• Please use an working Email account to verify your memebership in the forum

INDRU ORU THAGAVAL

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

✵✿✵ ?இன்று ஒரு தகவல்? ✵✿✵ ?இயற்கை முறையில் தக்காளியை தாக்கும் பூச்சி கட்டுப்பாடு...!!!?
சோற்றுக் கற்றாழை, துளசி மற்றும் ஆடு தின்ன பாளை செடிகளின் சாற்றை தயார் செய்து, தக்காளி செடி மீது தெளித்தால் எல்லாவிதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதோடு, பூ உதிர்தலையும் குறைக்கலாம்.

1. 20மிலி காகித பூ இலைச் சாற்றில் ஒரு லிட்டர் நீர் கலந்து தக்காளி விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் நாற்றாங்காலில் நாற்று அழுகல் நோய் வராது.

2. 25-30 நாட்கள் ஆன நாற்றுக்களை நடவுக்கு பயன்படுத்தவேண்டும்.

3. பூ உதிர்தலை குறைக்க, வேப்பம் எண்ணெயை தெளிக்கலாம்.

4. பூ உதிர்தலை குறைக்க சூளைச் சாம்பல் தோட்டத்தைச்சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.

5. செண்டுமல்லி செடியை தக்காளி தோட்டதததைச் சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.

6. காய் துளைப்பானை தடுக்க, பூண்டு அல்லது வெங்காய செடியை வரப்பு பயிராக நடவு செய்தல் வேண்டும்.

7. பென்சோயின் கொண்டு பூக்கும் போது காலை, மாலை வேளைகளில் புகை மூட்டினால் காய் துளைப்பான் மற்றும் அசுவினி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

8. வேப்பம் புண்ணாக்கு உடன் ஆட்டுப் புழுக்கையை கலந்து வயலில் இட்டால் இலைப்பேன் தாக்கம் கட்டுப்படும்.

9. காலை வேளையில் சாம்பலைத் தக்காளிச் செடிக்குத் தூவினால் இலைப்பேன் மற்றும் அசுவினி தாக்குதல் கட்டுப்படும்.

10. அனைத்து வித பூச்சிகளையும் கட்டுப்படுத்த 11/2 கிலோ சாம்பலை சாணியுடன் கலந்து தெளித்தல் வேண்டும்.

11. சர்வோதய சோப் கரைசலை இலைகளின் மீது தெளித்தால், மாவுப் பூச்சியின் முட்டை மீது படிந்து இறந்து விடும்.

?இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்வது எப்படி??

?மண் மற்றும் தட்பவெப்பநிலை :? தக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் மிகவம் ஏற்றது. மண்ணின் கார தன்மை 6.0-7.0 என்ற அளவில் இருக்கவேண்டும். வெப்பநிலை 21 முதல் 24 செ.கி வரை இருப்பது இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

?விதைக்கும் காலம் :? ஜீன் - ஜீலை, நவம்பர் - டிசம்பர், பிப்ரவரி - மார்ச்.

?நடும் பருவம் :? அக்டோபர் - நவம்பர், பிப்ரவரி - மார்ச், மே - ஜீன்.

?விதையும் விதைப்பும்?

?விதை அளவு :? எக்டருக்கு 350-400 கிராம் விதைகள்.

?இரகங்கள் :? கோ.1, கோ.2, மருதம் (கோ 3), பிகேஎம் 1, பூசாரூபி, பையூர் 1, சிஒஎல்சிஆர்எச் 3, அர்கா அப்ஜித், அர்கா அஃஹா, அர்கா அனான்யா, அர்கா அலோக், அர்கா சிரஸ்டா, அர்கா வர்தன், அர்கா விசால், அர்கா விகாஸ், அர்கா செவ்ரோப், அர்கா மெகாலி மற்றும் அர்கா அஹ்தி.

தக்காளி சாகுபடி பொதுவாக கோடைப் பருவத்திலும் இல்லாமல், மழைக்காலத்திலும் இல்லாமல் இதுபோல் இடைபட்ட காலத்தில் செய்வது அதிக லாபம் தரும். மேலும் பூச்சிகளின் தாக்குதல், நோய் பாதிப்பில் இருந்து இப்பருவத்தில் எளிதாக காக்க முடியும்

?நாற்றங்கால் முறை?

மண்ணைத் தோண்டி அடித்தாள்களை அகற்ற வேண்டும்.
10 நாள்கள் சிதைவு ஏற்பட நிலத்தை விட்டு விட வேண்டும்.
வடிகால் நன்றாக அமைவதற்கு உயரமான பாத்திகள் அமைக்கவும்.
தொழு உரம் அல்லது கம்போஸ்ட், செம்மண், மணல் ஆகியவற்றை சம அளவில் நன்றாக கலந்து நிலத்தில் இட வேண்டும்.
தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லத்தை 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.
பாஸ்போ பாக்டீரியாவையும் 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.
நாற்று அழுகல் நோயைக் கட்டுப்படுத்த கோதுமைத் தவிடு, மக்கிய மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து இட வேண்டும்.

?விதை அளவு, நேர்த்தி?:

நாட்டு ரக விதைகள் ஒரு ஹெக்டேருக்கு 400 கிராமும், வீரிய ஓட்டு ரக விதையாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 150 கிராமும் இட வேண்டும்.
விதை உற்பத்தி நிறுவனங்களால் ரசாயனப் பொருள்களை கொண்டு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தவிர்க்க வேண்டும்.
விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன், 1 கிலோ விதையை ட்ரைக்கோடெர்மா விரிடியுடன் கலந்து நேர்த்தி செய்யலாம்.
விதைப்பதற்கு முன் 400 கிராம் விதையுடன் 40 கிராம் அசோஸ் பைரில்லத்தை கலக்க வேண்டும்.
வீரிய ஒட்டு ரக விதைகளுக்கு 20 கிராமுக்கு 150 கிராம் என்ற அளவில் கலக்க வேண்டும்.
நாற்றங்கால் பாத்தியில் 10 செ.மீட்டர் இடைவெளி விட்டு வரிசையாக விதைக்க வேண்டும்.

?நடவு வயல்:?

சரியான ஈரப்பதத்தில் வயலை 3 அல்லது 4 முறை உழவு செய்யவேண்டும். 10 நாள் சிதைவு ஏற்படுவதற்காக விட வேண்டும்.
பசுந்தாழ் உரமாக சணப்பை விதைத்து 35 நாட்களுக்குப் பின் மடக்கி உழ வேண்டும்.
கடைசி உழவுக்கு முன் ஹெக்டேருக்கு 25 டன் வீதம் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடலாம்.
நடவுக்கு முன் 20 கிலோ தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லம் 2 கிலோ (1 ஹெக்டேருக்கு) பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ ஆகியவற்றை கலந்து இட வேண்டும்.
60 செ.மீட்டர் இடைவெளியில் பார்கள், உழவு சால்கள் அமைக்க வேண்டும்.
ஒரு ஹெக்டேருக்கு 12 எண்ணிக்கை என்ற அளவில் இனக் கவர்ச்சி பெரோமோன்களை அமைக்க வேண்டும்.
பேசில்லஸ், துரின்ஷியன்சிஸ் 2 கிலோ என்ற அளவில் தெளிக்கவும்.
தாக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்கவேண்டும்.
வேப்பெண்ணெய் 3 சதவீதம், வேப்ப விதை பருப்புச் சாறு 5 சதவீதம் என்ற அளவில் தெளித்து பூச்சி பரவுதலைத் தடுக்க வேண்டும்.
புள்ளியிட்ட அழுகல் வைரஸ் தடுக்க 10 சதவீத சோள இலைச்சாறு, அல்லது ப்ரோசோபிஸ் அல்லது தேங்காய்ச் சாறு 15 நாள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும்.

?அறுவடை:?

முக்கால் பருவ முதிர்ச்சியில் பழங்களை அறுவடை செய்யவும். அதிக அளவு பழுக்க விடக்கூடாது.
இலை மற்றும் செடியின் அனைத்து பாகங்களையும் எடுத்து அவற்றை கம்போஸ்ட் செய்யவேண்டும்.
பொதுவாக 1 ஹெக்டேருக்கு 15 டன் வரை மகசூல் பெற முடியும். மேற்கண்ட இயற்கை வேளாண் முறைகளின்படி தக்காளி சாகுபடி செய்தால் ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன்கள் வரை நிச்சயம் மகசூல் செய்ய முடியும்.
 
T

The Reader

Guest
Itha apdiye try pana poren. Thakkali mattum sariya varalana thakkali yalaye adipen lol
 

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

Varalanna adhaala adipen solreenga ?adhaalaiye adikanum na vandha thaana mudium? appdi vandhutta adika vendithu illiye?? kolapparana?
 
Top