Phoenix
Well-known member
- Messages
- 977
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
அன்றில்கள்
முகம் பார்த்ததில்லை
விரல் பிடித்ததில்லை - ஆயினும்
கண்மூடிடும் வேளைகளில்
உன் ஆவர்த்தனம் மட்டுமே!
யானும் நீயும் எம்மொழி தீரமோ
ஏந்திழை அறிகிலேன் - எனினும்
நீயில்லா நான், பிரித்தால்
பொருளற்றுப் போகும் இரட்டைக்கிளவியாகிறேன்!
தலை கனத்து விழி திறக்க இயலா நிலையிலும்
உடல் கொதித்து மூர்ச்சையான போதிலும்
என் இணை அன்றிலாம் - உன்னைச்
சுற்றியே இயங்குது நெஞ்சம்!
முகம் பார்த்ததில்லை
விரல் பிடித்ததில்லை - ஆயினும்
கண்மூடிடும் வேளைகளில்
உன் ஆவர்த்தனம் மட்டுமே!
யானும் நீயும் எம்மொழி தீரமோ
ஏந்திழை அறிகிலேன் - எனினும்
நீயில்லா நான், பிரித்தால்
பொருளற்றுப் போகும் இரட்டைக்கிளவியாகிறேன்!
தலை கனத்து விழி திறக்க இயலா நிலையிலும்
உடல் கொதித்து மூர்ச்சையான போதிலும்
என் இணை அன்றிலாம் - உன்னைச்
சுற்றியே இயங்குது நெஞ்சம்!