• Please use an working Email account to verify your memebership in the forum

நான் வியந்த அரசியல்வாதி

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

என் நாயகன்..

ஒரு முறை காமராசர் சென்னையில் ஒரு பள்ளி திறப்பு விழாவிற்கு சென்றார். அப்பொழுது அருகில் இருக்கும் தன் நண்பர் வீட்டுக்கு சென்றார். அது குடிசைகள் நிறைந்த பகுதி. நண்பரை பார்த்த காமராசர் "நீ ஏன் இங்கு இருக்கிறாய். பேசாமல் கட்டிடத்திற்கு சென்றுவிடு. நான் ஏற்பாடு செய்கிறேன் என்றார்" ஆனால் அவரின் நண்பரோ எளிமையாக " அது முடியாது காமராசு. எப்போது எல்லா மக்களும் குடிசையை விட்டு கட்டிடத்திற்கு செல்கிறார்களோ அப்போது செல்கிறேன்" என்றார் பிடிவாதமாக. காமராசர் உடனே " சரி கிளம்பு. பள்ளி திறக்க செல்கிறேன். நீயும் வா. இந்த பள்ளி இங்கு வர அதிகம் உழைத்தது நீதான்" என்றார். உடனே அவர் நண்பர் "நீ போ நான் சிறிது நேரத்தில் வருகிறேன்"என்றார்.சிறிது நேரத்திற்கு பின் வந்த நண்பனிடம் காமராசர் ஏன் தாமதம் என்றார். அவர் நண்பரோ "இருந்தது ஒரு வேட்டி சட்டை. அதை அலசி காயபோட்டு வைத்திருந்தேன். காய்ந்ததும் உடுத்தி வந்தேன் அதான் தாமதம்" என்றார். கண்கலங்கி போன காமராசர் உடனே ஒரு ஏற்பாடு செய்தார். அந்த நண்பரின் மனைவி பத்மாவதி கொஞ்சம் படித்தவர். எனவே அவருக்கு அந்த புதிய பள்ளியில் ஆசிரியர் பணி ஏற்பாடு செய்தார். பின்பு அதிகாரிகளிடம் எக்காரணம் கொண்டும் நான்தான் வேலை ஏற்பாடு செய்தேன் என்று அவனுக்கு தெரியக்கூடாது. தெரிந்தால் வேலைக்கு அனுப்பமாட்டான் என்றார் காமராசர். இவ்வளவு வறுமையான நிலையில் வாழ்ந்த அந்த காமராசர் நண்பர் இந்த நிகழ்வுகள் நடக்கும் போது சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, எதிர்க்கட்சி தலைவரும் கூட.. அவர்தான் ஜீவா ❤️❤️

இது மட்டுமா. ஒருமுறை ஜீவா ரயிலில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரின் கட்சிக்காரர் வந்தார். பேசிக்கொண்டே இருந்த கட்சிக்காரர் தேனீர் அருந்தலாமா என்றார். இவரும் சரி என்றார். தேனீர் அருந்தி முடித்ததும் இன்னொரு தேனீர் கிடைக்குமா பசிக்கிறது என்றார் ஜீவா. அவரும் வாங்கி கொடுத்தார். பின்பு பேசிக்கொண்டு இருக்கும்போது எங்கே இருந்து வருகிறீர்கள் என்றார். கட்சிக்கு நிதி திரட்ட சென்றேன் என்றார் ஜீவா. கையில் என்ன பை என்றார் அவர். அது நிதி பணம் என்றார் ஜீவா. அதில் சாப்பிட்டு இருக்கலாமே என்றார் அவர் கட்சிக்காரர். அதற்கு ஜீவா "இது கட்சி பணம். இதை தொடக்கூடாது" என்றார்.

பொதுவுடைமை தத்துவத்தின் பொருட்டு இறுதிவரை சொத்து சேர்க்காதவர். எம்.ஜி.ஆர் இறுதிவரை உதவி செய்ய முயன்றும் வாங்கி கொள்ளாதவர். படிக்கும் நூலைக்கூட படித்ததும் அடுத்தவர்க்கு கொடுத்து விடுவார். தத்துவத்தின் காதலால் ஈ. வெ. ரா வை எதிர்த்தவர். ஈரோட்டு பாதை சரியா என்ற நூல் ஆசிரியர். இறுதிவரை இவர் கேள்விக்கு ஈ.வெ. ரா விடம் பதில் இல்லை. ராஜாஜி, ஈ. வெ. ரா, அண்ணாதுரை என்று எல்லாருரையும் தத்துவ ரீதியாக எதிர்த்தவர். போராட்டத்தில் போலீசார் அடக்குமுறைக்கு எதிராக சட்டையை கழட்டி நெஞ்சை காட்டிக்கொண்டு சுடு சுடு என்று முன் வரிசையில் நின்றவர். எங்கள் ஜீவா ❤️❤️
 
Top