• Please use an working Email account to verify your memebership in the forum

ஆசீவகம் என்னும் மெய்யியல்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

ஆசீவகம் என்பது ஒரு தமிழ் மெய்யியல் கொள்கையும் துறவுஇயக்கமும் ஆகும். இது உலகின் முதல் மதம் . இந்த மெய்யியலின் தாக்கம் இன்றும் கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் மற்ற மதங்களில் காணப்படுகின்றன. இந்த ஆசீவக மெய்யியல் பற்றிய நூல்கள் கிடைக்கவில்லை. ஆயினும் பௌத்தம், ஜைனம் போன்ற சமய அறிஞர்கள் எழுதிய இறைமறுப்பு நூல்களில் இருந்தும், பிற தொல்பொருளியல்நூல்களிலிருந்தும் ஆசிவக தத்துவங்கள் பற்றிய எண்ணற்ற குறிப்புகள் உள்ளன

பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப்பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர் வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள்(தெளிவுகள்) அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு பெறுவது?
அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது. அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. கைம்மாறு கருதாத செம்மையான கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல், இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்
ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். அத்தீர்வுகளைத் தருபவர்கள் சித்தர்கள்ஆவர்.
ஆசீவக நெறியைப் பின்பற்றுபவர்கள் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார்கள். அப்பெயர்களாவன:
  1. ஆசீவகர்
  2. மற்கலியர்
  3. ஏகாந்த வாதி
  4. சித்தர் (அ) ஆசீவக சித்தர்
  5. அண்ணர் (அ) அண்ணல் - சித்தன்னவாசல்(அண்ணல் வாயில், சித்தர் அண்ணல் வாயில்), திருவண்ணாமலை(திரு அண்ணர் மலை), அண்ணமங்கலம்(அண்ணல் மங்கலம்), கருப்பண்ண சாமி(தன்னைவிட அறிவில் முதிர்ந்தோரையும் வயதில் முதிர்ந்தோரையும் அண்ணன்என்று அழைக்கும் வழக்கமும் இதனடியே தோன்றியதேயாகும்.).
  6. போதி சத்துவர்
  7. தீர்த்தங்கரர்(தீர்த்தம்+கரர்)
  8. தீர்த்தவிடங்கர்
ஆசீவக நெறியின் மெய்யியல் கோட்பாட்டின் படி, ஊழ்க மெய்யியலில்(யோகம்) உள்ள நிலைகளுள் இறுதி நிலையான ஐயநிலை(நல்வெள்ளை நிலை (அ) கழிவெண் பிறப்பு (அ) பரமசுக்க நிலை) என்பது ஆண்நாடியா அல்லது பெண் நாடியா எனப் பகுத்தறிய இயலாத நிலையினை உணர்த்துவதாகும். இந்த நிலையினை கைவரப் பெற்றவர்களே, வீடுபேறடைந்து, ஐயன்(சாத்தன்)என்றும், ஆர் என்னும் சிறப்பு விகுதி சேர்த்து ஐயனார்(கோழிக்கொடியோன், சாதவாகனன், சாத்தனார், காரி, நல்வெள்ளையார்) என்றும் வழங்கப் பெற்று, இச்சிறப்புத் தகுதி நிலையினால் தமிழரால் வணங்கப்படும் சிறப்புப் பெற்றவர்களாவர். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையில்இருபுலவர்கள் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார், முக்கல் ஆசான் நல்வெள்ளையார்எனும் பெயரில் உள்ளனர் என்பதும் இங்கு நோக்கத்தக்கது. நாளடைவில் சிறப்புக்குரிய சான்றோர்களையும் தகுதி நிலையில் உயர்ந்தவர்களையும் கூட ஐயா எனும் விளி குறிப்பதாயிற்று. இருபொருள்களின் மயக்குத் தோற்றநிலையினை ஐயம்(ஐயுறவு)எனக் குறிப்பதும் இதனடியில் எழுந்ததேயாகும்.ஐயர் மற்றும் ஐயங்கார் ஆகிய சொற்களும் இதிலிருந்து தோன்றியவையாகும்.
மதிப்பிற்கும் சிறப்பிற்கும் உரிய பெரியோரை என்று குறிக்கும் வழக்கு சங்ககாலம் தொட்டே இருந்து வந்துள்ளதனை திருவள்ளுவர் தமது 771ஆம் குறளில் நெடுமொழி வஞ்சியில் பாடியுள்ளதன் மூலம் அறியலாம்.
ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை ஈந்த இடமாகையால் பிற்காலத்தில் இக் கற்படுக்கைகளை அபகரித்தவர்களும் போதி சத்துவர் முதலிய பெயர் பெற்றனர். போதித்தலில் சத்துவ குணமுடையவர்; அதாவது கற்பித்தலில் சிறந்தவர் அறிவு மென்மை கொண்டவர் எனும் பொருளிலேயே திசைச் சொற்களால் வழங்கப் பெற்றனர். ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்த ஒரு பிரிவினர் மாதங்கர் என்பவராவார். மாதங்கர் எனும் பெயர், மாதங்கி எனும் ஆசீவகப் பெண்பாலுக்கு இணையான ஆண்பாற் பெயராகும். கச்சியப்ப மாதங்கர் (காச்யப மதங்கர்) என்பாரும் இவ்வழி வந்தோரே. தீர்வுகளும் வினைதீர்த்தலும் செய்த காரணத்தினால் தீர்த்தவிடங்கர்எனும் பெயராலும் அதைச் சார்ந்த பிற சொற்களாலும்(தீர்த்தங்கரர்(தீர்த்தம்+கரர்)) வழங்கப் பெற்றனர்.

ஆசீவகம் ,ஜைனம், பௌத்தம் இவற்றில் எது முதலில் தோன்றியது என்ற குழப்பம் இன்றும் நீடிக்கிறது..
எனினும் ஆசீவகமே சைவ சிந்தாந்தமாக கி.பி 4 ம் நூற்றாண்டில் உருமாறியது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
 
Top