• Please use an working Email account to verify your memebership in the forum

இடதுசாரி / வலதுசாரி

T

The Reader

Guest
இடதுசாரி(கட்சி) என்றால் என்ன?
வலதுசாரி(கட்சி) என்றால் என்ன?

வரலாற்றில் பின்னே சென்றால் இது ஒரு காரணச் சொல் என்பது புரியும். இந்தச் சொல்லாட்சி கொண்டுவரப்பட்டது பிரெஞ்சு புரட்சியின்போது...

1789–99 காலத்தில் மன்னன் லூயிஸ் XVI ஆட்சி பெரும் நிதிச் சுமையில் சிக்கிக்கொண்டது. இருப்பினும் செல்வந்தர்களும், அரசுக்கு நெருக்கமானவர்களும் ஆடம்பர / செல்வ செழிப்பான வாழ்வியலைக் கொண்டிருந்தனர். நாட்டில் கடைநிலையில் உள்ள ஏழைகள் விவசாயக் கூலிகளாக இருந்தனர். நிதிநிலையை சமாளிக்க கடைநிலை மக்கள் மீது பெரும் வரி சுமத்தப்பட்டது. அரசுக்கு ஆலோசனை சொல்வோர், அரசவையில் இருப்போர் எல்லோரும் செல்வந்தர்களுக்கு பாதிப்பு வராத வண்ணம், வரிச் சுமையை 3-ம் கட்ட மக்களிடம் (விவசாயம், தினக்கூலி) திணித்தனர். இதன் காரணமாக மக்கள் ஆட்சிக்கு எதிராகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்தக் காலகட்டத்தில் அரசவை கூட்டப்பட்டது. அரசவையில் வலது புறமாக ஒரு சாராரும், இடது புறமாக ஒரு சாராரும் தனித்தனிக் கருத்துக்களை எழுப்பினர்.

மன்னராட்சியை ஆதரிப்பவரும், பழமைவாதக் கொள்கை உள்ளோரும், இனவெறியை ஆதரிப்பாரும், செல்வந்தர்களையும் மற்றவர்களையும் ஒரே அளவுகோலில் நடத்த கூடாது என்போரும், இன மேன்மைப்படி (சாதி போல) ஏற்ற தாழ்வு இயல்பு, செல்வந்தர்களுக்குச் சலுகைகள் தேவை என்ற கருத்தை அவையில் வலது புறமாக இருந்தோர் எழுப்பினர்.

அவையில் இடது புறமாக இருந்த சாமானிய மக்கள்; அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும், இன மேன்மைப்படி ஏற்ற தாழ்வு கூடாது, செல்வந்தர்களுக்கு வரித் தளர்வு கூடாது, ஆட்சிமுறையில் மாற்றம் வேண்டும், ஒடுக்கப்பட்டோர் சமமாக நடத்தப்பட வேண்டும் போன்ற கருத்தை எழுப்பினர்.

இதுவே பின்னாளில் இடதுசாரிக் கொள்கை, வலதுசாரிக் கொள்கை என்று கூறப்பட்டது.

சுருக்கமாகச் சொன்னால்...

சமூக ஏற்ற தாழ்வு இயல்பு, பழமைவாதக் கொள்கைகளை போற்றுதல், முதலாளித்துவ அமைப்பு, இன மேன்மை என்கிற இனவெறி, (சாதி, மத வெறி போன்ற சித்தாந்தங்களைக் கொண்டது) மூட நம்பிக்கைகள், கடவுள் பெயரால் ஏமாற்றுதல், விஞ்ஞான விரோதம், பகுத்தறிவு விரோதம், பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை உள்ளடக்கியது வலதுசாரிக் கொள்கை.

சமூக ஏற்ற தாழ்வு இயல்பல்ல, பொருளாதாரச் சமநிலை, நவீன சமத்துவச் சித்தாந்தங்கள், தொழிலாளிவர்க்க அமைப்பு, அனைவரும் அரசின் முன் சமம் போன்ற கருத்துக்களைக் கொண்டது, சாதி, மதங்களுக்கு எதிரானது, கடவுள் மறுப்பு, விஞ்ஞானக் கண்ணோட்டம், சமூக சமத்துவம், பொருளியல் சமத்துவம், பெண் விடுதலை போன்றவற்றை உள்ளடக்கியது இடதுசாரிக் கொள்கை.

இப்போது சொல்லுங்கள்
நீங்கள் யார்...
வலதுசாரியா? இடதுசாரியா?

நீங்கள் எந்தப் பக்கம்...
வலதுசாரிகளின் பக்கமா?
இடதுசாரிகளின் பக்கமா?
 
Last edited by a moderator:
Top