• Please use an working Email account to verify your memebership in the forum

அறிவோம் ஆசீவகம்..

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

தமிழருக்கு மதம் என்று
உண்டு எனில் அது சிவனியம் என்றாகிறது.. அதற்கும் முன்பு ஒரு வாழ்வியல்நெறியை தமிழர்கள் பின்பற்றி வந்தனர்..
அது சைவம்,யூதம்,இசுலாம் உள்பட பலசமயங்களின் மூலமாக இருந்தது..
ஆம்.. அதுவே
ஆசீவகம்!!
முற்காலத்தே குமுகத்தில் பல்துறை வித்தகர்களாக விளங்கியவர்கள் ஆசீவகத்துறவிகள்.. அவர்கள் கற்படுகைகளை இருப்பிடமாகக் கொண்டிருந்தனர்..அங்கிருந்து மக்களுக்குத் தேவையான அறம் பலவற்றைப் போதித்தனர்..
இவர்கள் சாத்தன்,ஐயன், தீர்த்தவிடங்கர் என பலவாறு அழைக்கப்பட்டனர்..

ஆசீவகம் பெயர்க்காரணம்:
ஆசு+ஈவு+அகம்
அதாவது குறையைக்கேட்ட உடனே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென, பிழையற்ற செம்மையான தீர்வுகளைத்
தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.
அதுவே அத்துறவிகளின் வாழிடத்தையும் குறிப்பதாயிற்று..

அறிவன்கூடம்:
காலநிலை மாற்றங்கள், கணியம், வானியல், மழைப்பொழிவு, வேளாண் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், வணிகம் எனப் பல்துறைகளிலும் மக்களுக்குத் தேவையான ஈவுகளைஅளித்த ஆசீவகத்துறவிகள் அவற்றைப் பிறருக்குக் கற்றுத்தர கல்விச்சாலை அமைத்தனர்..

ஆசீவகத்தின் தோற்றம்:
சைவம் எப்படி திருமூலரால் அமைப்புவடிவம் செய்யப்பட்டதோ அதுபோல ஆசீவகமும் மற்கலிகோசரால் சமயக்கட்டமைப்பு செய்யப்பட்டது.
ஆனால் உண்மையில் ஆசீவக மெய்யியலை உலகிற்குத் தந்தவர் ஆதிநாதர் எனும் சிவனே!!

ஆசீவக மூவர்:
1.மற்கலி கோசாலர்
ஊர்: திருப்பிடவூர்
#விதிக்கோட்பாடு
2.கணிநந்தாசிரியர்
ஊர்: மாங்குளம்
#அணுக்கோட்பாடு
3.வெண்காசியப்பர்
ஊர்: மறுகால்தலை
#வினைகோட்பாடு
ஆசீவக மரபில் கழிவெண் பிறப்பைக் கடந்து வீடடைந்தவர்களில் இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

விதிக்கோட்பாடு:
எவ்வளவு முயன்றாலும் உளதாதலைப் போக்கவோ அல்லது இலதாதலை ஆக்கவோ இயலாது. அனைத்தும் வினைப்படி நிகழ்வதில்லை. நம்மிலும் மேலான பேராற்றல் குறித்து வைத்த விதி(அ) நியதிப்படியே எல்லாம் நடைபெறுகின்றன.

அணுக்கோட்பாடு:
எல்லாப்பொருட்களுமே நிலம்,நீர்,தீ,வளி,இன்பம்,துன்பம், உயிர் எனும் எழுவகை அணுக்களால் ஆனவை.
அவ்வணுக்கள் ஒன்றிற்குள் ஒன்று நுழையாது. அதே போல் ஒரு அணு இரண்டாக பிரியவும் பிரியாது. ஆனால் அவை இணைந்து அணுத்திரளைகளாக (மூலக்கூறு) மாறமுடியும்.

வினைக்கோட்பாடு:
1.பேறு
2.இழப்பு
3.இடையூறு- உறுமிடத்து எய்துதல் 4.துக்கமுறுதல்- சுகமுறுதல் அவற்றினுடைய நீக்கம்
5.பிறத்தல்
6.சாதல்
இவ்வாறும் தவிர்க்க இயலாதவை.
எனவே யாவும் கருமப்படி அல்லாது இயல்புப்படி நடப்பதால் மனிதன் அன்றாட வாழ்க்கையினை மகிழ்ச்சியாக வாழவேண்டும்.

வீடுபேறு:
ஆசீவகர்கள் உயிர்கள் வீடுபேறு அடைவதை இருவகையாகக் கொள்வர்.
1.செம்போதகநெறி
2.மண்டலநெறி
செம்போதக நெறியடைந்த நல்லுயிர்கள் மீண்டும் உலகிற் பிறப்பு எய்தாதவர்கள்.
இவர்களே செம்போதகர்=ஐயனார் ஆவர்.
மண்டல நெறியில் உள்ளவர்கள் மீண்டும் உலகில் பிறப்பார்கள்.

அறுவகை_நிறக்கோட்பாடு:
ஆசீவகத்துறவியர் அவரவர் சிந்தனை,செயல்,ஊழ்கப் பயிற்சி,மெய்யியல் அறிவு இவற்றை அடிப்படையாகக் கொண்டு தனித்தனிநிறங்களால் குறிக்கப்பட்டனர்.இது ஒவ்வொரு உயிரும் ஆன்ம ஈடேற்றத்தில் எந்த படிநிலையில் உள்ளன என்பதைக் காட்டுவதாக இருந்தது..

1.கருமை
இரவு வானின் நிறம்
2.நீலம்
அதிகாலை ஞாயிறு உதிக்கும்முன் வானின் நிறம்
3.பசுமை
ஞாயிறு உதிக்கும்பொழுது இருக்கும் நிறம்
4.செம்மை
ஞாயிறு உதித்தபிறகு வானின் நிறம்
5.மஞ்சள்
ஞாயிறு உதித்தபிறகு ஞாயிற்றின் நிறம்
6.வெள்ளை
ஞாயிறு உச்சிக்கு வந்தபிறகு ஞாயிற்றின் நிறம்

ஆறுவகைகளுக்குள்ளும் மும்மூன்று உட்பிரிவுகள்:
படிநிலை உயரஉயர நிறத்தின் அழுத்தம் குறைந்துகொண்டே வரும்.
1. கரும்பிறப்பில்
அ.அடர்கருமை 18ஆம் படி
ஆ.கருமை 17ஆம் படி
இ.சாம்பல் 16ஆம் படி

2. நீலப்பிறப்பில்
அ.கருநீலம் 15ஆம் படி
ஆ.நீலம் 14ஆம் படி
இ.வான்நிறம் 13ஆம் படி

3. பசும் பிறப்பில்
அ.அடர்பச்சை 12ஆம் படி
ஆ.பச்சை 11ஆம் படி
இ.வெளிர்பச்சை 10ஆம் படி

4. செம்பிறப்பில்
அ.செம்மை 9ஆம் படி
ஆ.இளம்சிவப்பு 8ஆம் படி
இ.காவி 7ஆம் படி

5. மஞ்சள் பிறப்பில்
அ.அடர் மஞ்சள் 6ஆம் படி
ஆ.இளமஞ்சள் 5ஆம் படி
இ.பொன்மை 4ஆம் படி

6. வெண் பிறப்பில்
3ஆம் படி, 2ஆம் படி,1ஆம் படி என மூன்றிலும் வெண்மையே.
இந்த 18 படிநிலைகளை கடந்த பின்னரே நல்வெள்ளை எனும் நிறமிலி நிலையினை அடைவர் என்பதே ஆசீவக நிறக்கோட்பாடு.


கருமையில் பிறவி துவங்கி அறியாமை இருளுடன் வாழ்வைத் துவங்கும் ஆசீவக மாணவன் தனது பயிற்சியினாலும் ஒழுக்கத்தினாலும் அறுநிறப் பதினெண் படிகளைக் கடந்து நிறமிலி நிலையினை அடைவதே ‘வீடுபேறடைதல்’ எனப்படும். அப்படி ஒளியடைதலே ஆசீவக மெய்யியலின் நோக்கம்..

வள்ளலார் ஏழு திரைகளைக் கடந்து, அருட்பெருஞ்சோதி ஆண்டவரைக் கண்டுள்ளார்..
இங்கு ஏழாவதாகச் சொல்லப்படும் கலப்புவண்ணம் குறிப்பது நிறமிலி நிலையே!!
ஆக வள்ளலாரும் ஆசீவக மரபினரே!!

கருப்பு - வீரன்- கருப்பசாமி-வேகம் என்ற நிலையிலிருந்து நல்வெள்ளை - துறவி - சாத்தன் - அமைதி என்ற நிலைக்கு இட்டுச்செல்லுதல்..
தலைகீழாகச் செய்தால் போர்க்கலை...

ஆசீவகச்சின்னங்கள்:
1.திருநிலை
இருபுறமும் நீரூற்றும் யானைகளும் இடையில் தாமரை மலர் மீதமர்ந்திருக்கும் பெண்ணுருவம்.
இவர் மாதங்கி (செல்வத்தை இல்லத்தில் தங்க வைப்பவர்) எனப்படுவார்.
தென்னகத்தமிழரின் வீட்டுவாயில்களிலும், மங்கலநாணின் கால்காசுகளிலும் இடம்பெற்றிருக்கும்.

2.சுழற்றியம்
மெய்யியலில் தேடல்நிலையின் இறுதியில் உள்ள துறவிகளுக்கான சின்னம் ஆகக் குறிக்கப்படுகிறது. மேலும் ஓகநெறியில் மூலாதாரச்சக்கரத்தில் உள்ள விநாயகர் என்னும் துவக்கநிலை கடவுளின் அடையாளச்சின்னமாகவும் கருதப்படுகிறது..

3.கந்தழி
ஒரு நடுவப்புள்ளியில் துவங்கி வலஞ்சுழியாக வரையப்படும் சுருள்வளைவு.
உலகியலைக் கடந்து மெய்ப் பொருளைத்தேடி அலையும் இயக்கநிலையினையும் எல்லையின்றிப் பரந்து விரிந்து கிடக்கும் அண்டவெளியினுள் நிகழும் பல்வேறு தொடரியக்கங்களின் முடிவில்லா நிலையினையும் குறிப்பதாம்.

4.இருபுறமுத்தலைக்கோல்
குறியீட்டின் மேல்முனையிலுள்ள ‘ய’கரம்(சிவன்)உயிரைக் காத்தலையும்
கீழ்முனையில் தலைகீழாக உள்ள ‘ய’கரம்(கொற்றவை)தக்க காரணத்திற்காகத் தண்டிக்கும் கொலைக்கருவியாகவும் அறியப்படுகிறது.
வீட்டுவாயிலின் இருபுறமும் ஆண்டுதோறும் சுறவ முதல்நாளில் வரையப்படும்.

5.ஐம்முக்கோணம்
கொள்ளைநோய் காலத்தில் ஆசுமருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் செய்யப்படும் கொட்டிலில் வெளியிடத்திலிருந்து கொண்டுவரப்படும் கால்நடைகளை நோயச்சமின்றி அடைத்து வைக்கலாம் என்று தெரிவிக்கும் விதமாக ஐந்து ?கள் ஒரு நேர்வரிசையில் வரையப்படும்(கோமாற்றி எழுதுதல்)

6.முப்புள்ளி
மொழிநூலில் அகரமே உயிர் எழுத்துக்களின் ஆதியாகவும், இயக்கமற்ற மெய்யெழுத்துக்கள் யாவும் உகர ஒலிக்குறிப்புடன் ஊர்ந்து ஒலிக்கப்படுவனவாகவும் உள்ளன.
ஆக அகர உகரத் தொடர்பே மொழி, அசைவு,இயக்கம் ஆகியவற்றுக்கு அடிப்படையாய் உள்ளதால் இச்சின்னம் மிகச்சிறப்புடையது.

நடுவில் உள்ள முப்புள்ளி ஞானம் கூடும்நிலையினை அதாவது இயல்பான இருகண்களுடன் மூன்றாவதாக அறிவுக்கண் பெறும் நிலையினைக் குறிக்கும். எனவே, இது தனிநிலை எனப்பட்டது.
எதனையும் எழுதத்துவங்கும் முன் ஓலைகளில் அஃஉ என பதித்தபின்பே எழுதும் முறை உண்டு. தற்போது உகரமாக குறுகிவிட்டது.

7.புள் நகக்கீற்று
இது பறவையின் நகத்தினால் கீறப்பட்ட தடம் போன்ற சின்னம்.
ஆசீவகத்துறவிகளின் ஆய்விடங்களுக்கு அருகில் இருந்த கற்பாறைகளில் இவை வரையப்பட்டிருக்கும்.

நால்வகை தவங்கள்:
1.சம்மணம்
இருகால் மடக்கி உட்கார்ந்த நிலையில் உடலை வருத்தி செய்தல்
2.வௌவால் தவம்
ஒன்றனைப் பிடித்துக்கொண்டு வௌவால் போன்று தொங்குதல்
3.முள்தவம்
முட்படுக்கையின் மீது படுத்துக் கொள்தல்
4.ஐம்புறந்தீ
ஐந்து நெருப்புகளின் நடுவே ஆற்றும் தவம்

ஆசீவகத்துறவிகள் வாழ்வின் இறுதி நாட்களில் அகன்ற வாயுடைய தாழிகளில் புகுந்து தவம் மேற்கொண்டு உயிர் துறக்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர்.
இந்த உயர்நிலைத்தவத்தினை தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் "தாழி கவிப்பத் தவஞ்செய்வார் மண்ணாக
வாழிய நோற்றனை மால்வரை" என்கிறார்.

இறைவன் மூவேறு நிலைகளில் இருப்பதாக பலசமயங்கள் கருதுகின்றன. உண்மையில் மூன்று முதன்மை ஆசீவக சித்தர்களே மும்மூர்த்திகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.
அதாவது
1.பேயாண்டி(சிவன்) - செம்மை-தந்தை
2.மாயாண்டி(திருமால்) - கருமை-மகன்
3.விருமாண்டி(பிரமன்) - வெண்மை-தூய ஆவி

ஆசீவகயானை:
யானை பிறக்கும்போது பொதுவாக கருமையாகப் பிறக்கும். வளர வளர அது சாம்பல்நிறம் கொள்ளும். அதன்பிறகு சற்று கருநீல நிறம் கொள்ளும். ஒரு படிநிலையில் இருந்து மற்றொரு படிநிலைக்கு மாறுவது வண்ணமயமான ஆசீவக சமயத்திற்கு பொருந்துவதே காரணம்.

யானையின் கற்றுக்கொள்ளும் திறன், நினைவாற்றல்,பொறுமை, மனவலிமை,குழுவாக இயங்கும்பண்பு போன்றவற்றை ஒரு ஆசீவகர் பெற்றால்தான் பல படிநிலைகளைக் கடந்து நிறமிலி(கழிவெண்நிலை)யை அடையமுடியும்.அதனைக் குறிக்கவே சாத்தன் கோயில்களில் வெள்ளையானை சிற்பங்கள் உள்ளன.

நல்வெள்ளை நிலை என்பது தெய்வத்தன்மை அடைதலாகக் கருதப்பட்டது.ஆகவே யானையின் தலையையும் மாந்தரின் (ஆசீவக தீர்த்தங்கரர்) உடலையும் இணைத்து ஆசீவக நெறியின் குறியீட்டுக்கடவுளான விநாயகரை உருவாக்கினர்.
(சுக்லாம் பரதரம் = வெள்ளாடை அணிந்தவரே எனும் ஆரிய மந்திரம்!!)

அனைத்து கோயில்களிலும் முதலில் விநாயகரை வணங்கியபின்பே உள்ளே செல்லும் வழக்கம் இன்று உள்ளது.இது ஆசீவகத்தின் செல்வாக்கு மறையவில்லை என்பதனை உணர்த்துகிறது. பழந்தமிழரின் குரு(சாத்தன்) வணக்கமே தற்போது பிள்ளையார் வழிபாடாக மாறியுள்ளது!

திருச்செண்டு:

செண்டு என்பது ஆசீவக சாத்தன் கையில் இருக்கும் ஒருவகை ஆயுதம். இது நீண்டதண்டு போன்ற அமைப்பிலும் நுனியில் வளைந்தும் காணப்படும்.
இது பழந்தமிழர் பயன்படுத்திய படைக்கலன்களுள் ஒன்று. செண்டில் நிலைச்செண்டு,பரிச்செண்டு என பலவகைகளுண்டு.

கந்தபுராணப்பாடலில்
"...ஐயனே ஓலம் விண்ணோர்க்கு ஆதியே ஓலம் செண்டார்
கையனே ஓலம் எங்கள் கடவுளே ஓலம் மெய்யர்
மெய்யனே ஓலம் தொல் சீர் வீரனே ஓலம் ஓலம்" என இந்திராணி அரற்றுவதாக வரும்.
இங்கே செண்டார்கையன் என்பது ஆசீவக சாத்தனாகிய ஐயனாரையே குறிக்கும்..

பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட முத்திரைகளிலும் கூட சாத்தன் கையிலிருக்கும் திருச்செண்டே உள்ளது.
திருவிளையாடற்புராணத்தில்,
சுந்தரபாண்டியர் தமது மகன் உக்கிரகுமார பாண்டியருக்கு செவ்வேல்,வளை,செண்டு என மூன்று படைக்கலன்களை அளிப்பார். அதுவும் இவ்வகைச்செண்டே..
 

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

ஏழு_கன்னிமார்:
தமிழர்கள் தாய்த்தெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள். அதன்படி ஆசீவக வண்ணப்படிநிலைகளின் அடிப்படையில் ஏழு பெண் உருவகங்களை ஏற்படுத்தினர்.
அப்பெண்கள் ஏழு கன்னிமார் எனப்பட்டனர். இவர்களுக்கு சிலை கிடையாது. நடுகல் அல்லது பூடம் மட்டுமே உண்டு!

1. அமரி நிறமற்ற நிலை(72-84)
2. குமரி வெள்ளை(60-72)
3. கவுரி பொன்(48-60)
4. சமரி சிவப்பு(36-48)
5. சூலி பச்சை(24-36)
6. நீலி நீலம்(12-24)
7. கொற்றி கருப்பு(0-12வயது)

ஏழாம் நிலை:
(பேதைப்பருவம்-கொற்றவை)
கொல்+தவ்வை = வேட்டையாடுதலின் குறியீடாவாள்.
இவளது நிறம் அடர்கருப்பு.
இவள் பாலைநில மறவர்/கள்வர்களின் தெய்வம்.
ஆசீவக வாழ்வியல் இருள்நிலையில் இருந்து துவங்குவதைக் குறிக்கவே கருமைநிறம்!

ஆறாம் நிலை:
(பெதும்பைப்பருவம்-நீலி)
இவளது நிறம் நீலம்.
கண்ணுக்கு புலப்பட்டாலும் அதன் மறைபொருள் விளங்கப்படாமையைக் குறிப்பதற்காக இந்நிறம் பயன்படுத்தப்படுகிறது. கருப்பிலிருந்து நீலம்..
ஆசீவகக் கல்வியும் அப்படியே!

ஐந்தாம் நிலை:
(மங்கைப்பருவம்-சூலி)
இவளது நிறம் பச்சை.
மருதநிலத்தின் பச்சையம்மனாக வளர்ச்சியின் தெய்வமாக இவள் வணங்கப்படுகிறாள்.
காரணகாரியங்களை சிந்திக்கும் திறனானது துளிர்விடுவதை (நெற்கதிர் போல) இந்நிலை குறிக்கிறது.

நான்காம் நிலை:
(மடந்தைப்பருவம்-சமரி)
இவளது நிறம் சிவப்பு.
கோட்டைகளின் காவல் தெய்வமாக வணங்கப்படுபவள்.
ஆசீவகக் கல்வியின் முதல் பாதி இந்நிலையில் நிறைவுபெறும்.

மூன்றாம் நிலை:
(அரிவைப்பருவம்-கவுரி)
இவள் பொன்னிறத்தவள்(மஞ்சள்)
செல்வத்தை வாரி வழங்குபவளாக கருதப்படுபவள்.
ஆசீவக வழக்கில் 'மாதங்கி' என்று அழைக்கப்படும் சிறப்புடையவள்.

இரண்டாம் நிலை:
(தெரிவைப்பருவம்-குமரி)
இவளது நிறம் வெண்மை.
கழிவெண் நிலைக்கு முந்தையது.
ஞானத்தின் குறியீடாக போற்றப்படுபவள்.குன்றாத இளமை உடையவளாகக் கருதப்படுகிறாள்.
அதாவது இறப்பில்லா நிலையை நோக்கி செல்லுதலைக் குறிக்கவே!

முதல்நிலை (பேரிளம் பெண்):
இவள் காற்றைப்போல கண்ணுக்கு புலப்படாதவள்.
கழிவெண் (அ) நிறமிலி நிலையினைக் குறிப்பவள்.
இறப்பினை வென்றவள்.இவளே பழையோள்,தவ்வை,மாமுகடி என இலக்கியத்தில் பலவாறு புகழப்படும் மூத்தோள்!
அனைத்து வளங்களின் மூலமாக பழந்தமிழரால் போற்றப்பட்டவள்.

சேட்டை தேவி:
பழங்காலத்தில் செழிப்புக்குரியவளாகவும்,நோய் நொடிகளிலிருந்து குழந்தைகளைக் காப்பவளாகவும் தொழப்பட்ட மூ(த்த)தேவி பிற்காலத்தில் இலக்குமியின் செல்வாக்கால் புறந்தள்ளப்பட்டாள்.பாண்டியர் காலத்தில் தனியாக சேட்டையார் கோவில் என்றே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது!

தாமரை மலரானது மேலான ஞானத்தின் அடையாளமாகவும் உயிர்த்தெழுதல்(கழிவெண் நிலை),
தூய்மை மற்றும் பற்றற்ற வாழ்க்கையின் குறியீடாகவும் கருதப்படுகிறது..
இதனாலே 'பூவினுக்கு அருங்கலம் பொங்குதாமரை' என சைவம் புகழும்!

சித்தர்களின் ஓக முறையின்படி ஏழுசக்கரங்கள் சூக்கும உடலில் குடிகொண்டிருப்பவை. இவற்றை தாமரை மலரின் இதழ்களோடு ஒப்பிடுகின்றனர். அடிமுதல் முடிவரை,முறையே
அண்டி குறியிடை 4
அண்டி கொப்பூழிடை 6
கொப்பூழ் 10
நெஞ்சாங்குலை 12
அடிநா பகுதி 16
இரு புருவத்திடை 2
உச்சந்தலை 1008

ஆசீவக சித்தர்கள் மெய்யறிவு நிலை எய்துவது என்பது 1008 இதழ்களுடைய வெண்தாமரையால் குறிக்கப்பெறுகிறது..
இது மனித உடலின் மூலச்சக்கரத்தில் சுருண்டிருக்கும் பேராற்றலானது உச்சந்தலை வழியாக வெளியேறி பேரண்டத்தோடு கலப்பதைச் சுட்டுகிறது.அதாவது இறை நிலையினை அடைதல்..

கொத்தாண்டி:
நல்வெள்ளை நிலை அடைந்த தீர்த்தங்கரர்கள் தாமரை மலரில் அமர்ந்திருப்பதாக அல்லது தாமரை மலர்களை கையில் ஏந்தியிருப்பதாக கருதப்பட்டனர். அதில் முதலாவதாக வருபவர் ஆதிநாதர்..
இவர் பௌத்தத்தில் அவலோகிதர்-சைவத்தில் தெக்கணமூர்த்தி-ஆசீவகத்தில் கொத்தாண்டி(தாமரை) எனப்படுகிறார்!

இவர் பௌத்தர் வணங்கும் போதிசத்துவர்களில் ஒருவர். இவர் தாமரை மலர்க்கொத்தை கையில் ஏந்தியிருப்பதால் பத்மபாணி எனப்படுகிறார்.பொதிகைமலையின் உச்சியில் வீற்றிருப்பதாகவும் இவரே அகத்தியருக்கு தமிழைக் கற்றுத்தந்ததாகவும் வீரசோழியம் கூறுகிறது.

தெக்கணமூர்த்தி:
அவலோகிதரோடு சொல்லப்படும் நாற்கரங்கள்,தாமரையில் அமர்தல்,பொதிகை மலை இருப்பிடம்,தமிழை அகத்தியருக்கு பயிற்றுவித்தல் போன்றவை பதுமக்கொத்தரே தமிழர்களின் தெக்கணமூர்த்தி என்பதை உறுதிசெய்யும்..
இந்த அவலோகிதருக்கென்று புகழ்வாய்ந்த ஒரு கோயிலும் இருந்தது!
 

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

சபரிமலை:
பண்டைய மலைநாட்டு எயினர்களின் குலதெய்வம் கொற்றவை. இவர்கள் சபரர் எனப்பட்டனர். சபரர்கள் வணங்கிய கொற்றவை சபரி எனவும் அவர்கள் வாழ்ந்தமலை சபரிமலை எனவும் வழங்கப்பட்டுள்ளது. இம்மலையில்தான்ஆசீவக தீர்த்தங்கர் அவலோகிதருக்கு(உலகநாதன்) கோயில் இருந்தது!இதுவே அவலோகிதர் கோயில் எனப்பட்டது..

ஆசிவக பள்ளி:
அரசகுலத்தில் பிறந்து கழிவெண்நிலையினை அடைந்த மெய்கண்ட சாத்தனே இங்கு குருவாய் இருந்து மக்களுக்கு வழிகாட்டியுள்ளார்.அவர் புலிகளை வசப்படுத்துவதில் சித்தி பெற்றிருந்ததால் மக்களால் 'பல்புலி தாத்த காரி' என அன்போடு அழைக்கப்பட்டுள்ளார்!

ஐயன்:
நல்வெள்ளை நிலையை எய்தியோர் ஒளி உடலைப் பெறுவர்.. அதாவது ஆண் நாடியா பெண் நாடியா என்று அறியப்படாத தன்மையை அடைதல்.இதுவே 'ஐய நிலை' ஆகும்.
ஐயப்ப வழிபாட்டில் ஹரிஹர சுதன்(ஆண்-சிவன்,பெண்-திருமால்) என்பதும் மகரசோதி காட்சியும் ஆசீவகத்தின் அடிப்படையிலிருந்து வந்தவையே!

ஐயப்ப_வழிபாடு:

மாலை அணிவோர் தொடர்ந்து 18 ஆண்டுகள் செல்வர்.இதில் முதல் மூன்றாண்டுகளும் கருப்பு உடை அடுத்த மூன்றில் நீல உடை,அடுத்து பச்சை உடை,அடுத்து சிவப்பு உடை, அதற்கடுத்த மூன்றில் மஞ்சள் உடை,இறுதி மூன்றாண்டுகளில் ஒளிர் வெண்மை உடையினையும் அணிந்து நோன்பிருப்பர்.

18ஆம் ஆண்டின் இறுதியில் தென்னை வைத்து நோன்பு முடிப்பர். இது ஆசீவக மரபின் ஐயனார் ஊழ்கத்தைத் தழுவிய ஒரு மாறுபாடடைந்த வழிபாடேயாகும். தேங்காயின் உள்ளே இருக்கும் பருப்பின் மூலம் நல்வெள்ளை நிலையினைக் குறிப்பால் உணர்த்தவே இது பின்பற்றப்பட்டுள்ளது!!

சபரிமலை பதினெட்டுபடிகள்:
ஆசீவக வண்ணக்கோட்டுப் படிநிலையைக் குறிக்கவே இந்த 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.. இதனைக் கடந்தால் ஆசீவக ஐயனைக் காணலாம்.அவரிடமே நமது குறைகளைக்கூறி தீர்வைப் பெறலாம்!

"பதினெட்டுபடி மீது ஏறிடுவோம்
கதியென்று அவரைச் சரணடைவோம்"

பழந்தமிழர் மழைக்காலத்திற்கு பிந்தைய கார்த்திகை-தைமாதம் வரை முன்னோர்களின் வழிபாட்டுக்காலமாகக் கருதிவந்தனர்.அதன்படியே தங்கள் மூதாதையான சாத்தனைக் காண நோன்பிருந்து சென்றுவந்தனர். பம்பை நதிக்கரையில் முன்னோர் வணக்கம் செய்து விருந்து(ஐயப்ப சத்ய)படைப்பதன் காரணமும் இதுவே!

ஐயனார் மற்கலி கோசர் உரைத்தபடி ஆசீவக வழியினர் இறுதி நிலை எய்துவதற்கு எட்டு வகையான உறுதிப்பொருட்களைக் கடக்க வேண்டியுள்ளது!
ஊழ்கத்தினால் ஒளியுடல் அடைந்து தீர்த்தங்கரர் ஆவார்..

இதுவே
இறுதி எட்டுக்கோட்பாடு..

1. கடைமிடறு:
இறுதி நிலையிலுள்ளவர்கள் நாவறட்சியினை நீக்கும் பொருட்டும் ஊழ்கம் வெற்றி பெறவும் வேண்டி உடனிருப்போரால் அளிக்கப் பெறும் ‘இறுதிப் பானம்'.
நத்தைச்சூரி(வர்ம முறிப்பான்), அருகுபத மூலிகை போன்றவை கொண்டு இந்தப்பானம் தயாரிக்கப்பட்டதாம்!

2. இறுதிப் பாடல்:
இறுதி நிலையாளரைச் சுற்றி அமர்ந்து ஆசீவக துறவியர் தம் குரு மரபினை போற்றி ஊழ்கம் நல்லபடியாக கடக்க வேண்டுமென்றும் வாழ்த்திப் பாடுவது! ??
இது நோற்பவருக்குப் புத்துணர்வும் நம்பிக்கையும் ஊட்டுவதற்காகவாம்!

3. இறுதி ஆடல்:
கடைப்படி கடக்க வேண்டி ‘நிருத்தம்’ எனக் குறிக்கும் வகையினை ஒத்த ‘சூரிய நாடி’ ஓடச் செய்யும் ஓர் நடனம். இது உடலில் வெம்மையைக் கூட்டி ஊழ்கியின் நாடிச் சவ்வினை இளக்கி அச்சவ்வினைக் கிழித்து உயிர்வளி மேலேறப் பயன்படும்..

4. இறுதி வரவேற்பு:
ஊழ்கியின் உறுதியையும், பயிற்சி வளமையையும் கண்டு, ஊழ்கியால் மதிக்கப்படும் அவரது குரு மரபினர் (ஒளியுடல் பெற்றவர்கள்) இவ்வூழ்கியை எதிர் கொண்டு வரவேற்பர் என்ற நம்பிக்கை..
(உண்மை: இயற்கையுடன் கலத்தல்)
சமண புத்த சமயங்களில் உம்பரகம் புகுதல் என்பர்!

5. காரிருள்:
இறுதி நிலையினை அடையுமுன் உயிர் வளியின் அழுத்தம் கூடக் கூட ஏற்படும் ஒரு அழுத்த நிலையினால் கடும் காரிருளும் மேகமும் சூழ்ந்தது போல் தோன்றுமாம். அப்போது உறுதியாக ஊழ்கத்தினைக் கைவிடாது தொடர வேண்டும்.

6. நிறையாவழிகை அமிழ்தூற்று:
உயிர்வளி மேலழுத்தலால் அண்ணாக்கின் பின்புறம் ஒரு சிறு புழை யானையின் தும்பிக்கை போன்ற சிறு சவ்வின் முனையில் தோன்றி ஐய நீரைச் சுரக்கும். இதனை அறிவர் அமிழ்தம் என்பர்!
இவ்வமுதை உண்டால் பசியோடு தாகமோ ஏற்படாது..

7. தமர் திறப்பு:
மேலெழும்பிய உயிர்வளி அமுதூற்றைக் கடந்த பின் புருவ மத்தியின் பின்புறம் உள்ள துளை திறக்கும். தமர் திறந்த பின் 1008 இதழ்களுடைய தாமரையனைய உயிர்ப்பெருவெளியை உயிர்வளி சென்றடையும் போது ஒளியுடல் கிட்டும். "வீடுபேறு"
8. ஐயன் நிலை அடைதல்:
வீடுபேற்றை எய்தியவர் ஐயநிலை அடைந்ததாகக் கருதப்படுவார்..
அவர் ஐயனார்களுள் ஒருவராகிறார்! "நல்வெள்ளை"
??????????
 
Top