• Please use an working Email account to verify your memebership in the forum

இந்தியா- சீனா போர் பதட்டம்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

லடாக்கில் அத்துமீறும் சீன வீரர்கள்.. தயாராக இருங்கள் என உத்தரவிடும் சீன அதிபர்.. இந்தியா சீனா போர் மூளும் சூழ்நிலை அதிகரிக்கும் இந்த சூழல் ஏன்?.. போர் நடந்தால் என்ன நடக்கும்?.. போரின் நோக்கம் என்ன?
போன்ற கேள்விகளுக்கு எளியவன் என் புரிதல் இதோ.. தவறுகள் இருப்பின் தோழமை சுட்டுதல் வரவேற்கிறேன்.

அமெரிக்கா- சீனா போர் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கிறது.. அமெரிக்கா சீனாவின் மீது போர் தொடுக்கும் மனநிலையிலேயே அனைத்து செயல்களையும் செய்கிறது..

அமெரிக்கா Intermediate nuclear force அமைப்பிலிருந்து வெளியேறிவிட்டது.. Open sky அமைப்பிலிருந்தும் வெளியேறிவிட்டது.. அமெரிக்க செனட்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. அதில் சீன நிறுவனங்களை பங்கு வர்த்தகத்திலிந்து வெளியேற்ற வேண்டும் எனும் கோரிக்கை வைக்கபட்டுள்ளது.. அமெரிக்காவின் போர்க்கப்பல் தென்கிழக்கு சீன கடல் எல்லையில் மையம் கொண்டுள்ளது.. இவை எல்லாம் அமெரிக்கா சீனாவை நிச்சயம் தாக்கும் என்பதை உணர்த்துகின்றன.. அப்படி தாக்குதல் நடந்தால் சீனா என்ன செய்யும்? சீனாவின் முன்னேற்பாடுகள் என்ன?

இந்தியா சீனாவை விட அமெரிக்காவிடம் நட்பு பாராட்டும் நாடு.. இந்தியாவை சுற்றி உள்ள அனைத்து நாடும் இந்தியாவிற்கு எதிரியே.. இலங்கை தவிர அனைத்துமே நேரடி எதிரி நாடு.. ஆனால் இலங்கையும் சீனாவின் நட்பு நாடு.. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவிற்கு போரின் போது இந்தியா உதவுவதை தடுக்க போருக்கு முன்பே இந்தியாவை தட்டி வைக்க எண்ணியிருக்கும் சீனா.. நாம் எவ்வளவு தான் வீர வசனம் பேசினாலும் தற்போதைய சூழலில் போரில் நமக்கு வெற்றி கிடைக்காது.. ஏன் போர் நடந்தாலே இந்தியா தாங்காது.. எனவே இந்த சூழலில் சில தாக்குதலை நடத்தியோ அல்லது வலுவான தாக்குதலை நடத்தியோ அல்லது குறிப்பிட்ட எல்லை பரப்பை பிடித்தோ சீனா இந்தியாவை அமெரிக்காவிற்கு உதவ கூடாது என்று மிரட்டும்.. அமெரிக்காவுடனான போர் ஒப்பந்தத்தை முடிக்க கேட்டுகொள்ளும்.. மேலும் சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களுக்கு ஆதரவையும் விலக்க சொல்லும்.. ஆனால் இந்த சூழலில் அமெரிக்கா இந்தியா உறவு என்ன ஆகும்.. இந்தியா மீதான சீன தாக்குதல் நடந்தால் இதையே ஒரு வாய்ப்பாக எண்ணி அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து போரிடுமா அல்லது தனித்து செயல்படுமா என்பது பின்வரும் காலங்களில் தெரியும்.. ??
 
Top