• Please use an working Email account to verify your memebership in the forum

இந்திய ராணுவ தந்தை நேதாஜி

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
நேதாஜி : நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் நினைவு தினம் இன்று ஆகஸ்ட் 18. ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23 ல் பிறந்தார். பெற்றோர் : ஜானகிநாத் போசு, பிரபாவதி தேவி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
1942-ராணுவ கட்டமைப்பு : சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவின் முதல் ராணுவப் படையை 1942-ல் உருவாக்கினார். இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்தவர் நேதாஜி.

பெண்கள் படை :பெண்களுக்கென தனிப் பிரிவான ஜான்சி ராணி படையை தொடங்கினார் நேதாஜி. பெண்கள் படை கூடாரத்திற்குள் எதிர்பாராமல் நுழைந்த நேதாஜியை தடுத்த பெண் அதிகாரி கோவிந்தம்மாளுக்கு, அப்படையின் உயரிய விருதான "லாண்ட்சு நாயக்" விருது வழங்கி கௌரவித்தார்.

மகாத்மாவும், நேதாஜியும் : காந்தியின் செயல்களை துணிந்து எதிர்த்தாலும், அவர் மீது கொண்ட அன்பால் காந்தியை "தேசத் தந்தை" என்று இவரே முதலில் அழைத்தார். இருமுறை இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்த பின் ஃபார்வேர்ட் ப்ளாக் என்ற தனிக் கட்சி ஆரம்பித்தார்.

சுதந்திர வேட்கை : சுதந்திரம் பெற அகிம்சையை தவிர்த்து வன்முறையை கையாண்டார் நேதாஜி. இரண்டாம் உலகப் போரில் கைதான இந்திய வீரர்களை கொண்டு உருவாக்கிய ராணுவத்தின் மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்து தாக்குதல் நடத்தினார்.சிறையில் உண்ணா விரதம் இருந்தபோதும் சுதந்திரத்திற்காக பாடுபட்டார்.

மர்ம மரணம் : சுதந்திரதிற்காக பாடுபட்ட இவரது மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது. ஆகஸ்ட் 16, 1945-ல் பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் சென்ற நேதாஜி ஆகஸ்ட் 18 தைபே விமான விபத்தில் இறந்ததாக சொல்லப்படுகிறது.ஆனால், அவ்விபத்தை மறுத்தது தைவான் அரசு.


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
மரண விளக்க கமிஷன் : இந்தியா சுதந்திரத்திற்கு பின், முகர்ஜி கமிஷன் உட்பட 12 கமிஷன்கள் அமைத்து விசாரித்தும் நேதாஜியின் மரணம் மர்மமாகவே இருக்கிறது. இன்று வரை அவரது மரணம் நீருபிக்கப்படவில்லை.


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
இறுதி உரை : "நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் உள்ள இத்தருணத்தில், உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனம் தளராமல் நம்பிக்கையுடன் இருங்கள். இந்தியாவின் எதிர்காலத்தின் மீதான உங்களது நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டுவிடாதீர்கள். இந்தியாவை அடிமைப்படுத்தும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. வெகு நாட்கள் அல்ல, விரைவில் நம் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!"




 

Attachments

  • 0 bytes · Views: 0
  • 0 bytes · Views: 0
  • 0 bytes · Views: 0
  • 0 bytes · Views: 0
T

The Reader

Guest
Itha padikum pothu Nethaji life la iruntha 2 Womens Niyabagam varanga 1. His Ragasiya Kadhali Germany Emily, 2. INA Jansi Rani Regiment Chief Chennai Lakshmibai who...APJ kita President Election la Thotru poye 90 Vayasu vara Doctor ah Service panuna Lengend.
 
Top