• Please use an working Email account to verify your memebership in the forum

ஈழப்போர் ஓர் பார்வை

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

ஈழ விடுதலை போர்:

தந்தை செல்வா என எல்லோராலும் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் தமிழர் விடுதலை அமைப்பே இலங்கை விடுதலை போரின் முன்னோடி அமைப்பு.. இலங்கையில் சிங்களர் எனபடும் துளு இனத்தவரின் (தற்போதைய பிஹாரி) ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடங்கப்பட்டதே ஈழப்போர்..

சிங்கள இனத்தவர்க்கு முன்னுரிமை,பௌத்தத்தை முதன்மை படுத்துதல், கல்வியில் பாகுபாடு, அத்துமீறிய குடியேற்றம் என பல காரணங்களால் கொதித்தெழுந்த தமிழின மக்களால் 1976 ஆம் ஆண்டு வேலுபிள்ளை பிரபாகரனின் தலைமையில் உருவாக்கிய இயக்கமே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்..

1986 வரை இலங்கை உள்நாட்டு போராக நடந்த இந்த போரில் 1987 ல் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்காக தன் படையை அனுப்பியது இந்திய ஒன்றியம்.. இலங்கையில் அமைதியை ஏற்படுத்த போவதாக சொல்லி இந்திய அமைதி காக்கும் படையை( IPKF) அனுப்பியது இந்திய ஒன்றியம்.. முதலில் ஈழமும் மகிழ்ச்சியுடன் இந்த படையை வரவேற்றது.. சிறிது காலம் நன்றாகவே சென்றது.. போர் நிறுத்தம் அமலில் வந்தது..

ஆனால் அதன்பின் இந்திய ஒன்றிய படையின் தாக்குதல் ஈழத்தை மட்டும் குறிபார்த்து இருந்தது.. இதனால் இந்திய ஒன்றியத்திற்கும் விடுதலைபுலிகளும் சில இடங்களில் மோதிக் கொண்டனர்..

இந்த பிரச்சனைக்கு முடிவுகாண எண்ணிய விடுதலைப்புலிகள் அமைப்பின் லெப்டினன்ட் கர்னல் திலீபன் என்று அறியப்படும் பார்த்திபன் இந்திய ஒன்றிய படைகளை வெளியேறச் சொல்லி ஐந்து அம்ச கோரிக்கை வைத்து சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தார்.. 1987ல் செப்டம்பர் 15 தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார்.. ஆனால் உயிர் பலி கேட்கும் ஓநாய்களிடம் கருணை கிடைக்குமா.. செப்டம்பர் 26 ஆம் தேதி திலீபன் இறுதிவரை உணவு உண்ணாமல் உயிர் நீத்தார்.. ?? உலக வரலாற்றில் சாகும்வரை உண்ணாவிரதத்தை உண்மையில் செய்துகாட்டியவர் எனக்கு தெரிந்து திலீபனே...

இதனால் விடுதலை புலிகள் இந்திய ஒன்றியத்துடன் ஒத்துழையாமையை அறிவித்து 1987ல் அக்டோபர் 5 ல் போர் அறிவித்தனர்.. சுமார் மூன்று ஆண்டுகள் இந்திய ஒன்றியப்படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் நடந்தது.. 1990ல் இலங்கை அரசு IPKF படையை திரும்ப பெற இந்திய அரசை கேட்டுக் கொண்டது.. படை இந்தியா திரும்பியது..

1994 வரை போர் தொடர்ந்தது.. 1994 இல் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் படி போர் நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது.. ஆனால் 1995 ல் மீண்டும் போர் தொடங்கியது..

2001ல் ரணில் விக்கிரம சிங்கே பிரதமரான பின்பு மீண்டும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டு போர் நிறுத்தம் மேற்கொண்டனர்..

ஆனால் இறுதியாக 2005 மஹிந்தா ராஜபக்சே அதிபர் ஆனதும் புலிகள் மீது போர் அறிவித்தார்..

இதற்கிடையே 2004 இல் இந்தியா இலங்கை இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது.. 2005 ல் இந்தியா ஒப்பந்தப்படி தன் படைகளையும் நவீன ரேடார் கருவிகளையும் அனுப்பியது.. 2005 இல் மற்றொரு ஒப்பந்தமாக இந்திய இலங்கை கடற்படை தகவல் பரிமாற்றம் ஒப்பந்தம் கையெழுத்தானது..

இறுதியில் 2009 ல் மே மாதத்தில் லட்ச கணக்கான மக்களை கொன்று குவித்தது இலங்கை அரசு.. புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்..

தன் ரத்த வெறி தீர்த்து கொண்டு போரை முடித்துக் கொண்டது இலங்கை அரசு.
 
Santhosh

Elite member
Messages
393
Points
123

:cry:
 
Top