால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது.
 
Top