• Please use an working Email account to verify your memebership in the forum

ஆடி பெருக்கும் தமிழர் வானியலும்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

@saiva_twitz பதிவிலிருந்து...

கணியக்கலையில் கோலோச்சிய சங்கத்தமிழர் முழுமதியும் விண்மீனும் சேரும் நாளையே சிறப்பாகக் கொண்டாடினர்.. அதாவது மொத்தமுள்ள 27 விண்மீன்களுள் சரியாக 12 விண்மீன்களுடன் முழுநிலவு பொருந்தி வருவதைக் கணக்கிட்டு அதன்படி தங்கள் விழாக்களை அமைத்துக் கொண்டனர்.

உலகமெங்கும் பல பழமையான நாகரிகங்களில் நிலவை அடிப்படையாகக் கொண்ட நாள்காட்டியே வழக்கத்தில் இருந்தது..
தமிழர் இன்று கதிர் நாள்காட்டியை ஆண்டு வரையறைக்கு பயன்படுத்தினாலும் மாத வரையறைக்கு திங்களையே பயன்படுத்துகின்றனர்!

நிலவானது பூமியை 27.32 நாட்களிலேயே சுற்றி முடித்துவிடுகிறது. ஆனால், பூமி
சூரியனை சுற்றி வருவதால், நிலவு மாதம் தொடங்கிய பொழுது சூரியன் இருந்த அதேநிலைக்கு நிலவு வர 2.23 நாட்கள் அதிகமாக எடுத்துக்கொள்கிறது.
மொத்தம் 29 நாட்கள் 31 நாழிகைகள் 50 விநாடிகள் 8 தற்பரைகள்.இது ஒரு நிலவு மாதம்!

நிலவு நாள்காட்டியில் மறைமதி, முழுமதி என இரு வகைகள் உள்ளன. மாதத்தில் முதல்நாள் காருவாவில்/வெள்ளுவாவில் தொடங்கும் வழக்கம் உண்டு..
இருப்பினும் மூன்றாம் பிறையை முதல் நாளாகக் கொண்டு நிலவு மாதம் தொடங்குதலே சரியானது!

மேலேகூறிய கணக்கீட்டின்படி 12 விண்மீன்களோடு முழுநிலவு சேரும் 12 நிலவு மாதங்களைக் கொண்ட ஒரு நிலவு ஆண்டின் கால அளவு 354 நாட்கள் 20 நாழிகைகள் 1 நொடிகள் 36 தற்பரைகள் ஆகும்..
இது பருவகால மாற்றங்களால் தடுமாறுதலுக்கு உள்ளாகியது!

பருவகாலங்கள் பூமியானது சூரியனை சுற்றுவதால் ஏற்படக்கூடியவை..
இரண்டு இளவேனிற் காலங்களுக்கு இடைப்பட்ட காலத்தின் அளவு 365 நாள்கள் 15நாழிகைகள் 31நொடிகள் 15தற்பரைகள்.
இது மதி ஆண்டை விட 11 நாட்களை மிகுதியாகக் கொண்டுள்ளது..
இதுவே சிக்கலானது!

நிலவு ஆண்டில் குறைவுபட்ட 11 நாட்களைச் சரிக்கட்ட மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கூடுதல் மாதத்தைச் சேர்த்தனர்.
அரேபியரிடம்கூட இம்முறை இருந்துள்ளது..
தமிழர்கள் அதனை ஆடிமாதத்திற்குப் பின் சேர்த்தனர்..
இதுவே பெருகிய ஆடி ஆனது..

இந்த பெருகிய ஆடியில் மக்கள் மங்கள நிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்தனர்..
இன்றைக்கோ மொத்தமாக ஆடியைத் தவிர்த்தாயிற்று!

ஆடிமாதத்து முழுமதியில் பூராடம் வரும்..

ஆனால் ஆடிப்பூரமே சிறப்பு பெற்றுள்ளது!
இன்றைக்கு அந்தப் பெருகிய ஆடி தொலைந்துவிட்டது!

நாம் தற்போது கதிர்-மதி கலப்பு நாள்காட்டியைப் பயன்படுத்துகிறோம்..
இதனால் நெட்டாண்டின் குழப்பத்தில் சிக்கி முழுநிலவு தடுமாறுகிறது!
அதன்பின் வரும் ஆவணி மாதத்து வெள்ளுவா சேரும் அவிட்டமும் பின்வாங்குகிறது..

நாம் இதை உணராமல் ஆடி மாதத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடுகிறோம்!
இழந்தவை ஏராளம்..
அவற்றுள் மேலே சொன்னதும் ஒன்று!
அது புரியாமல் "ஐ! இந்த தடவை தீபாவளி சீக்கிரம் வந்துட்டு"
என்று பேசித் திரிகிறோம்!
??
 
Top