• Please use an working Email account to verify your memebership in the forum

அவசியம் தானா?

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

View attachment

அவசியம் தானா? :

சில மாதம் முன்பு இந்திய பொருளாதாரத்தில் ஓர் மிகப் பெரிய தேக்கம் ஏற்பட்டதும் அதை சரிசெய்ய ரிசர்வ் வங்கியின் சேமிப்பு மற்றும் கோரப்படாத சேமிப்புகளிலிருந்து 1,70000 கோடி பணம் மத்திய அரசால் எடுக்கப்பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.. அதன் பின்பு இந்தியா கொரோனா பிடியில் சிக்கியிருக்கும் வேலையில் நிவாரணப் பணிகளுக்கு பணம் போதவில்லை.. எனவே எல்லோரும் உதவுங்கள் என்று மத்திய அரசு கேட்டுகொண்டது..

இந்த நிலை மாறுமா?.. மீண்டும் அனைவருக்கும் பணி கிடைக்குமா?. பொருளாதாரம் என்ன ஆகும் என்பன போன்ற பல கேள்விகளும் விவாதமும் நடைபெறும் இந்த நிலையில் தான் மத்திய அரசு 68000கோடி வாரா கடனை தள்ளுபடி செய்துள்ளது..

வர்தா புயல், ஒகி புயல் , கொரோனா இப்படி எந்த நிவாரணத்திற்கும் மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்கியதில்லை.. மத்திய அரசு சொல்லும் காரணம் நிதி பற்றாகுறை என்பதே.. ஆனால் பெருமுதலாளிகளின் கடனை மட்டும் ஏன் எந்த கேள்வியும் இன்றி தள்ளுபடி செய்கிறது ?

தள்ளி வைப்புக்கும் தள்ளுபடிக்கும் எந்த வித்யாசமும் இல்லை.. இருப்பினும் அரசு தள்ளிவைக்கவில்லை.. மொத்தமாக தள்ளுபடி செய்கிறது..

ஏன் இந்த அவசரம்? யாருடைய நலனுக்காக? ஏற்கனவே வங்கிகள் நட்ட கணக்கு காண்பிக்கும் நிலையில் இது அவசியம் தானா? மீண்டும் இந்த பணத்தை எங்கே பெறுவார்கள்? சாமானியனிடம் அபராதம் என்னும் அரக்கனை வங்கிகள் மீண்டும் கையில் எடுக்குமா?
 
Top